பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முன்னுரை அண்மைக் காலத்தில் அறிவியலானது பன்மடங்கு வேகமாக முன்னேறி வருகிறது. நிலாவில் மனிதன் சென்று உலாவி வருகிறான். விண்வெளியில் நடக் கவும் பணிபுரியவும் பழகி வருகின்றான். நிலாவிலும் செவ்வாய்க் கோளிலும் சென்று தங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இன்று பல விண்வெளிக் கலங்களும், ஓடங்களும், செயற்கைக் கோள்களும் விண்வெளியில் ஏவிவிடப்படுகின்றன. எதிர்கால விண்வெளிக் கலப் பொறிகளாக காந்தப் பாய்ம மின் எந்திரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன, விண்வெளி ஆராய்ச்சிகள், கணிப்பொறித் துறை வளர்ச்சி, துருவவெளி ஆய்வுகள் ஆழ்கடல் தேட்டங்கள், சூரிய ஆற்றல், எரிபொருள் ஆகியவற்றின் பரவலான பயன்பாடு போன்றவற்றில் மனித அறிவு உயர் எல்லையைத் தொடமுயலும் நிலையை இன்று காண இயலும்.

எளிய பருப்பொருள்களை உருமாற்றி, வேண்டிய வடிவத்தில் படைத்த மனிதன் கரிமப் பொருள்களை எளிய பொருள்களிலிருந்து தொகுப்பு முறையில் உருவாக்குவதில் இந்நூற்றாண்டில் வெற்றி கண்டான், வருங்காலத்தில் உயிர்ப் பொருள்களைச் செயற்கையாகப் படைப்பதிலும் வெற்றிகாணும் பாதைக்கான அடித்தளங்களை உயிர் மூலக்கூற்றியலில் இன்று உருவாக்கத் தொடங்கிவிட்டான். உயிர்த் தொழில்நுட்பம் என்பது அறிவியல் வாழ்க்கையின் எளிய நடைமுறைச் சொல்லாகி வருகிறது. செயற்கை இரத்தம் படைக்க முயற்சி செய்யப்படுகிறது. சிக்கலான தன்னியக்கக் கட்டுப்பாட்டமைப்புகளும் மனித எந்திரங்களும் அன்றாடத் தொழில்துறைக் கருவிகளாகப் பல்கிப் பெருகி வருகின்றன, செயற்கையில் விலைமதிப்பற்ற அருங்கற்கள் படைக்கப்படுகின்றன.

அறிவின் வளர்ச்சி. புற இயக்கம் பொருளின் உள்ளியல்பான இயற்பண்பும், பொருள் நிலவலின் ஒருவகை வடிவமுமாகும். புற இயக்கம் என்பது அண்டத்தில் நிகழும் எல்லா மாற்றங்களையும் நிகழ்வுகளையும் உள்ளடக்குகிறது. இயக்கப் பண்பை ஆய்வு செய்யும் பணி, இயக்கத்தின் மிக எளிய தாழ்நிலை வடிவத்திலிருந்து தொடங்கியது ; பிறகு சிக்கலான உயர் நிலை வடிவங்களை ஆயும் முயற்சி தொடர்ந்தது. எனவே இயற்கை அறிவியல்கள் மிக எளிய இயக்கமான பொருளின் இடப்பெயர்ச்சி, வான் பொருள்களின் இயக்கம் நிலக்கோளப் பொருள்களின் இயக்கம் பற்றி ஆய்வதில் தொடங்கின, பிறகு மூலக்கூற்று இயக்கம் பற்றி ஆய, இயற்பியல், அணு இயக்கம், வேதியியல் ஆகிய அறிவுத் துறைகள் தோன்றி தொடர்ந்து வளரத் தொடங்கின. இந்த உயிரில்லாப் பொருள்களின் இயக்க ஆய்வு முடிந்த பிறகே உயர்நிலை வடிவ இயக்கமான உயிர் நிகழ்வுகளை ஆய வழி ஏற்பட்டது. உயிர் நிகழ்வுகளின் ஆய்வும் இயக்கவியல், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றின் வளர்ச்சியைச் சார்ந்தே அமைந்தன. விலங்குகளின் உடல், எலும்பு, சதை இயக்கங்கள் ஆய்வு வளர்ந்த நிலையில், உயிர் வேதியியல் நிகழ்வுகளைப் பற்றிய அறிவு மிகவும் தொடக்க நிலையிலேயே அமைந்திருந்தது. கரிம வேதியியல் வளர்ந்த பிறகே இந்நிகழ்வுகள் பற்றிய அறிவு விரிவடையத் தொடங்கியது. உயிர் வேதியியலும் மூலக்கூற்று உயிரியலும் வளர்ந்ததும் உயிர் வேதி நிகழ்வுகளைப் பற்றிய அறிவு மேலும் வளர்ந்து பெருகத் தொடங்கியது உயர் உயிர்வேதி இயக்கங்கள் அமைந்த மூளையின் இயக்கம் பற்றிய அறிவு தன்னியக்கக் கட்டுப்பாட்ட மைப்புகளின் கோட்பாடுகள் உருவாகிய பிறகே வளர முற்பட்டது. இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பல துறைகள் இயற்கை பற்றிய மனித அறிவுப் பரப்பை எல்லைக் கோடிட்டுக் காட்ட முயல்கின்றன.

எனவே, உலகோர் தம் அறிவு வளர்ச்சிக்காகப் பல்துறைச் செய்திகளையும் அறிய வேண்டியது இன்றியமையாத வாழ்க்கைத் தேவையாக இன்று ஆகிவிட்டது; இத்தேவையை நிறைவேற்றும், அனைத்துத் துறைச் செய்திகளையும் பிழிந்து நிரல்படக் கொடுக்கும் கருவிநூல் கலைக்களஞ்சியமேயாகும். ஓரளவு படித்த மனிதன் பல்வகைத் துறையிலும் ஆதாரச் சான்றுடை அறிவைப் பெறுவதற்குக் கலைக் களஞ்சியம் துணைபுரிகின்றது. பல்துறை அறிவு பெற நூல்பல தேடி அலைந்து செய்திகளைத் திரட்ட வேண்டும். இதற்குப் பெருமுயற்சியும் காலமும் தேவைப்படும். ஆயின் குறுகிய காலத்தில் எளிதாக அவ்வரிய அறிவைக் கலைக்களஞ்சியம் ஒன்றைப் படித்தாலே பெற்றுவிட முடியும்.

அறிவு வளர்ச்சியைப் படம் பிடிக்கும் மொழியியல் கருவியாகப் கலைக்களஞ்சியம் அமைந்துள்ளது. இது மனிதனின் வியத்தகு ஆற்றலையும் செயல் தன்மை உருவாக்கிய விரிந்த அறிவின் பரப்பையும் கோடிட்டுக் காட்டுவதையே தன் பணியாகக் கொண்டுள்ளது. அறிவியல் வளர்ச்சி, பொருள் வளத்தாலோ