உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

146 அசிபென்சரிஃபாம்ஸ்‌

படம்‌ 1. (அ) ஸ்டர்ஜன்‌ (ஆ) தலையின்‌ அடிப்புறத்‌ தோற்றம்‌.

பரப்பில்‌ அல்லது வண்டலில்‌ புதைந்து வாழும்‌ பூச்சிகளின்‌ இளவுயிரிகள்‌, புழுக்கள்‌, இறால்கள்‌, மெல்‌லுடலிகள்‌ மற்றும்‌ சிறு மீன்கள்‌ போன்றவைகளை உணவாகக்‌ கொள்கிறது. உண்ணும்‌ போது அடிப்புற வாய்ப்பகுதியைத் துருத்தி அப்படியே வண்டலிலுள்ள விலங்குகளை உறிஞ்சுகிறது. உணவாகப்‌ பயன்படும்‌ விலங்குகளைக்‌ கண்டறிவதற்குத்‌ தொடுவுணர்களையே இது பெரிதும்‌ நம்பியிருக்கிறது. இப்பணியில்‌ வாயினருகே உள்ள நான்கு உணர்‌ நீட்சிகளும்‌, வாய்க்கு வெளிப்‌ புறத்தே அமைந்துள்ள சுவை மொட்டுகளும்‌ உதவுகின்றன, பல ஸ்டர்‌ஜன்கள்‌ கடலிலே வசித்‌தாலும்‌ இனப்பெருக்கத்திற்காக அவை ஆறுகளுக்கு வலசை போகின்றன. ஆறுகளில்‌ சினைகளைத்‌ தூவிய பின்‌ மறுபடியும்‌ கடலுக்கே திரும்பி விடுகின்றன. உ௫மாற்றத்திற்குப்‌ பின்‌ முட்டையிலிருந்து வெளிப்படும்‌ குஞ்சுகளும்‌ கடலுக்குச்‌ செல்கின்றன. சில ஸ்டர்ஜன்‌கள்‌ ஆறுகளிலேயே வாழ்ந்து இனப்பெருக்கம்‌ செய்‌கின்றன.

ஒரு ஸ்டர்ஜன்‌ ஏறத்தாழ மூன்று மில்லியன்‌ முட்டைகளை இனப்பெருக்கத்தின்‌ போது இடுகின்றது. ஸ்டர்‌ஜன்கள்‌ பொருளாதாரச்‌ சிறப்பு வாய்ந்தவை. பெரிதாக வளரும்‌ இம்மீன்களைச்‌ சமைத்துச்‌ சாப்பிடுகின்‌றனர்‌. இனப்பெருக்கத்திற்காக வலசை போகும்‌ பெண்‌ மீனின்‌ சினையைக்‌ கேவியர்‌ எனப்படும்‌ சுவை மிகுந்த உணவுப்‌ பொருளாகச்‌ செய்கின்றனர்‌. இதன்‌ காற்றுப்பை ஜெலாடினும்‌ பசையும்‌ செய்யப்‌ பயன்படுகிறது. இங்கிலாந்து மன்னர்‌ இரண்டாம்‌ எட்வர்ட்‌ தம்‌ நாட்டில்‌ பிடிக்கப்படும்‌ எல்லா ஸ்டர்‌ஜன்களும்‌ அரசரான தம்மையே சாரும்‌ என அறிவித்ததால்‌ இம்மீனை அரச மீன்‌ எனக்‌ குறிப்பிடுகின்றனர்‌. இம்மீன்களின்‌ இனங்‌கள்‌ நிலநடுக்கேட்டுக்கு வடக்கில்‌ மட்டுமே பரவியிருக்‌கின்றன. அசிபென்சரிடே குடும்பம்‌ இரண்டு துணைக்‌ குடும்பங்களாகப்‌ பிரிக்கப்பட்டிருக்கிறது. ஸ்பைரகிள்‌ எனப்படும்‌ திரிந்த முதல்‌ செவுள்‌ துளையுள்ள ஸ்டர்ஜன்‌கள்‌ அசிபெர்சரினே துணைக்‌ குடும்பத்திலும்‌, ஸ்பைரகிள்‌ அற்ற ஸ்டர்ஜன்கள்‌ ஸ்கேரிரிங்கினே துணைக்‌ குடும்பத்திலும்‌ இடம்‌ பெறுகின்றன.

துணைக்‌ குடும்பம்‌ — அசிபென்சரினேட்‌. ஸ்டர்ஜன்‌களிலேயே பெலுகா அல்லது உருசிய ஸ்டர்ஜன்‌ என்று அழைக்கப்படும்‌ உசோ உசோ (Huso huso) மிகப்‌ பெரியது. இது காஸ்பியன்‌ கடலிலும்‌ கருங்கடல்‌ பகுதியிலும்‌ வாழ்கின்றது. ஐந்து மீட்டர்‌ நீளத்திற்குமேல்‌ வளரக்கூடியது.

வட அட்லாண்டிக்‌ பெருங்கடலில்‌ அட்லாண்டிக்‌ ஸ்டர்ஜன்‌ எனப்படும்‌ அசிபென்சர்‌ ஸ்டுரியோவும்‌ (Acipenser sturio), வட அமெரிக்காவின்‌ பசிபிக்‌ கரைப்‌ பகுதியில்‌ வெண்‌ ஸ்டா்‌ஐன்‌ எனப்படும்‌ அசிபென்சர்‌ டிரான்ஸ்மோன்டானசும்‌ (Acipenser transmontanus) வாழ்கின்றன. உருசியாவின்‌ ஆறுகளில்‌ ஒரு மீட்டர்‌ நீளம்‌ வளரும்‌ ஸ்டெர்லட்‌ எனப்படும்‌ அசிபென்சா்‌ருதினஸ்‌ (Acipenser ruthenus) கிடைக்கிறது.

துணைக்‌ குடும்பம்‌ — ஸ்கேபிரிங்கினே. சூடோஸ்கே பிரிங்க்ஸ்‌ (Pseudoscaphirhynchus) எனும்‌ ஸ்டர்‌ஜன்‌