பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Pig

471

Pil


வார்ப்படங்களுக்கு நீர்த்த கந்தக அமிலமும், பித்தளைக்கு நைட்ரிக் அமிலமும் பயன்படுகின்றன.

Picric acid: பிக்ரிக் அமிலம்: (C6H2, (NO2)3, OH): ஒரே உப்பு மூலமுடைய அமிலம். பெனால். சல்போனிக் அமிலத்தை நைட்ரிக் அமிலத்துடன் கலந்து தயாரிக்கப்படுகிறது. இது மஞ்சள் படிக வடிவில் இருக்கும். வெடி பொருள்கள் தயாரிப்பதற்கும், சாயத்தொழிலும் பயன்படுகிறது.

Picture noise: பட ஒலி: ஒளி வாங்கிப் பெட்டிகளில் படங்கள் தாறுமாறாக ஏற்படவும், ஒளிப்புள்ளிகள் உண்டாகவும் செய்யவும் சைகைக் குறுக்கீடுகள்.

Picture signal: படச் சைகை : தொலைக்காட்சியில் ஒளிப்படங்களை உருவாக்கும் மின் துண்டல்கள்.

Picture tube :படக் குழல்: தொலைக்காட்சிப் பெட்டியில், ஒளிக்கற்றைச் செறிவு மாற்றத்தின் மூலம் உருக்காட்சிகளை உண்டாக்கும் எதிர்மின் கதிர்வகைக் குழல்.

Piezoelectricity: (மின். ) அழுத்த மின்விசை: சில படிகங்களின் மீது குறிப்பிட்ட திசைகளில் அழுத்தம் செலுத்துவதன் மூலம் மின்னேற்றம் உண்டாக்குதல்.

Piezometer: அழுத்தமானி: பாய்மங்கள் அல்லது திரவங்கள் மீதான அழுத்தத்தை அளவிடுவதற்கான ஒரு அளவு கருவி.

Pig: (உலோ.) இரும்புப் பாலம்: உலையிலிருந்து எடுக்கப்பட்ட நீள் இரும்புப் பாளம்.

Pig iron: (உலோ.) தேனிரும்பு: உருக்கும் உலையிலிருந்து வாணி கத்திற்கு வரும் வார்ப்பிரும்பு. இது பொதுவாக 45 கி.கி. எடையுள்ள பாளங்களாக இருக்கும்.

Pigment (வேதி; அச்சு) நிறமி: வண்ணப் பொருளுக்கு அல்லது சாயப்பொருளுக்கு நிறம் சேர்க்கச் சேர்க்கப்படும் பொருள்.

Pigskin: பன்றித்தோல்: பதனிட்ட பன்றித்தோல், வீட்டில் வளர்க்கப்படும் பன்றியின் தோலிலிருந்து நெடுநாள் உழைக்கக்கூடிய, தரமான தோலினைப் பதனிட்டு, கை யுறைகள், சிகரெட் பெட்டிகள், கைப்பைகள் முதலியன தயாரிக்கிறார்கள் .

Pigtail: (மின்.) புரியிணைவு மின் கடத்தி: இணை மின்கடத்திகளின் அவிழ்முனைகளை புரியாகத் திரித்துத் தயாரிக்கப்படும் மின் கடத்திகள்.

Pile driver: பதிகால் எந்திரம்: கட்டிட அடிப்படை | தாங்கும் நீண்ட பதிகால்களை அடித்திறக்குவதற்கான எந்திரம்.

Pillar: (க.க.) தூண்: ஒரு கட்டுமானத்தின் ஆதாரக்கால்.