உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அக்கெர்மன்‌ திருப்பமைப்பு 17


Second edition W.B. Saunders Company, Philadelphia & London, 1978.

2. Scott Brown's Diseases of the Ear, Nose and Throat, Fourth edition—Butter worths— London, Boston.

அக்கெர்மன்‌ திருப்பமைப்பு

ஒரு தன்னியக்க ஊர்‌தியின்‌ (vehicle) சக்கரங்கள்‌ ஒரே மையமுடைய விட்டங்களில்‌ திரும்பும்படி செய்யும்‌ பிணைப்பு (linkage) அல்லது வேறுபாட்டுப்‌ பல்சக்கர அமைப்பே (differential gear) இது, ஊர்‌தி பக்க வாட்டச்‌ சரிவு (lateral skid) இன்றித் திரும்ப, சக்கர இருசுகளின்‌ (axle) அச்சுக்கோடுகள்‌ நீட்டப்படும்‌ போது ஊர்‌தி திரும்பும் வளைவாரத்தின் (radius of curvature) பொதுமையத்தில்‌ ஒவ்வொரு கணத்திலும்‌ வெட்டிக்‌ கொள்ள வேண்டும்‌.

எல்லாச்‌ சக்கரங்களும்‌ ஒரே பொதுமையத்துடன்‌ திரும்புதல்‌

திருப்பங்களில்‌ வண்டியை ஓட்ட, இந்த அக்கெர்மன்‌ ஓட்டுமுறைக்‌ கோட்பாடு தேவைப்படுகிறது. இந்தத்‌ திருப்புமுறை சக்கர வண்டிகளில்‌ மட்டுமே பொதுவாகப்‌ பயன்படுகிறது. முன்னோக்கி நேராகச்‌ செல்லும்போது முன்‌ சக்கரங்கள்‌ எப்போதும்‌ இணை நிலையில்‌ இருக்கும்‌, ஊர்தி ஒரு வளைவில்‌ செல்லும்‌ போது, உட்புறச்‌ சச்கரம்‌ வெளிப்புறச்‌ சக்கரத்தைவிட வேகமாகத்‌ திரும்ப வேண்டும்‌. ஊர்தி தனது திரும்பாரத்தை ஆரமாகக்‌ கொண்ட வளைவில்‌ திரும்பும்போது திரும்பல்‌ நிகழ்வு, அதீதச் (extreme) சிக்கல்‌ நிலைமையை அடைகிறது. (ஊர்தி மிகக்குறுகிய திருப்பத்‌தில்‌ (shortest turn) திரும்பும்போது ஊர்தியின்‌ முன்‌ வெளிப்புறச்‌ சக்கர இயக்க வழியின்‌ மையம்‌ உருவாக்‌கும்‌ வில்லின்‌ ஆரம்‌ திரும்பாரம்‌ எனப்படும்‌).

நேராகச் செல்லுதல், வலத் திருப்பம், இடத் திருப்பம்

உட்புறம்‌ சாய்ந்த திருப்பும்‌ மடக்குகள்‌ (knuckles) திருப்பங்‌களில்‌ சக்கரங்களை ஒருங்கே ஓட்டுதல்‌

பொதுவாக, அக்கொ்மன்‌ திருப்பமைப்பு மடக்கு கைகளை (knuckle arms) உள்நோக்கியும்‌ பின்னோக்கியும்‌ சாய்ப்பதால்‌ உருவாகும்படி வகுக்கப்படுகிறது. சாய்‌கோணம்‌ சக்கர அடிப்பகுதியையும்‌ (wheel base) ஊர்தியின்‌ இயங்ககலத்தையும்‌ (tread) பொறுத்து அமையும்‌. சக்கர அடிப்பகுதி என்பது முன்பின்‌ சக்கரங்களுக்கு இடையில்‌ அமையும்‌ தொலைவு. இது தரையைத்‌ தொடும்‌ பகுதிகளின்‌ மையங்களுக்கு இடையில்‌ அளக்‌கப்படும்‌, இரட்டைப்‌ பின்‌ இருசுகளுள்ள ஊர்தியில், அளவு எடுக்கப்படும்‌ புள்ளி, இரண்டு இருசுசுளின்‌ நடுப்‌புள்ளியில்‌ அமையும்‌. ஊர்தியின்‌ இயங்ககலம்‌ என்பது பின்‌ அல்லது முன்‌ சக்கரங்களுக்கு இடையே அமையும்‌ தொலைவு. இதுவும்‌ சக்கரங்களின்‌ தரையைத்‌ தொடும்‌ பகுதிகளின்‌ மையங்களுக்கு இடையில்‌ அளக்கப்படும்‌. காண்க, தன்னியக்கத்‌ திருப்பமைப்பு, நான்கு சட்டப்‌ பிணைப்பு (four bar linkage).

நூலோதி

McGraw-Hill Encyclopaedia of Science & Technology, 4th Edition, Vol. 1, McGraw-Hill Book Company, New York, 1977

அக்டோபஸ்‌

காண்க : பேய்க்‌ கணவாய்‌

அக்படாக்‌ தீவு

இத்தீவு கனடாவின்‌ தென்‌ கிழக்கு ஃபிராங்களின்‌ மாவட்டத்திலுள்ள உன்காவா விரிகுடாவில்‌ உள்ளது. இத்தீவின்‌ பரப்பு ஏறத்தாழ 766.3 சதுர கி.மீ.

அக்ரிடின்‌

அக்ரிடின்‌ (acridine) என்பது C₁₈ H₉ N என்ற மூலக்‌கூறு வாய்பாடு சொண்ட கரிமச்‌ சேர்மம்‌. பல சாயப்‌ பொருள்களும்‌ கீழ்‌ எதிர்ப்பு மருந்துகளும்‌ (antiseptics) தயாரிப்பதில்‌ தாய்ப்பொருளாக (parent compound) இது பயன்படுகிறது. அக்ரிடினும்‌ அதனைச்‌ சார்ந்த பெறுதிகளும்‌ பல இன வளையச்‌ (heterocyclic) சோ்மங்‌கள்‌ எனும்‌ கரிமவேதிப்‌ பிரிவினைச்‌ சேர்ந்தவை. 1871 ஆம் ஆண்டில் ஆந்த்ரசீன் (anthracene) என்னும்‌