பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துடிப்புகளைத் தடுப்பதற்கு அடுப்பையும் கொதி கலனையும் தயாரிப்பவர்கள் மிகச் சமீபத்தில் கண் டறிந்த சில உண்மைகளைப் பயன்படுத்தி அவற்றை வடிவமைக்கின்றனர்.

இயங்கும் எல்லை அல்லது சுமை எல்லை (Operating range or lond range ) கருத்து குறிப்பாகக் கடந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட அடுப் பிற்கான இயங்கும் எல்லை அல்லது சுமை எல்லை பற்றிய (வியாபார) உரிமைகள் பல கொண்டாடப் பட்டன. சோதனை முடிவுகளின் தவறான பொருள் விளக்கம், அவ்வடுப்பு வேலை செய்யும் விதம் பற்றிய தவறான முன் மதிப்பீட்டை உண்டாக்கியது. மேலும் இத்தகைய முன் மதிப்பீடுகளை உறுதி செய்ய இயலவில்லை. முடிவுகளுடைய தவறான பொருள் விளக்கத்தினால் வழங்குபவர்களுக்கும் மேலும் அதனைப் பயன்படுத்துபவர்களுக்கும் வேறுபாடுகள் தோன்றலாயின. ஏற்றுக் கொள்ளத்தக்க சுடரின் தோற்றம் (Acceptability of flame appearance), குறைந்த சுமையில் தொகுதி இயங்கும் கால அளவு, குறைந்த சுமைச் சோதனைகளில் (Low load test) படி வுப் பொருள்களினால் (Deposits) ஏற்படும் அபாயத் தினை மதிப்பிடுவது ஆகியவற்றில் கருத்து வேறு பாடுகள் உண்டாயின. குறைந்த சுமை இயக்கத்தில் தோன்றும் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதற்குக் கீழ்க்கண்ட காரணங்கள் அடிப்படையாக அமை கின்றன. காற்று வெப்பப்படுத்திகளைக் (Air heaters) கொண்ட பெரிய கொதிகலன்கள் பெரிய அளவில் வெப்பத்தை நிலைநிறுத்தும் தன்மை கொண்டுள்ளன. தொகுதி முழு வதும் முழுச்சுமையில் வெப்பம் நிலைத்தன்மை அடைய 2 மணிகளுக்கும் மேலாக நேரம் ஆகின்றது. இதற்கு நேர் மாறாகச் சுமை இறக்கத்திற்குப் பின் வெப்பநிலை குறைவதற்குக் கணிசமான கால அளவு தேவையா கின்றது. நிலக்கரி எரியவைக்கும் அமைப்புகள் (Coal-burning systems) பிடுமினஸ் (Bituminous) நிலக்கரியும் பழுப்பு நிலக் கரியும் (Lignite) ஐக்கிய அமெரிக்க நாட்டில் ஆண் டிற்கு 500 மில்லியன் டன்கள் செலவிடப்படுகின்றன. இந்த அளவில் 3/4 பங்கு மின்சக்தி ஆக்கத்திற்காக நீராவியை உண்டாக்கப் பயன்படுத்தப்படுகின்றது. நீராவி ஆக்கத்திற்கு அதிக அளவில் தூளாக்கப்பட்ட நிலக்கரி (Pulverized coal) எரிக்கப்படுகின்றது. நிலக்கரி எரியவைக்கும் சாதளத்தின் தேர்வு (Selection of coal-burning equipment) ஒரு குறிப்பிட்ட அமைப்பிற்கான சாதனத்தைத் தேர்ந்தெடுக்கும்போது முதலீட்டைச் சரிக்கட்டும் வகையில் இயங்கும் பண்புகள் (Operating character- istics). இயங்குதிறன் (Efficiency), பயன்படுத்தும் நிலக்

கரியின் வகை ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு மிகவும் சிக்கனமான அமைப்பினை உருவாக்க முயல வேண்டும். எந்த வகையான நிலக்கரியையும் தூளாக் கப்பட்ட வடிவிலோ, சில எரிபொருளூட்டும் கருவியைக் (Stoker) கொண்டோ வெற்றிகரமாக எரிய வைக்க லாம். தூளாக்கப்பட்ட நிலக்கரி எரிப்பு, சுழற்காற்று உலை எரிப்பு (Pulverized-coal and cyclone-furnace firing) முறைகளின் உருவாக்கத்தினால் எரிபொருளூட் டும் கருவிகளினால் உண்டாக்கப்படும் கொள்ளளவுக் கட்டுப்பாடுகள் (Capacity limitations) தகர்க்கப்பட் டன. இந்த மேம்பட்ட முறைகள் (1) கிடைக்கக்கூடிய எந்த நிலக்கரியையும் பயன்படுத்துவதற்கு ஏற்றவை யாகின்றன.(2) சுமை வேறுபாடுகளுக்கு மேம்பட்ட பதில் இயக்கம் (Improved response to load changes) வழங்குபவையாயும் உள்ளன. (3) எரிபொருளூட்டும் கருவி (Stoker)யின் எரிவிப்பைக் காட்டிலும் எரிதலுக் காகக் குறைந்த அதிக அளவிலான காற்றினைச் (Lower excess air for combustion) செலுத்துவதாலும், மேலும் குறைந்த கார்பன் இழப்பின் (Lower carbon loss) காரணமாகவும், உயர் வெப்ப இயங்குதிறன் (Thermal efficiency) கிடைக்கிறது. (4) இயக்கத்திற்காகக் குறைந்த அளவு சக்தியே தேவைப்படுகிறது. மேலும் (5) எண்ணெயுடனும் வாயுவுடனும் இணைந்து நிலக் கரியினை எரிய வைப்பதற்கான மேம்பட்ட திறமையை உண்டாக்குகிறது.

அனுபவத்தில் தெரிவது யாதெனில் எரிபொருளூட் டும் கருவியால் எரிய வைப்பது (Stoker firing) ஒரு மணிக்கு 100,000 பவுண்டுகளுக்கும் குறைவாக நீராவி யை உண்டாக்கும் தொகுதிகளுக்கு மிகவும் சிக்கனமாக இருக்கிறது. இங்கு எரிபொருளூட்டும் சுருவியின் குறைந்த இயங்குதிறம் ஏற்கத்தக்கதாய் உள்ளது. பெரிய நிலையத்தில் இயக்கம் செய்யவைக்கும் செலவில் எரிபொருளுக்கான செலவு பெரும்பகுதியாக அமை கின்றபோது தூளாக்கப்பட்ட நிலக்கரி அல்லது சுழல் காற்று உலை எரியவைப்பைப் பயன்படுத்துவது மிகவும் சிக்கனமுடையதாய் உள்ளது. எரியவைக்கும் முறை யைத் தேர்ந்தெடுப்பதில் கட்டுப்படுத்துவதற்கான தனிச்சிறப்புடைய பண்புகளே கருத்தில் கொள்ளத் தக்கவை. எடுத்துக்காட்டாகத் தொகுதியின் அளவு தூளாக்கப்பட்ட நிலக்கரிக்கோ சுழல் காற்று உலைக் கோ அல்லது எரிபொருளூட்டும் கருவிக்கோ பொருத்த மாக உள்ளபோது மிகவும் பரந்த அளவில் சுமை எல்லையைக் (Wide load range) கொண்ட எரிபொரு ளூட்டும் கருவியினால் எரியவைக்கும் முறை பெரிதும் விரும்பத்தக்கதாய் உள்ளது. சுழற்சி இயல்புடைய உலைகளும் (Rotary kilns), தொழிற்சாலை உலைகளும் (Industrial furnaces) நிலக்கரியால் எரியவைக்கப்படும் போது தூளாக்கப்பட்ட நிலக்கரியை எரிக்கலாம். கொதிகலன் உலைகளில் பயன்படுத்தும் நிலக்கரியின் வகை எரிய வைப்பதற்கான முறையின் தேர்வினைப் பெரிதும் சார்ந்துள்ளது. இதனுடைய முதன்மையான நோக்கங்களாவன:

அடுப்பு 323