பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமில-காரச் சமன்பாடு

O OH நிறமற்றது OH NaOH OH -ONa 0 இளம் சிவப்பு நிறம் 3. The New Caxton Encyclopaedia,

நாம் எடுத்துக் கொண்ட கரைசலின் pH ஆகும். இங்கும் நாம் காட்டியைத் தேர்ந்தெடுப்பதில் கவ னம் செலுத்த வேண்டும். எடுத்துக் கொண்ட காட் டியின் மாறிலி கரைசலின் pH க்கு ஒன்று அதிகமா கவோ அல்லது ஒன்று குறைவாகவோ இருக்க வேண்டும்.

அமில-காரக் காட்டியின் பட்டியல் அட்டவணை யில் (பக். 9) தரப்பட்டுள்ளது.

அமிலத் தன்மையுள்ள காட்டி வெப்பநிலை மாற்றத்தால் பொதுவாகப் பாதிக்கப்படுவதில்லை. வெப்பநிலை மாறும்பொழுது நீரின் அயனியாதல் மாறிலி {ionisation constant) மாறுதல் அடைவதால் காரத் தன்மையுள்ள காட்டி வெப்பநிலை மாற்றத் தால் சிறிது பாதிக்கப்படுகிறது. காட்டியிலுள்ள குயினனாய்ட் (quinonoid), அசோ (-N=N-} போன்ற நிறந்தாங்கித் தொகுதிகள் (chromophoric groups) நிறம் ஏற்படக் காரணமாயுள்ளன. நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஃபீனால்ஃப்தலின், தாலிக் நீரிலியும் ஃபீனாலும் குறுக்கம் அடைவதால் கிடைக் கின்றது. அமில அமைப்பு நிறமற்றது. காரத்தில் ஊதாச் சிவப்பு நிறக் குயினனாய்ட் அமைப்பைத் தருகிறது. (மேலுள்ள படத்தில் காண்க).

பி. எஸ். இரா.

நூலோதி

1. McGraw-Hill Encyclopaedia of Chemistry, Fifth Edition, McGraw-Hill Book Company, New York, 1983.

2. Glasstone, Samuel., Text Book of Physical Chemistry, Third Edition, Van Nostrand Company. Princeton, 1945.

Vol 10, The Caxton Publishing Company Ltd.. London, 1977.

அமில - காரச் சமன்பாடு

உடல் நல்ல நிலையில் இயங்க உடலில் உள்ள அமிலம், காரம் இவற்றின் அளவுகள் ஒரு குறிப் பிட்ட அளவிற்கு மிகாமல் இருத்தல் அவசியம். உடலில் அமில மிகைத்தலோ (acidosis), அன்றிக் கார மிகையோ (alkalosis) ஏற்படின் தன்னிச்சை யாகவே அமில-காரச் சமன்பாடு (acid-base balance) ஏற்பட்டு உடல் நன்முறையில் இயங்கும்.

இரத்தம் இயல்பான நிலையில் pH மதிப்பு 7.35-லிருந்து 7.45 வரை சற்றே காரமுடையதாய் அமைந்துள்ளது. இந்த pH மதிப்பு 7. 3-க்கு கீழ்ச் செல்லும்போது அமில மிகைத்தலின் அறிகுறிகள் தோன்றிப் பின் pH மதிப்பு 7-ஐ அடையும்போது உடல் வாழ்வதற்கேற்ற சூழலை இழக்கிறது. அதைப் போன்றே pH மதிப்பு 7.5-ஐ விட அதிகரிக்கும் பொழுது கார மிகைத்தலுக்கான அறிகுறிகள் தோன்றி பின் pH மதிப்பு 7. 8-ஐ அடையும் பொழுது இறப்பு நேரிடுகிறது. ஆகவே இரத்தத்தின் pH மதிப்பு அதிக மாறுபாடின்றி இருத்தல் அவசியம்.

இயல்பான நிலையில், வளர்சிதை மாற்றத் தினால் உடலில் அதிகமான அமிலப் பொருள்கள் உண்டாகின்றன. அவற்றுள் முதன்மையானது கார் பானிக் அமிலமாகும் (H,CO,). இதுவல்லாமல்,

10