பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 அச்சிட்ட மின்சுற்று வழிகள்‌


யுடைய அடுக்குகள் பயன்படுத்தப் பெறுகின்றன. இவை பல அறைகளில் உள்ள மின் சுற்று வழிகளை இணைக்க உதவுகின்றன. மின்கம்பியமைப்பும் பலகைகளில் உள்ள பகுதிகளை இணைக்கக் கீழ்வரும்முறைகள் பயன்படுத்தப் படுகின்றன. கம்பி முனைகளில் சூட்டிணைத்தல் அணைப்புச் குட்டிணைத்தல் (lap soldering) அல்லது தட்டையான கம்பிமுனைகளைப் பலகைகளில் உள்ள பொருத்துவாய்களில் வெப்ப அழுத்தப் பிணைப்பு முறை யில் (thermo compressing bonding) இணைத்தல் மூலம் இணைப்பு செய்யப்படுகிறது. செய்ய திண்படல மின்சுற்றுவழிகள். திண் படல மின்சுற்றுவழி களில் (படம் 8) தடைகள், கொண்மிகள் (capacitors). தூண்டிகள் ஆகியவை சுடுமண், கண்ணாடி, வெள்ளைக் களிமண் பூசிய உலோகம் போன்ற மின்காப்புப் பொருள் களின் மேல் வீழ்படியச் செய்யப்படுகின்றன. முடக்க வலைகளைப் (Passive networks) பேரளவில் இம்முறை பயன்படுகிறது. இந்த வலைகள் நேரியல்பு மின்சுற்று வழிகளிலும் பெரும் குறிப்பலை இலக்க முறைப் பெட்டகங்களிலும் (digital modules) பயன் படுகின்றன. மாபெரும் மின்துகளியல் கணிப்பொறி களில் இவைபோன்ற எண்ணற்ற சுற்றுவழிகள் பயன் படுகின்றன. இந்தக் கனபடல வடிவமைப்பு 0.001 அங்குல கனங்களில் தயாரிக்கப்படுகின்றது. ஒவ்வொரு சுற்றுவழி உறுப்புக்கும் கீழ்க்கண்ட வரையறைகள் தேவை. 1. குறிப்பிட்ட உறுப்பு அல்லது உறுப்பின் வடிவம் வரையறுக்கப்பட்டு இருக்கவேண்டும். இவை கிட்டத்தட்ட உண்மையான அளவைவிட 5 முதல் 25 மடங்கு பெரியவையாக இருக்கும். 2. குறிப்பிட்ட துல்லியமான ஒளிப்பட முறை அளவு குறைப்பு. இது 0.005 அங்குல அளவு துல்லியத்தில் அமையவேண் டும். 3. இந்த அமைப்பின் ஒளி கல்லச்சு வரைமுறை யில் உருவாக்கப்பட்ட கறைபடியாத நிலைவெள்ளி பதிவுத்தகடு. 4. இந்தப் பதிவுத் தகட்டிற்குள் வீழ்படிய வல்ல தக்க மை. 5.படலத்தைக் காற்றில் உலர்த்தல். 6.உலர்ந்த வெப்ப நிலையில் இவற்றைச் சுடுதல். கலவை தடைவலைகள். தடைப் பிணைப்புகளும் கடத்தியும் உள்ள அமைப்புமே அச்சிட்ட தடை வலையாகும். கரைந்த ஒரு கரிமக் கரைப்பானில் விலையுயர்ந்த உலோக ஆக்சைடுகள் அல்லது விலையுயர்ந்த உலோ கங்கள் உயர்பிசுப்புக் அச்சிடும் மையாகப் பயன்படுகின்றன. மின்காப்புப் பொருளின் மேல் தக்க வடிவமைப்பை அச்சிட்டதும் இந்த மை ஏறத்தாழ 750°C வெப்பநிலையில் சுடப்படுகிறது. பிறகு வெள்ளி அல்லது பொன் கடத்தி வடிவமைப்பு அச்சிடப்பட்டதும் 850*C முதல் 1000°Cஇல் சுடப்படு கிறது. அச்சிட்ட தடைகள் 10 முதல் 106ஓம் மதிப் புடையன. இந்தத் தடைகளின் மதிப்புகள் மையைப் பொறுத்தும் நீள அகல விகிதத்தைப் பொறுத்தும் கனத்தைப் பொறுத்தும் மாறும். மையால் செயல்முறைகளை நன்கு கட்டுப்படுத்தியும் கலைப் பட ஒளிப்படப் பொறுதிகளைக் கட்டுப்படுத்தி

யும் 5 விழுக்காடு பிழை எல்லைக்குள் அடங்கும் தடைகளை அச்சிடலாம். மேலும் கச்சிதமான பொறுதி தேவை என்றால், தடையின் மதிப்புகளை மேற்பரப்பு அல்லது வலை வடிவத்தின் ஓரங்களில் பல மாகக்கட்டுப்படுத்திச் செய்யலாம். இம்முறையில் தடை உறுப்பு தேவையான மதிப்புக்குச் சற்றுக் குறைவாக உள்ளபடி முதலில் செய்யப்படும். பிறகு வடிவமைப்புப் பொறுதி வரம்புகளுக்குள் அடங்குமாறு அதன் மதிப்பு சரி செய்யப்படும்: தடையின் மதிப்புநிலையாக அமைதல் தடை செய்யப் பயன்படுத்தப்படும் மையைப் பொறுத் தது. பொதுவாக உயர் வெப்பநிலையில் பதப்படுத்தப் பட்ட பிசினும் கண்ணாடிப்பிணைப்புகளும் நல்ல நிலைப் புடைய தடைகளைத் தருகின்றன. பீனாலிக் பிணைப் பியைவிட எபாக்சி அல்லது சிலிக்கான் பிணைப்பிகள் மிகவும் நிலைப்புடைய தடைகளைத் தருகின்றன. தடைகளின் நிலைப்பை அவற்றை உயர் வெப்பநிலை யில் பதப்படுத்தி அதிசுமாக்கலாம். 150°F முதல் 600°F வரை உள்ள வெப்பநிலையில் சுடப்பட்ட கரியாலான சுமைகள், பொறுதித் தேவைகள் மிகக் கச்சிதமாக அமைய வேண்டாத பயன்பாடுகளான வானொலி, தொலைக்காட்சிக் கருவிகளைச் செய்யப் பயன்படும் அச்சிட்ட மின்தடைகள் செய்ய அடிக்கடி பயன் படுத்தப்படுகின்றன. கொண்மங்கள் (Capacitance): திண்படலவகை. அச்சிட்ட கொண்மி உறுப்புகளைச் செய்ய முதலில் கடத்தியை ஒத்த பொருளால் ஓர் அடிமின்முனை (base electrode) வீழ்படியச் செய்யப்படுகிறது. அதன் மேல் ஒரு மின்காப்புப் படலம் வீழ்படியச் செய்யப்படு கிறது. பொதுவாக இந்த மின்காப்புப் படலத்திற்குப் பேரியம் டிட்டனேட், டைட்டானியம் டை ஆக்ஸைடு. போரோசிலிக்கேட், கண்ணாடி ஆகியவை 775°C வெப்பநிலையில் சுடப்பட்டுப்பயன்படுத்தப்படுகின்றன. இறுதியாகக் கடத்தியுடன் இணைக்கத்தக்க வகையில் மின் காப்புப்படலத்தின் மேல் எதிர்மின்முனை வீழ் படியச் செய்யப்படுகின்றது. இவ்விதம் செய்யப்படும் கொண்மங்களின் மதிப்புகள் 10 முதல் 108 பிக்கோ ஃபேரடுகள் (picco farads) மதிப்புடையனவாகும். இது பயன்படுத்தப்படும் பரப்பைப் பொறுத்து அமையும். மின்காப்புப் பொருளின் வகையையும் பொறுத்து அமையும். கொண்மங்களை உருவாக்கிப் பெறவும் அளவை மாற்றலாம். இதற்குப் பல சிறிய இணை நிலை மாறு கொண்மங்கள் அடிப்படைக் கொண்மத் துடன் ஒருங்கிணைந்து செய்யப்படுகின்றன. அல்லது கொண்மம் தேவையான அளவுக்கு மேல் செய்யப்படும். அல்லது செய்யப்படும் மதிப்பை 1% அளவுக்கு மாற்றும்படி மாறு கொண்மங்களை இயல்பு கொண் மத்துடன் இணைத்துச் செய்யப்படும். காண்க, கொண்மம் (capacitance). அச்சிட்ட கொண்மங்களை டிட்டானேட்டுகள் போன்ற உயர் மின்காப்பு எண்ணுடைய சுடுமண் படலத்தில் இருபுறங்களிலும் மின்முனைகளைத் திரை