பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
படம் 7. 2/1 இருபடை நெசவு
படம் 7. 2/1 இருபடை நெசவு

 ________________

260 அடிப்படை நெசவமைப்புகள் துளை உடையவை. மினுமினுப்பாளவை. பாலியெஸ்டர் அல்லது. பருத்தியாலானவை. இவை முசுக்கட்டைக் கம்பளி ஃஒப்சேக்கிங் ஒரு திறந்த கூடை நெசவுத் துணியாகும். இது பருத்தி, லினன், மயிரிழை ஆகிய பொருள்களாலானது. இது பெரும் பாலும் கோட்டுகளுக்கும் (Coat) சூட்டுகளுக்கும் பயன் படும். இது முசுக்கட்டைக் கசப்புக் காய்களைப் பொறுக்க உதவும் பைகளிலிருந்து இப்பெயர் பெற்றது. இருபடை நெசவு (Twill Weave). இருபடை நெசவு என்பது ஒரு பாவு அல்லது ஊடை நூல் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஊடை அல்லது பாவு நூலின் மேல் படர்த்து பின்னி நெய்யப்படுவது. இந்த நெசவின்போது, மூலைவிட்டமாக வலது அல்லது இடது புறம் நோக்கி அள்ளுகள் (Interlacings) முன் னேறும். மிதவை (Float) என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நூல்களின் குறுக்காக எதிர்த்திசை யில் முன்னேறும் நூலின் பகுதியாகும். இருபடை நெசவில் புணி எண்ணிக்கை (Harness) களைப் பொறுத்துப் பலவகை வேறுபாடுகள் உள்ளன. மிக எளிய இருபடை நெசவில் குறைந்தது மூன்று புணிகன் உள்ளன. சிக்கலான இருபடை நெசவில் 18-க்கும் மேற்பட்ட புணிகள் பயன்படுத்தப்படுகின்றன. இது சிறப்புவகை இணைப்புகள் பூட்டிய தறியில் நெய்யப் படும். இது இரண்டாம் வகை அடிப்படை நெச வாகும். படம் 7.2/1 இருபடை நெசவு ஊடை இருபடை நெசவு ஓர் 2/1 என்பதைப் போன்ற பகவு (பின்ன) எண்ணால் குறிப்பிடப்படும். ஓர் நூலைப் பாவு நூலில் நெய்யும்போது பின்ன எண் ணின் மேலுள்ள எண் மேலெழும்பும் புணியையும் கீழுள்ள எண் கீழழுந்தும் புணியையும் குறிப்பிடும். இந்த எண்ணை மேல் இரண்டு. மேல் இரண்டு, நே ஒன்று எனப் கீழ் படிக்க வேண்டும், 2/1 இருபடை தெசவு படம் 7-இல் இது காட்டப்பட்டுள்ளது. மேல் தளத்திலுள்ள மிதவை கள் பாவு நூல்களாகும். எனவே இரு பாவு முகப்பு இருபடை நெசவாகும். வ சிறப்பியல்புகள் இருபடை நெசவில் சரியான பக்கம். சரியிலாப் பக்கம் என இரு பக்கங்கள் உண்டு. சரியான பக்கத்தில் பாவு மிதவைகள் அமைந்தால் சரியிலாப் பக்கத்தில் ஊடை மிதவைகள் அமையும். ஒரு பக்கத் தில் இருபடை அள்ளின் (Intercing) கணவாய் வலது புறம் சென்றால் மறுபக்கத்தில் அது இடதுபுறம் செல்லும். இருபடை துணிகளில் மேல் பக்கம் கீழ்ப் பக்கம் என்று எதுவுமில்லை. புணியின் முனையைத் திருப்பி இருபடைக் கணவாயின் திசையைச் சோதித் தால் இதை அறியலாம். மெல்லிய ஆடைகள் இரு படை நெசவால் நெய்யப்படுவதில்லை. ஏனெனில் இந்த நெசவமைப்பே ஓர் அழகான பலவீத டினசன் களை உருவாக்க வல்லது. பட்டும் எடைகுறைந்த இரு படை நெசவுத்துணிகளும் இதற்கு விதிவிலக்கு. சீரான பரப்புடைய துணிகளைவிடச் சீரற்ற பரப்புடைய இரு படை நெசவுத் துணியில் அழுக்குப் படிதல் குறை வாகவே இருக்கும். குறைந்த அள்ளுகன் இருபடை நெசவுத் துணியின் நூலை விடுதலையாக நகரவிடுவ துடன் இயல்பு நெசவுத் துணியைவிடத் துணிக்கும் மென்மையூட்டி, நெகிழ்வையும் மடிதிறனையும் அதி கரிக்கிறது. அள்ளுகள் குறையும்போது நூல்களை நெருக்கி உயர் இழை எண்ணிக்கையுள்ள துணிகளை உருவாக்கலாம் (படம் 8). ஒரே நூல் எண்ணிக்கை யுள்ள ஒரே வகை நூலால் நெய்த இயல்பு நெசவுத் துணியையும் இருபடை நெசவுத் துணியையும் ஒப்பிட லாம். ஒப்பிடும்போது இயல்பு நெசவில் அள்ளுகள் அதிக மாக இருந்தால் அத்துணி வலிவுமிக்கதாகவும் இருக்கும். என்றாலும் இருபடை நெசவில் அலை தெருக்கி மேலும் இழைகளின் எண்ணிக்கையைக் கூட்டித் துணிகளை உறுதியூட்டலாம். இருபடைக் கணவாயைத் தெள்ளத் தெளிவாகத் தோன்றச் செய்ய நீள மிதவைகளைப் பயன்படுத்தலாம். சீர்நூல், தெகிழ்வு நூல், முனுக்கு தூல் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இழை எண்ணிக்கையைக் கூட்டலாம். இருபடைக் கோட்டுக்கு எதிர்த்திசையில் தூலின் முறுக்கை அமைக்கலாம். கபார் டைன் (Cabardine) துணிகளிலுள்ள தெளிந்த கணவாய் கள் அழுத்தத்தினாலும் சிதைவினாலும் மினுமினுப் படைகின்றன. அழுத்தத்தால் ஏற்படும் மினுமினுப்பை நீராவியூட்டி நீக்கலாம். தூய வெண்ணிற வினீகர் (5 விழுக்காடு) அல்லது உப்புத்தாளால் அழுத்தத்தா லும் தேய்வாலும் ஏற்படும் மினுமினுப்பை நீக்கலாம். மயிர் அல்லது மயிரிழையொத்த இழைத் துணிகளில் வலிய