பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 அடர்த்தியும் ஒப்படர்த்தியும் மற்ற அளவுகளுடைய பங்கீட்டுச் சார்பின் நிகழ்ச்சி களை (Probability distribution functions) அடர்த்தி அணியின் மூலைவிட்டததில் தோன்றும்படி செய்ய லாம். 7. தள விளைவற்ற (Unpolarised) எலக்ட்ரான் களின் ஆன்செம்பிளையோ (Ensemble) தற்செய லான தற்சுழற்சி நிலையிலுள்ள எலக்ட்ரான்களின் கூட்டத்தையோ விளக்க அடர்த்தி எண் சாரத்தைப் பயன்படுத்தலாம். எலக்ட்ரான் தற்சுழற்சி மூலை விட்டத்தின் 3 கூறுகளுக்கு அடர்த்திஎண்சாரத்தின் மதிப்பு P-வின் மதிப்பில் பாதிதான். எனவே, P= [8] (22) மேலும், எந்தத் தற்சுழற்சிக் கூறின் சராசரி மதிப்பை யும் கீழ்க்கண்டவாறு அளக்கலாம். [0] = Ty 0p = Ty௪ = 0............. (23) N - என்பதை முறைகளின் (Systems) நிலைகளுடைய வரம்பிற்குள்ளடங்கிய எண்ணிக்கையென்று வைத்துக் கொண்டால், முற்றிலும் தற்செயலான நிலைகளை அதற்கு நீட்டிக்கலாம். நிலைகளின் அடர்த்தி அணி 1 p= 1... N .............. (24) தகுந்த தனி நிலையிலுள்ள முறைகளின் கலவையைத் தற்செயல் ஆன்செம்பிள் என ஏற்றுக்கொண்டால், ஓர் அடர்த்தி அணி பல தனி நிலைப்பகுதிகளாகப் பிரி வதற்கு அக்கலவை சமம் என்று கொள்ளலாம். தற் சுழற்சி எலக்ட்ரான்களின் முறையைக் கவனித்தால், அதன் அடர்த்தி அணி 11 P= 1] ..(25) மேலும், P= P₁+ P₂ .(26) என்று பிரிக்கப்படும். அப்பொழுது, P= [] .(27) 0 P₂ = [] ...(28) 0 1 pu.p2 இவையிரண்டும் முறையே + Ex திசையிலும் +Z திசையிலும் எலக்ட்ரான்களின் அடர்த்தி அணி களாகும். ஆகையால் இவ்விரண்டு திசைகளிலும் சம எண்ணிக்கையுள்ள எலக்ட்ரான்களின் கலவைக்கு இந்த ஆன்செம்பிள் சமம். ஆனால் இவ்வகைப் பிரிவு ஒருமைத் தன்மை வாய்ந்தது (Unique) என்று கூறிவிட முடியாது. கலப்பு நிலைகளில் பல வழிகளில் ஐயப் பாடு ஏற்படுவது உண்டு. எலக்ட்ரான்கள் எதிர்மின் வாயிலிருந்து (Cathode) வெளியாகும்போது அவற்றின் நிலையை விளக்கும் அடர்த்தி அணி, ஒற்றை ஆற்ற லுள்ள (Mono -energetic) தூய நிலைகளாகவோ, அலைப்பெட்டகத் (Wave packet) தனிநிலைகளாகவோ பிரிக்கப்படலாம். இவ்விரு விளக்கங்களும் இயல்பாகச் சமமென்றாலும்,கலப்பு நிலைகளை ஆன்செம்பிள்களாக வகைப்படுத்துவது ஐயத்திற்கிடமானது. த.மு. நூலோதி 1. C. Cohen - Tannoudji et al Quantum Mec- hanics. 1978. 2. L. D. Landau and E. M. Lifshitz, Quantum, Mechanics, 1977. அடர்த்தியும் ஒப்படர்த்தியும் ஒரு பொருளின் அடர்த்தி என்பது ஓரலகு பரும னுள்ள பொருளின் நிலை என வரையறுக்கலாம். நிறை அடர்த்தி = C.G.S. முறையில் அடர்த் பருமன் தியின் அலகு கிராம்/கன செ.மீ., F.P.S முறையில் அடர்த்தியின் அலகு பவுண்டு/கன அடி; M.K.S முறையில் கி.கிராம்/கன. மீட்டர் அடர்த்தியின் அல காகும். இதன் பரிமாணம் (Dimensions) M'L=3T° ஆகும். அடர்த்தி தனிமங்களின் தனிச்சிறப்புப் பண் பாகும். இதனால் ஒரு தனிமம் எவ்வளவு தூய்மை யானது என்பதைக் கண்டறியலாம். உண்மையில் தங்கம் எவ்வளவு தூய்மையானது என்பதை அடர்த் தியைக் கொண்டே மதிப்பிடுகின்றார்கள். தனிமங்கள் மட்டுமின்றி, அனைத்துத் திண்ம, நீர்ம வளிம மின்மப் பொருள்களுக்கும் அடர்த்தி என்பது அவற்றின் பண்பை வரையறுக்கும் ஓர் இயற்பியல் கூறாகும். ஒரு பொருளின் அடர்த்தியை அதன் நிலைக்குப் பொருத்தமாய் உள்ள ஒரு முறையினால் கண்டறியலாம்.