58 அகனேசி வளைவு
அகனேசி வளைவு
இது ஆறு கடலோடு கலக்குமிடமாகும். இங்கு ஆற்று நீர் கொண்டுவரும் வண்டல் தங்கிய கூடல்முகத்தை அடைக்காமல் கடலில் கலந்துவிடும். அகன்ற கழிமுகங்கள் நல்ல துறைமுகப் பட்டினங்கள் அமைவதற்கு ஏற்ற இடங்கள். காண்க, ஆறுகளின் செயல்கள்.
நாலோதி
கலைக்களஞ்சியம், முதல் தொகுதி, தமிழ்வளர்ச்சிக் கழகம், சென்னை, 1934.
அகனேசி வளைவு
அகனேசி என்பவர் பழங்காலக் கணிதவியல் பெண்பால் அறிஞர். அவர் கண்டறிந்த வளைவின் சமன்பாடு X²Y+4a²Y= 8a² ஆகும். இவ்வளைவு அகனேசி வளைவு (Witch of Agnesi) எனப்படும்,
'a' அலகு ஆரம் (Radius) உள்ள OAB என்ற வட்டத்தில் A என்ற புள்ளிக்குத் தொடுகோடு AT வரைந்து புள்ளி O-லில் இருந்து -B-என்ற புள்ளியை இணைக்கும்போது, அக்கோடு தொடுகோடு (Tangent) AT-ஐ, C-என்ற புள்ளியில் வெட்டும். தொடுகோடு AT-க்கு இணையாக B இன் வழியாக வரையும் நேர் கோடு C-இல் இருந்து AT-க்கு செங்குத்தாக வரையும் நேர்கோட்டைப் P என்ற புள்ளியில் வெட்டும். இப்புள்ளியின் இயக்கப்பாதை அகனேசி வளைவு ஆகும். இந்த வளைவு அச்சுக்குச் சமச்சீராக அமையும். Y=0 அல்லது. X அச்சு இவ்வளைவிற்கு அணுகுகோடு (Asymptote) ஆகும்.
அகாசிஸ், அலெக்சாண்டர்
கடலியல், கடல் உயிரியல், சுரங்கப்பொறியியல் ஆகிய துறைகளில் ஆர்வம் கொண்ட இவர் சுவிட்சர்லாந்தின் இயற்கை அறிவியலார். லூயி அகேசிஸ் என்பவரின் மகனாவார். ஹார்வர்ட் (Harvard) பல்கலைக் கழகத்தில் பொறியியல், விலங்கியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றார். இவர் மூள்தோலிகளைப் பற்றிய தமது ஆய்வுகளின் முடிவுகளை முதன் முதலில் 1865ஆம் ஆண்டு 'நட்சத்திர மீனின் கருவியல்' என்ற தலைப்பிலும், அதே ஆண்டு மாற்றாந்தாயையும் கூட்டு எழுத்தாளராகக் கொண்டு இயற்கை வரலாறு பற்றிய 'கடற்கரை ஆய்வுகள்” என்ற தலைப்பிலும், 1828-74 ஆண்டு களில் “முள்தோலிகளின் வகைப்பாடு திருத்தம்" என்ற தலைப்பிலும் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டார்.
இவர் சுப்பீரியர் ஏரிக்கு அருகாமையிலுள்ள ஒரு செப்புச் சுரங்கத்தில் 1866இலிருந்து 1869 வரை கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். பின்பு அச்சுரங்கத் தலைவராக உயர்த்தப்பட்டுத் தனது இறுதிக் காலம் வரை தொடர்ந்து அப்பதவியில் இருந்தார். இச்சுரங்கத்தின் வருமானத்தைப் பெருக்கி உலகிலேயே முதன்மையானதொரு செப்புச் சுரங்கமாக்கினார். நவீன இயந்திரங்கள், பாதுகாப்பு முறைகள், ஓய்வு உபகார ஊதியம், சுரங்க வேலையினருக்கு ஆபத்துக் காலப் பண உதவி, சுற்றுப்புறச் சுகாதாரம் ஆகிய இவ்வரும் பணிகளைச் சிறப்பாக ஆற்றினார். பெருமளவு பணத்தை ஹார்வர்டு காட்சியகத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார். அதே காட்சியகத்தில் 1874 ஆம் ஆண்டு முதல் 1885 ஆம் ஆண்டு வரை அதன் பொறுப்பாளராகப் (Curator) பணிபுரிந்தார். தன் தந்தையின் மறைவிற்குப் பிறகு, அவரால் பெனீகீஸ் தீவில் ஏற்படுத்தப்பட்ட சிறப்பு வாய்ந்த உயிரியல் சோதனை ஆய்வுக் கூடத்தை மூடிவிட்டு, ரோடே தீவிலுள்ள நியூபோர்ட் என்னுமிடத்தில் தனக்குச் சொந்தமான ஓர் உயிரியல் ஆய்வுக் கூடத்தை நிறுவினார், இவர் 1875ஆம் ஆண்டில் தென் அமெரிக்காவின் மேற்குக் கூரையில் ஆய்வுப் பயணம் செய்தபோது கடல் மட்டத்திற்கு மேல் 1875மீ. உயரம் வரை வளர்த்துள்ள முருகைப் பாறைகளைக் கண்டுபிடித்தார். தம் வாழ்நாளில் ஏறத்தாழ 1.60,000 கீ.மீ. அளவு கடலில் பயணம் செய்துள்ளார். இவர் கடல் உயிரிகளைப் பற்றியும் முருகைப் பாறை