உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52 அகழ்‌ எந்திரம்‌

“பொதுவாக நடைமுறையில்‌ பயன்படும்‌ எந்திரம்‌ ஓந்தியின்‌ (crane) மாறுபட்ட வடிவமுடையது. அகழ்‌வதற்கு ஏற்றபடி மாற்ற, ஓந்தியில்‌ ஓர்‌ அகழ்வு இணைப்பு பூட்டப்படுகிறது. இந்த அகழ்வு இணைப்‌பின்‌ பெயரில்‌ அகழ்‌ எந்திரம்‌ வழங்கும்‌. காட்டாக, இழுவட வாளி (Dragதine bucket). பூட்டிய அகழ்‌ எத்திரம்‌ இழுவட. எந்திரம்‌ என வழங்கும்‌. பார்க்க ஏற்று ஒந்தி (crane hoist), அகழ்தல்‌ (Excavation).

செந்தர அசுழ்‌ எந்திரங்கள்‌ (Standard excavators): நான்கு வகை இணைப்புகளைப்‌ பயன்படுத்தி ஓந்தியை அகழ்‌ எந்திரமாக்கலாம்‌. இவை இழுவட எந்திரம்‌,இடுிக்குவாளி எந்திரம்‌, திறன்‌ அகழ்வாரி எந்திரம்‌,பின்கொழு எத்திரம்‌ என வழங்குகின்‌றன.

இழுவட எந்திரம்‌ நீண்ட படி அமைப்புள்ள ஓந்திச்‌ சட்டகமுடையது. கிடையாக வெட்டும்‌ வாளிகளும்‌ இரண்டு இழு வடங்களும்‌ கொண்டது. அகழ்‌ பரப்பில்‌ வாளியைச்‌ செருகி இழுவடத்தால்‌ இழுக்கும்‌ போது வாளி தானாகவே நிரப்பிக்‌ கொள்ளும்‌.நிரப்பிய வாளியை இரண்டாம்‌ இழுவடம்‌ எத்திரத்தில்‌ பக்கமாக இழுக்கும்‌. உரிய இடத்துக்கு வாளி வந்ததும்‌ இழுவடத்தைத்‌ தளர்த்த, வாளி மண்ணைக்‌ கீழே கொட்டும்‌. நிலச்சமன்‌ எந்திரமும்‌ (Bulldozer) நிலஞ்செதுக்கு எந்திரங்களும்‌ (Scrapers) பயன்படுத்த இயலாத ஈரமான சேறுஞ்‌ சகதியுமான நீண்ட பள்ளங்‌களில்‌ அகழ இழுவட எந்திரங்கள்‌ பயன்படுகின்றன.

இடுக்குவாளி அல்லது சிப்பிக்கூட்டு எந்திரங்கள்‌ (Clamshell type) ஓந்திச் சட்டகமும்‌ நான்கு நண்டுக்‌ கொடுக்கொத்த இடுக்கு வாளிகளும்‌ கொண்டவை. இடுக்கு வாளியால்‌ நிலம்‌ அகழ வேறு திறனேதும்‌ தேவையில்லை, இந்த இடுக்கு வாளி தனது சொந்த எடையால்‌ மண்ணைக்‌ கவ்விக்‌ தாடையால்‌ அள்ளு கிறது. எனவே, இடுக்கு வாளி எந்திரம்‌ மண்‌, தளர்‌ மணல்‌ ஆகியவற்றை அகழ மட்டுமே ஏற்றது.பிற ஓந்தி வகை எந்திரத்திலும்‌ இது ஆழமாக அமிழ்ந்து பெருமளவு பொருளைக்‌ கையாள்கிறது. நடுத்தரத்‌ தளர்வுப்‌ பொருள்களை அகழ்திறன்‌ ஊட்டிய இடுக்கு வாளி எந்திரங்கள்‌ பயன்படும்‌. காண்சு: அள்ளுவாளி,(Crab bucket).

திறன்‌ அசுழ்லாரி (மண்வெட்டி) எந்திரம்‌ (Power-Shovel) வலிவான சிறிய சட்டகத்தையும்‌ வாளித்‌