பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 அமில காரக் காட்டிகள்

எத்தில் சல்ஃபேட்டு (கொதிநிலை 208°C) ஆகியவை நச்சுத் தன்மை வாய்ந்த நீர்மங்களாகும். இவை கரிமச் சேர்மங்களில் அல்க்கைல் தொகுதி ஏற்றும் பொருள்களாகப் (alkylating agents) பயன்படு கின்றன.

அல்க்கைல் நைட்ரேட்டுகளுக்கு (RONO,) முக்கிய எடுத்துக்காட்டு எத்தில் நைட்ரேட்டு ஆகும். ஆல்க ஹால் கரைசலிலுள்ள வெள்ளி நைட்ரேட்டுடன் எத்தில் அயோடைடைச் சூடேற்றும்போது இது உண்டாகிறது.

C;HgI + AgN0; → C,H,ONO, + AgI

அல்க்கைல் நைட்ரைட்டுகள் (nitrites) என்பன RONO என்னும் அமைப்புடையவை. எத்தில் நைட் ரைட்டு (கொதிநிலை 17°C). அமைல் நைட்ரைட்டு ஆகியவை இனிய மணமுடைய நீர்மங்களாகும்.

நூலோதி

1. Finar, I.L,, Organic Chemistry, Vol I, Sixth Edition, ELBS, London, 1973.

2. McGraw-Hill Encyclopaedia of Chemistry, Fifth Edition, McGraw-Hill Book Company, New York, 1983.

அமில-காரக் காட்டிகள்

ஒரு கரைசலுடன் சிறிதளவு சேர்க்கும்போது நிறம் மாறுதல் மூலம், அக்கரைசலின் அமில-காரத் தன் மையைக் காட்டும் பொருளுக்குக் காட்டி (indicator) என்று பெயர், காட்டிகள் வீரியம் குறைந்த அமிலங் களாகவோ காரங்களாகவோ இருக்கும். காட்டி, அமிலத்தில் ஓர் அமைப்பையும், காரத்தில் மற்றோர் அமைப்பையும் பெற்றிருக்கும். ஆகையால் அமிலத்தில் ஒரு நிறத்தையும் காரத்தில் மற்றொரு நிறத்தையும் காட்டும்.

பொ துவாக அமிலத் தன்மையுள்ள காட்டியை InH என்ற வாய்பாட்டால் குறிப்பிடலாம். காட்டி H அயனியாகவும், In அயனியாகவும் பிரியும், இந்த வினை சமநிலை அடையும். இதைப் பின்வரும் சமன்பாட்டால் குறிப்பிடலாம்.

InH (I) H + In (II)

இரா. இல.

காட்டி, வீரியம் குறைந்த மின்பகுபொருள் (weak electrolyte) ஆதலால், அயனியாதல் அளவு குறை வாக இருக்கும். அமிலத் தன்மையுள்ள காட்டி, அமி லத்தில் பிரியாத (I) - ஆவது அமைப்பைப் பெற்றி ருக்கும். காரத்தில் எளிதில் பிரிதல் அடைந்து (II) - ஆவது அமைப்பைப் பெற்றிருக்கும். அமைப்பு (I) - க்கும் (II) - க்கும் இடையில் சமநிலை ஏற்படும் பொழுது கிடைக்கும் சமநிலை மாறிலி, காட்டியின் மாறிலி (indicator constant) என்று அழைக்கப்படும்.

Kin

[H] [In] [InH]

KIa

காட்டியின் மாறிலி

(H"]- H+ அயனியின் அடர்வு

[In]

In அயனியின் அடர்வு

[InH] பிரிதல் அடையாத காட்டியின் அடர்வு

ஹைட்ரஜன் அயனி அடர்வின் எதிர்மறை மடக் கையே (negative logarithm) pH ஆகும்.

அது போல் KIn -ஐ PKIn -ஆகக் கீழ்க்கண்ட சமன்பாட்டின்படி மாற்றலாம்.

+

-

PKIa [[n ) = pH log [InH]

காட்டியின் பிரிதல் விகிதம் குறைவாக இருக்கும். ஆதலால் PKIn உம் pH -உம் தோராயமாகச் சம மாக இருக்கும்.

அமிலத் தன்மையுள்ள காட்டிக்கு ஃபினால்ஃப் தலி னையும் (phenolphthalein), காரத் தன்மையுள்ள காட்டிக்கு மெத்தில் ஆரஞ்சையும் (methyl orange) எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ஃபினால்ஃப்த லினை PhH என்ற எளிய குறியீட்டாலும், மெத்தில் ஆரஞ்சை McOH என்ற எளிய குறியீட்டாலும் குறிப்பிடலாம். இந்தக் காட்டிகளின் சமநிலை வினை யைக் கீழ்க்கண்ட சமன்பாட்டால் விளக்கலாம். (Mc, Ph என்பவை மெத்தில், ஃபீனைல் தொகுதி களைக் குறிப்பவை அல்ல).

1