அகாந்தோடியன்கள் 61
கிளைமாட்டியஸ் ரெட்டிகுலேட்ஸ்
லிருந்து இந்த விலங்குகள் சி.லூரியன் (Silurian) காலத்தில் தோன்றியிருக்க வேண்டுமென்பது முடிவு. இம்மீன்களின் புதைபடிவங்கள் ஆரம்பகாலத் தாடைகளின் அமைப்பு எவ்வாறு இருந்தன என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. இந்த முற்காலத்திய மீன்களில் பெரிய மேல்தாடையும் (Palatoquadrate) சிறிய பற்களையுடைய கீழ்த்தாடையும் (Mandible) இருந்தன. கத்திரி (Scissors) போன்ற இவ்விரு தாடைகளுக்குப் பின்னால் செவுள் வளைவு (Hyoid arch) இருக்கின்றது. இச்செவுள் வளைவின் மேலெலும்பு {Hyomandibular) மூளையகத்துக்கும் (Cranium) தாடைகளுக்கும் ஒரு தொடர்பாக அமைந்துள்ளது.முந்திய அகாந்தோடியன்௧களின் ஒவ்வொரு செவுள் வளைவின் தொடக்கத்தையும் ஒரு செவுள் உறை (Gill cover) மூடி இருக்கிறது. பிந்திய அகாந்தோடியன்களில் செவுள் உறை பெரிதாக வளர்ந்து செவுள் வளைவுகள்: முழுவதையும் மூடியிருக்க, மற்ற செவுள் உறைகள் மறைந்து விடுகின்றன. அவை சதுரச் செதில்களையும், துடுப்பிகளுக்கு முன்னால் தடித்த முட்களையும், மேல் நீண்ட வால் துடுப்பையும் (Heterocercal caudal fin) கொண்டவை. அகாந்தோடியன்கள் இணைத் துடுப்பு முட்களைக் கொண்ட தொல்லுயிர். (Palaeozoic) மீன்கள். இவை,பெரும்பாலும் 200 மில்லி மீட்டர் நீளமே உள்ள சிறிய மீன்களாக இருந்தாலும் சில இனங்கள் 2 மீட்டர் வரை வளர்ந்திருக்கின்றன.
இவற்றின் உடல் இரு முனைகளிலும் ஒடுங்கிச் சுருட்டு போன்ற வடிவமானது. ஓன்று அல்லது இரண்டு மேல் துடுப்புகளும் ஒரு புழைத்துடுப்பும், ஒரு மேல் நீண்ட வால் துடுப்பும் உடலில் அமைந்திருக்கின்றன. இணைத் துடுப்புகளான தோள் துடுப்பு, இடுப்புத் துடுப்புகளுக்கிடையில் வரிசையாக ஆறு இணைகள் வரை இடை முட்கள் அமைத்திருக்கின்றன, இப்படி அமைந்திருக்கும் முட்கள், உடலின் பக்க மடிப்புகளிலிருந்து தோன்றின என்று துடுப்பு-மடிப்புக் கோட்பாட்டை (Fin-fold theory) உறுதிப்படுத்துகன்றன என்று அறிவியலார் கருதினர். ஆனால் ஆழ்த்த ஆய்வுக்குப்பின் இவை துடுப்பு மடிப்பின் எச்சங்களல்ல (Vesting) என்றும், இவை தனித்துத் தோன்றின என்றும் முடிவு கண்டிருக்கின்றனர். வால் துடுப்பைத் தவிர மற்ற எல்லா துடுப்புகளிலும் ஒரு துடுப்பு முள் அமைந்திருக்கறது, இந்த' முள் கிளைமாஸியஸ் (Climatius) போன்ற மீன்களில் மேலோட்டுத் தோலில் அமைந்திருக்கிறது. ஆனால் அகாந்தோட்ஸ் (Acanthodes) போன்றவற்றில்: இந்த முட்கள் தசை அடுக்குகளுக் கிடையே (Myotomes) பொருந்தியிருக்கின்றன. சுறா மீன்களையொத்த வெளித்தோற்றத்தாலும் துடுப்புகளில் முட்களைக் கொண்டிருந்ததாலும் இவற்றை முட்சுறாக்கள் (Spiny Sharks) என அழைத்தனர். இவற்றின் உடல் முழுவதும் நெருக்கமாகச் செதில்களால் மூடப்பட்டிருக்கிறது. இச்செதில்களில் எலும்பு அடுக்கும், டென்டைன் அடுக்கும் ஒரு மையத்தைச் சுற்றி அடுத்தடுத்து அமைந்திருக்கன்றன. இவற்றில் கூழ்க்குழி (Pulp Cavity) கிடையாது.பொதுவாக இச்செதில்கள் வளர்ச்சியின் ஆரம்ப நிலையிலேயே தோன்றி மீனின் முதிர்ச்சிக்கேற்பப் பெரியவையாகின்றன. உடலின் சில பகுதிகளில் மட்டும் இச்செதில்கள் தோன்றுவது தாமதப்படுகிறது.மீன் நன்கு வளர்ச்சியுற்ற நிலையில் இவை தோன்றுகின்றன.
வெளி மூச்சுத் துளைகள் எப்போதும் சிறியவையாகவும் ஒன்றுடன் ஒன்று நெருங்கியும் அமைநத்திருக்கின்றன. கண்கள் தலையின் முன்புறம் அமைந்திருக்கின்றன. கண்ணைச் சுற்றி ஐந்து எலும்புத் துண்டுகள் சூழ்ந்திருக்கின்றன. அகாத்தோடியன்கள் சூழலை அறிந்து கொள்வதற்கு நாசிகளைவிடக் கண்களையே அதிகம் பயன்படுத்தியிருக்க வேண்டும், தலைப் பகுதி பல சிறிய எலும்புத் துண்டுகளால் மூடப்பட்டிருக்கின்றது. இவற்றில் சில பெரியவையாகவும் விரிந்திருக்கின்றன. முதுகெலும்புத் தண்டுக்குள்ளே நீண்ட துண்டுபடாத முதுகு நாண் இருக்கிறது. பற்கள் எளிமையாகக் கூம்பு வடிவத் திலேலோ, பல பல் முகடுகளைக் கொண்டோ (Multicuspid) அமைந்திருக்