126 அச்சுக்கோத்தல்
அச்சு ஒன்றிய வடங்கள் மிகவும் உதவி புரிகின்றன. விண்வெளித் தொடர்பியல் (space communications) நல்ல முன்னேற்றம் அடைந்த இக்காலத்திலும் இவ்வடங்கள் பெரிதும் பயன்படுகின்றன. காண்க, தொலைபேசி இணைப்பு (telephone service), மூடிய சுற்றுவழித் தொலைக்காட்சி (closed circuit television).
௧. அர. ப.
நூலோதி
1. Albert, A.L.. “Electrical Communication", John Wilcy and Sons, Inc., New York, 1950.
2. Danielson, G. L., and walker, R. S., “Radio and Line Transmission" Iliffe Books Ltd., London, 1963.
3. Kimbark, E.D., “Electrical Transmission of Power and Signals" John Wiley and sons, Inc., New York, 1949.
அச்சுக்கோத்தல்
அச்சிடுவதற்குத் தேவையான செய்திகளை எழுத்துக்கள், எண்கள், குறியீடுகள் ஆகியவற்றைக் கொண்டு அடுக்கும் செயல்முறைக்கு அச்சுக்கோத்தல் (composition of types) என்று பெயர், அச்சுக்கோத்தலைக் கையாலோ எந்திரத்தாலோ செய்யலாம், உலோக எழுத்துகளும் எழுத்துக் கட்டைகளும் (lugs) இதற்குப் பயன்படுகின்றன. ஒளிப்பட முறையால் அல்லது ஒளி மின்துகளியல் முறையால் படிமத்தை மீளாக்கம் செய்தும் அச்சுக்கோக்க வேண்டிய செய்திகளை உருவாக்குவதுண்டு.
கைம்முறை அச்சுக்கோப்பு (hand composing). தனித் தனி அறைகளாலான அச்சறைப் பெட்டிகளில் இருக்கும் வார்ப்பு எழுத்துகளை எடுத்துக் தனித்தனியே கையாண்டு அச்சுக்கோக்கும் கட்டையில் அடுக்கிச் செய்திகளை உருவாக்குவதே கையால் அச்சுக் கோத்தல் எனலாம். 1450இல் பல நூல்களை அச்சடித்த ஐரோப்பியரான ஜான் கூட்டன்பர்கு முதலில் கோக்கும் எழுத்துகளைக் கொண்டு அச்சுக் கோத்ததைப் போலவே பெரும்பாலான அச்சகங்களில் தற்காலத்திலும் கையாலேயே அச்சுக் கோக்கப்படுகின்றது (படம் 1). ஒவ்வோர் அச்செழுத்தும், அச்சு வெளியும் (space) தனித்தனி உலோகத் துண்டுகளால் செய்யப்படுகின்றன. பிறகு அலை பல்வேறு அளவிலும் பாணிகளிலும் கோக்கப்படுகின்றன. கையால் கோக்கும் அச்செழுத்துகள் ஈயம், ஆன்டிமனி, வெள்ளீயம், செம்பு ஆகிய உலோகங்கள் அடங்கிய உலோகக் கலவையை வார்த்துச் செய்யப்படுகின்றன. கையால் அச்சக்கோக்கும் முறை இந்தியாவில் பேரளவில் பயன்பட்டாலும் முன்னேறிய நாடுகளில் குறைந்து வருகிறது.
படம் 1.வணிக விளம்பர எழுத்தறைப் பெட்டி (job case). இதில் எழுத்து மூலங்கள் தெரியும்படி அறைகளில் அடுக்கப்பட்ட எழுத்துகள் கையால் எடுத்து அச்சுக்கோப்புக் கட்டையில் கோக்கப்படுகின்றன. (ரேன்ட் மைக்நல்லி கம்பெனி)
எந்திரமுறை அச்சுக்கோப்பு வளர்ந்த வண்ணம் இருந்தாலும், தலைப்பு வரிகளை அடுக்கவும், சிறப்புக் காட்சி அச்சடிப்பு வேலைகளுக்கும் கையாலேயே அச்சுக்கோப்பு செய்யப்படுகிறது. விளம்பரங்களில் தனித்தன்மை தேவைப்படுவதால் கையால் அச்சுக் கோக்கும் முறை பெரிதும் நீடித்த வண்ணமே இருக்கும். ஒளிக்கல்லச்சு வரைமுறையிலும் குடைவு அச்சுத் தகடுகள் செய்யவும் கை அச்சுக்கோப்பும் எந்திர அச்சுக்கோப்பும் எண்பிப்புப் படிவங்களைச் செய்யக் கலந்தே செய்யப்படுகின்றன.
அச்சு எழுத்தின் அளவைக் குறிப்பிடப் பயன்படும் அலகு, புள்ளி (point) எனப்படுகிறது. ஒரு புள்ளி என்பது 0.01384 அங்குலம் அல்லது ¹⁄₇₂ அங்குலம் ஆகும். அச்சு எழுத்தின் அளவு நீளவாக்கில் அளக்கப்படும். செய்திகளைக் கோக்கும் அச்செழுத்தின் முகங்கள் (faces) 6 புள்ளி முதல் 12 அல்லது 14 புள்ளி வரை கிடைக்கின்றன. வணிக அல்லது விளம்பர அச்செழுத்துகள் 18 முதல் 96 புள்ளி வரை கிடைக்கின்றன. 288 புள்ளி அச்செழுத்துகளும் வணிக விளம்பரத்துக்குப் பயன்படுத்தப்படுவதுண்டு. காண்க, அச்செழுத்துகள்.
எந்திர முறை அச்சுக்கோப்பு (machine composing). கையால் அச்சுக்கோத்தலைத் தவிர்க்கப் பல்வேறு எந்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் முதல் முதலில் உருவாக்கப்பட்ட எந்திரம் ஆங்கிலப் புதுமைப் புனை வாளரான வில்லியம் சர்ச் என்பவரால் 1822இல் கண்டுபிடிக்கப்பட்டது. இது பெரிதும் பெருமதிப்புடன் போற்றிப் பயன்படுத்தப்பட்டது. இந்த எந்திரத்தில் ஒரு தேர்ந்தெடுப்புக் கருவியை முடுக்கியதும் அது செயல்பட்டு ஒவ்வோர் எழுத்தையும் எடுத்து அச்சுக்கோக்கும் கட்டையில் இயக்க முறையில் நகர்த்திவைத்தது. இம்முறை ஏறத்தாழ 50 ஆண்டுகள் வரை பழக்கத்தில் இருந்தது. இதில் அச்சு, அச்சுக்கோப்பு அணி