உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 அக்குள்‌ சுரப்பிகள்‌

அக்குளின்‌ அமைப்பும்‌ நிணநீர்ச்‌ சுரப்பிகளும்‌

1. தோளிலிருந்து வரும்‌ நிணநீர்‌ நாளங்கள்‌, 2. பக்க அக்குள்‌ நிணநீர்‌க் கணுக்கள்‌, 3. சிறகெலும்பின்‌ கீழுள்ள அக்குள்‌ கணுக்கள்‌, 4. மார்பு (முன்‌) நிணநீர்க்‌ கணுக்கள்‌, 5. பால்கரப்பியின்‌ ஆழ்பகுதியில்‌ உள்ள நிணநீர்‌ நாளங்கள்‌, 6. பக்க மையக்‌ கணுக்களோடு தொடர்பு கொள்ளும்‌ நிணநீர்‌ நாளங்கள்‌, 7. தலைச்‌ சிரை, 8. அக்குள்‌ மையக்‌ கணுக்கள்‌, 9. தோள்‌-மார்பு இடைக்கணுக்கள்‌, 10. காரை எலும்பின்‌ கீழுள்ள கணுக்கள்‌, 11. காரை எலும்பின்‌ மேல்திசுவிலுள்ள நிணநீர்க்‌ கணுக்கள்‌, 12. மார்புத்‌ தசைகளின்‌ இடைக்கணுக்கள்‌, 13. மார்பெலும்பை நோக்கி ஓடும்‌ நிணநீர் நாளங்கள்‌.

சுரப்பிகளை அக்குளின்‌ சிறப்புச்‌ சுரப்பிகளாகக்‌ கருதலாம்‌.

அக்குளின்‌ உள்ளே அமைந்த நிணநீர்ச்‌ சுரப்பிகள்‌

அக்குள்‌ நிணநீர்ச்‌ சுரப்பிகள்‌ மிகவும்‌ சிறப்பானவை. இவைதாம்‌ முலை, மார்புப்‌ பகுதி, தொப்புளுக்கு மேலாக உள்ள வயிற்றின்‌ வெளிப்பகுதி, கைப்பகுதி, கழுத்துப்‌ பகுதி முதலிய உடலின்‌ பல பாகங்களிலிருந்து கொண்டு வரப்படுகின்ற நிணநீரைச்‌ சுத்தம்‌ செய்து வடிகட்டிக்‌ கழுத்து நிணநீர்க்‌ குழாய்களுக்கு அனுப்‌புகின்றன. இந்தப்‌ பகுதிகளில்‌ நோய்‌ கண்டால்‌ அக்குள்‌ நிணநீர்ச்‌ சுரப்பிகள்‌ பருமனாகி வலி கொடுக்கின்றன. இதை 'நெறி சுட்டிக்‌ கொள்ளுதல்‌' (Lymphadenitis) அல்லது 'அண்டைக்‌ கட்டு' என்று சாதாரணமாக அழைக்கிறோம்‌.

அக்குள்‌ நிணநீர்ச்‌ சுரப்பிகள்‌ மற்ற நிணநீர்ச்‌ சுரப்பிகளைப்‌ போல நிணநீரை வடிகட்டி அனுப்பும்‌ நிணநீர்த்‌திசுத்‌ தண்டுகளே. இவை மேலே சொல்லப்பட்ட பகுதிகளிலிருந்து நிணநீரைப்‌ பெற்று அவற்றில்‌ உள்ள நுண்ணுயிரிகளையும்‌, அசுத்தங்களையும்‌ வடிகட்டிச்‌ சுத்தமான நிணநீரை மேலே அனுப்புகின்‌றன.

அக்குள்‌ நிணநீர்ச்‌ சுரப்பிகள்‌ அக்குளில்‌ உள்ள நரம்புகளுடனும்‌, இரத்தக்‌ குழாய்களுடனும்‌ நெருக்கமாக அமைந்திருப்பதால்‌ நோய்‌ நிலைகளில்‌ இவற்றின்‌ முக்கியத்துவம்‌ அதிகமாகிறது. தொட்டும்‌, தடவியும்‌ பார்க்கும்‌ பரீட்சைத்‌ துறையில்‌ சாதாரணமாக அக்குள்‌