உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகன்ற கழிமுகம்‌ 57


மலேயே முன்பக்கம்‌ தோண்டிய மண்ணைப்‌ பின்பக்கம்‌ கொட்டுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவை ஓரிடத்திலிருந்து மற்றோர்‌ இடத்திற்கு நகர்ந்து செல்லுவதற்கு ஏற்றபடி ரப்பர்‌ சக்கரங்களால்‌ பொருத்தப்பட்டுள்ளன, இன்னும்‌ சில அகழ்வாரி எந்‌திரங்கள்‌ தண்டவாளங்களின்‌ (rails) மீதோ இரும்பு உருள்‌ தடங்களின்‌ (crawlers) மீதோ ஊர்ந்து செல்லுமாறு அமைக்கப்பட்டுள்ளன.

வாளியின்‌ கொள்ளளவுக்கு ஏற்ப இவை சிறிய,நடுத்‌தர,பெரிய அகழ்பொறிகள்‌ என மூன்று வகைகளாகப்‌ பிரிக்கப்படுகன்றன. வாளியின்‌ கொள்ளளவு ½ கன மீட்டரிலிருந்து 19 கனமீட்டர்‌ வரை வேறுபடும்‌. சில மிகப்பேரிய அகழ்வாரி எந்திரங்களின்‌ வாளிகள்‌ 30 கன மீட்டர்‌ வரை கொள்ளளவு உடையன.

4½ கனமீட்டர்‌ கொள்ளளவு உடைய வாளி ஒரு நாளில்‌ எட்டு மணி நேரத்தில்‌ சுமார்‌ 6000 டன்‌ வரை மண்‌ தோண்டும்‌. மேலும்‌ இதன்‌ உற்பத்தித்‌ திறன்‌ அகழ்ந்தெடுக்கப்படும்‌ பொருளின்‌ தன்மைக்கேற்ப மாறுபடும்‌. எளிதில்‌ உடையக்கூடிய மிருதுவான பொருளாயின்‌ அகழ்ந்தெடுக்கப்படும்‌ பொருளின்‌ அளவு கூடும்‌. மிகக்‌ கடினமான பொருளாயின்‌ அகழ்‌ பொருள்‌ அளவு குறையும்‌.

இந்த அகழ்வாரி எந்திரங்கள்‌ பெட்ரோல்‌ அல்லது டீசல்‌ பொறிகள்‌, மின்‌ஓடிகள்‌ ஆகியவற்றில்‌ ஏதாவது ஒன்றால்‌ இயக்கப்படுகின்றன. மூன்று கனமீட்டர்‌ கொள்ளளவுக்குக்குறைவாக உள்ள அகழ்‌ வாரிஎந்திரங்‌கள்‌ டீசல்‌ அல்லது பெட்ரோல்‌ பொறிகளால்‌ இயங்குகின்றன. இதை விடப்‌ பெரியவை டீசல்‌, மின்சாரம்‌ அல்லது மின்ஓடிகளால்‌ இயங்குகின்றன, இத்தகைய மின்ஓடிகள்‌, மற்ற கட்டுப்பாட்டுச்‌ சாதனங்கள்‌ யாவும்‌ எந்திர அறையில்‌ (cabin) வைக்கப்பட்டுள்ளன. எந்திர அறையின்‌ முன்‌ பக்கத்தில்‌ இதனை இயக்கும்‌. ஓட்டுதார்‌ (operator) அறை உண்டு. இப்பொறி வேலை செய்‌வதைப்‌ பார்த்துக்‌ கட்டுப்படுத்துவதற்குத்‌ தக்கபடி ஓட்டுநர்‌ அறையின்‌ முன்பக்கம்‌ கண்ணாடிச்‌ சாளரங்‌கள்‌ பொருத்தப்பட்டுள்ளன.

திறன்‌ முறையால்‌ இயங்கும்‌ அகழ்‌ வாரி எந்திரங்கள்‌ எந்திரமுறை, மின்முறை அல்லது நீரியல்‌ முறைத்திறன்‌ எந்திரத்‌ தொகுதியால்‌ இயக்கப்படுகன்றன. எந்திரமுறை அகழ்வாரி எந்‌திரங்கள்‌ பொறிகளின்‌ திறனைப்‌ (engine power) பயன்படுத்துகின்றன. இவை அடிப்‌பகுதியையும்‌, முகப்பு இணைப்புகளையும்‌ (front attachments) இயக்க,உரசிணைப்பிகள் (clutches), பல்சக்கரங்கள் (gear), அச்சுத் தண்டுகள்‌ (shaft), இழுகலன்கள்‌ (winch drums), வடங்கள் மூலம்‌ பொறியிலிருந்து பெறும்‌ திறனைப்‌ பயன்படுத்துகின்றன. மின்முறையில்‌ இயங்கும்‌ எஃகுடை அகழ்வாரி எந்திரங்கள்‌ அடிப்பகுதியில்‌ நிறுவப்பட்ட மின்னாக்கியிலிருந்து பெறும்‌ மின்‌ திறனை மின்தொடர்‌ மூலம்‌ பல மின்ஓடிகளுக்கு அனுப்பி எல்லா அமைப்புகளையும்‌ இயக்குகின்‌றன.எந்திர முறை அகழ்வாரியில்‌ உள்ள உரசிணைப்பு,பல்சக்கரம்‌, அச்சுத்‌ தண்டு ஆகியன மின்முறை அகழ்‌வாரியில்‌ இல்லை, நீரியல்‌ அகழ்வாரியில்‌ ஓடிகளையும்‌ உலக்கைகளையும்‌ (Motors and Pistons) இயக்க வேண்டிய அழுத்தம்‌ எச்௫கள்‌ (ஈப௱ாறல மூலம்‌ பெறப்படுகிறது. இந்த எக்கிகள்‌ பொறித்திறனால்‌ இயக்கப்படுகின்றன. எந்திர முறையிலேயே நீரியல்‌,மின்னியல்‌ செயல்‌முறைகளும்‌ பயன்படுவதுண்டு.

நிலுச்சமன்‌ எந்இரம்‌ (6ய]11௦280) அகழ்வாரி எந்திரத்‌தின்‌ ஒரு மாறுபட்ட படைப்பாகும்‌. இது ஓரிடத்திலிருந்து மற்றோர்‌. இடத்இற்கு மண்ணைத்‌ தள்ளிச்‌ செல்லப்‌ பயன்படும்‌, ஆனால்‌ எடுந்துச்‌ செல்லப்‌ பயன்‌படாது. இது பெரும்பாலும்‌ சாலைகள்‌ அமைக்கவும்‌, நிலங்களைச்‌ சமன்படுத்தவும்‌ உதவுகிறது. நம்‌ நாட்டில்‌ பாரத மண்வாரி எந்திர ஆலை (Bharath Earth Movers) பெங்களூரில்‌ இவ்வகை எந்திரங்களை உற்பத்தி செய்கிறது, காண்க. அகழ்‌ எந்திரங்கள்‌, ஏற்று ஒந்தி,(crane hoist), பெரும் பொருள் கையாளும்‌ எந்திரங்கள்‌ (bulk handling machines).

செ.வை.சா

நூலோதி

1.கலைக்களஞ்சியம்‌, தொகுதி ஒன்று, தமிழ்‌ வளர்ச்சிக்‌ கழகம்‌, சென்னை, 1954.

2.Megraw-Hill Encyclopedia of Science and Technology, Vol. 5, McGraw-Hill Book Company, New York, 1977.

3.L.C, Urquhart, Civil Engineer’s Handbook. 4th Edition, McGraw-Hill Book Company. New York, 1962.

அகன்ற கழிமுகம்‌

௮.க.1-8