உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகழ்‌ எந்திரம்‌ 53


தண்டையும்‌ கொண்டது. (படம்‌ 1, 2 ஐப்‌ பார்க்க). கீலினால்‌ பொருத்தப்பட்ட வாளித்தண்டின்‌ முனையில்‌ தோண்டும்‌ வாளி ஒன்று இருக்கும்‌. வாளியை முன்‌னோக்கித்‌ தூக்குவதால்‌ அது பொருளை நிரப்பிக்‌ கொள்ளும்‌. தனது அடிப்பகுதியைத்‌ திறந்து மண்ணைக்‌ கொட்டிவிடும்‌. திறன்‌ அகழ்வாரி எந்திரம்‌ தான்‌ வலிய பொருளை அகழ்வதில்‌ மிகமிகத்‌ திறமையானது. இது குறுகிய எல்லையில்‌ அமைந்த பெருமளவு பொருள்களை அகழத்‌ தகுந்த எந்திரமாகும்‌. காண்க, அகழ்வாரி எந்திரம்‌, திறன்‌.

படம்‌ 7. அகழ்‌ இணைப்புகள்‌


பின்கொழு எந்திரம் (Backhoe type) என்பது குறுகிய சட்டகமுடையது. இச்சட்டகத்தில்‌ இணைந்த

படம்‌ 8. பள்ளம்‌ அகழும்‌ நீரியல்‌ பின்கொழு எந்திரம்‌


வாளிக்‌ தண்டின்‌ முனையில்‌ தலைகீழாயமைந்த வாளி இருக்கும்‌. கீழாக அழுத்தி இழுப்பதால்‌ வாளி நிரப்பிக்‌ கொள்ளும்‌. வாளியை உயர்த்திக்‌ இறந்த பக்கம்‌ கீழ்ப்புறம்‌ அமையும்படி நிமிர்த்துவதால்‌ கொட்டலாம்‌, இது இழுவட எந்திரம்‌, திறன் அகழ்வாரி எந்திரம்‌ ஆகியவற்றைவிட மிகச்‌ சிறியது. குறைவான அளவு பொருள்களை மட்டுமே அகழ ஏற்றது. பெரும்பாலான பின்கொழு எத்திரங்கள்‌ ஒரு முறைக்கு 1 பருமீட்டர்‌ (கனமீட்டர்‌) மண்ணை மட்டுமே வாரும்‌; இது பள்ளம்‌ வெட்ட ஏற்றது.

சிறப்பு வகை அகழ்‌ எந்திரங்கள்‌. சிறப்‌பு வகை அகழ்‌ எந்திரங்கள்‌ நீரியல்‌ பின்கொழு எந்திரம்‌, முன்முனை சுமை ஏற்றி, பள்ளம்‌ அகழ்‌ எந்திரம்‌ எனப்‌ பொதுவாக மூன்று வகைப்படும்‌. கோபுர அகழ்‌ எந்திரம்‌ என்ற மற்றொரு சிறப்‌பு வகை அகழ்‌ எந்திரம்‌ குளம்‌ வெட்ட உதவுகிறது.

நீரியல்‌ பின்கொழு எந்திரம்‌ (Hydraulic backhoe) என்பது பின்கொழு எந்திரத்தின்‌ மற்றொரு சிறப்‌பமைப்பே, இதில்‌ இழுவடங்களின்‌ வேலையை நீரின்‌ அழுத்த ஆற்றலைப்‌ பயன்படுத்தி மிகவும்‌ திறமையாகவும்‌ சீராகவும்‌ நீரியல்‌ உலக்கை (Hydraulic piston) செய்கிறது. இது உருள்‌ தடம்‌ அல்லது சக்கரங்கள்‌ உடையது. இந்த எத்திரங்கள்‌ பெட்ரோல்‌ அல்லது டீசல்‌ பொறியால்‌ இயக்கப்படும்‌.

முன்முனை சுமை ஏற்றி (Front end loader} உருள்‌ தடம்‌ அல்லது சக்கரங்கள்‌ மேல்‌ அமைந்த ஓர்‌: இழு எந்திரமாகும்‌ (Tractor), இதன்‌ முன்முனையில்‌ இணைக்கப்பட்ட கையில்‌ உள்ள வாளி நீரியலாக இயக்‌கப்படும்‌. இழு எந்திரத்தின்‌ முன்னோக்கிய இயக்கம்‌ வாளியை நிரப்புகிறது. இந்த வாளியை நீரியல்‌ உலக்கையால் (Hydraulic piston) மேலே உயர்த்த அது பின்னே கவிழ்ந்து மண்ணைக்‌ கீழே அல்லது வண்டியில்‌ கொட்டும்‌. இந்த முன்முனை சுமைஏற்றி மண்ணைச்‌ சிறிய தொலைவுக்கு மட்டும்‌ நகா்த்தவும்‌ சிறிய உயரமுள்ள சரக்குந்துகளுக்குச்‌ சுமையை ஏற்றவும்‌ வல்லது. நெடுந்தொலைவுக்கோ பெரும்‌ உயரத்‌திற்கோ இது பயன்படாது, இது 20 பருமீட்டர்‌ கொள்ளளவு உடையது. இது திறன் அகழ்வாரி எந்திரங்களுக்கு மாற்றாக அமையும்படியான திறமையும்‌ வேகமும்‌ சிக்கனமும்‌ உடையது.

பள்ளம்‌ அகழ்‌ எந்திரங்கள்‌ (Trencher) பள்ளம்‌ அகழ்‌தற்காகவே செய்யப்படுகின்றன. இதுவும்‌ ஓர்‌ கருள்‌ தடத்தின்‌ மீது அமைந்த இழு எந்திரமே. இதன்மேல்‌ வாளிகள்‌. பூட்டிய, இயங்கும்‌ சக்கரங்கள்‌ அல்லது தொடர்ச்சியான சங்கிலிகள்‌ இருக்கும்‌. அகழ்‌ அமைப்‌பை இழுவடத்தால்‌ மேலெழுப்பலாம்‌; கீழிறக்கலாம்‌, இழுவடத்துக்குப்‌ பதிலாக நீரியல்‌ உலக்கையையோ Hydraulic ram)( மின்னோடியையோ (Motor) பயன்‌ படுத்தலாம்‌. அகழ் அமைப்பை ஏற்றி இறக்கும்‌ அளவு, வெட்டும்‌ பள்ளத்தின்‌ ஆழத்தைப்‌ பொறுத்து