பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமில-காரச் சமன்பாடு 11

கந்தக அமிலம் (sulphuric Acid), ஃபாஸ்ஃபோரிக் அமிலம் (phosphoric acid), ஹைட்ரோக் குளோரிக் அமிலம் (hydrochloric acid) போன்ற கனிம அமிலங் களும் (inorganic acids), பைருவிக் அமிலம் (pyruvic acid), லேக்டிக் அமிலம் (lactic acid), யூரிக் அமிலம் (uric acid), அசெட்டோ அசெட்டிக் அமிலம் (aceto acetic acid), தீ-ஹைட்ராக்சி பியூட்டிரிக் அமிலம் (தி-hydroxy butyric acid) போன்ற கரிம அமிலங் உண்டாகின்றன. களும் (organic acids) உடலில் நாளொன்றுக்குப் பத்திலிருந்து இருபது மோல்கள் கார்பானிக் அமிலம் உயிரணுக்களின் ஆக்சிஜனேற்றத் தால் (cellular oxidation) உடலில் உண்டாகிறது. உட்கொள்ளும் புரதத்தில் உள்ள கந்தகம் ஆக்சிஜ உட்கொள்ளும் கந்தக அமிலமும், னேற்றத்தால் புரதம், நியுக்ளியோ புரதம் (nucleo protein), ஃபாஸ் ஃபோலைப்பிட்ஸ் (phospholipids) இவற்றில் உள்ள ஃபாஸ்ஃபரஸ் ஆக்சிஜனேற்றத்தால் ஃபாஸ்ஃபாரிக் அமிலமும் உண்டாகின்றன. இயல்பான நிலையில், ஒரு நாளில் 80இலிருந்து 120 மில்லி மோல்கள் (millimoles) வரை கரிய அமிலங்கள் உடலில் உண்டாகின்றன.

உணவில் அமிலப் பொருள்களைக் காட்டிலும் காரப் பொருள்கள் சற்றுக் குறைந்தே உள்ளன. அமிலம், காரம் இவை அவ்வப்பொழுது உண்டாகும் நிலையில் இரத்தத்தில் கலப்பதால், உடல் அதிகப் படியானவற்றை வெளியேற்ற நேரிடுகிறது. இப் பொருள்கள் கழிவுப் பொருள்களை வெளியேற்றும் உறுப்புகளை அடைய உயிரணுக்களின் வெளியே உள்ள நீர்மம் (extraccllular fluid) வழியாகச் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும்பொழுது pH 7.4 என்ற அளவில் பேணப்படும் நீர்மத்தின் H* அயனியின் அடர்த்தி பாதிக்கப்படா திருக்கவேண்டும். அமிலமும் காரமும் இரத்தத்தில் எந்நேரமும் கலந்து கொண்டிருக்கும் வேளையிலும் இரத்தத்தின் pH மதிப்பு 7. 3இலிருந்து 7.5 வரை பேணப்படுகிறது. இதற்குக் கீழ்க்கண்ட முறைகள் துணை புரிகின்றன.

1. இரத்தத் தாங்கல் முறை (buffer system of blood)

2. சுவாச முறை வழி அமில-காரச் சமன்பாடு (respiratory mechanism)

3. சிறுநீரக வழி அமில-காரச் சமன்பாடு (Rena) mechanism)

அ) அதிகப்படியான அமிலத்தையோ, காரத் தையோ வெளியேற்றல்.

ஆ) அம்மோனியா உற்பத்தியும், வெளி யேற்றமும்.

இரத்தத் தாங்கல் முறை. உயிரணுக்களில் அமிலமும், காரமும் உற்பத்தியாகி உடலில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு நுரையீரல், சிறுநீரகம். போன்ற உறுப்புகளுக்கு உயிரணுக்களின் வெளி யேற்ற நீர்மத்தின் மதிப்பு pH மதிப்பு பாதிக்காத அளவில் சென்றடைகின்றன. இது இரத்தத்தின் தாங்கல் முறை (buffer action) ஆற்றலினாலேயே முடிகிறது. ஒவ்வொரு தாங்கல் முறையும் ஒரு பலவீன மான அமிலத்தையும் (HA), அதன் உப்பையும் (BA) கொண்டுள்ளது. தாங்கல் முறையின் H* அயனியின் அடர்த்தி, பகுதி, தொகுதி விகிதத்தின் நிலைத் தன்மையைப் பொறுத்ததே ஆகும்.

H =K (BA) (HA)

சற்றே அமிலத்தையோ, அன்றிக் காரத்தையோ தாங்கல் முறையில் கூட்டுவதோ, நீக்குவதோ அதன் H அயனி அடர்த்தியில் மாற்றத்தை விளைவிக்கும். +

இரத்தத்தில் அடங்கியுள்ள முக்கிய தாங்கல் முறைகள்.

பிளாஸ்மா (Plasma) H,CO3 HCO₂ H.புரதம் |B.புரதம் BH,PO, B}HPO, H. கரிம அமிலம் |B. கரிம அமிலம் இரத்தச் சிவப்பணுக்கள் (Erythrocytes) HỌCO, BHCO; н нь B Hb H HbO! BHbO, BH,PO, B₂HPO H. கரிம அமிலம் B. கரிம அமிலம்

பகுதிகள் அமிலத் தொகுப்புகளாகவும், விகுதிகள் அதன் உறுப்புகளாகவும் அமைந்துள்ளன. பிளாஸ்' மாவில் H புரதம்/Bபுரதம் உண்டு. ஆனால் Hb முறை யில் இல்லை. இரத்தச் சிவப்பணுக்களில் Hb தாங்கல் முறையுள்ளது. தாஙகல் முறைகளுள் பின்வருப வையே முக்கியமானவை.

பிளாஸ்மாவில்

பைகார்பனேட் முறை H,CO, (Bicarbonate System) BHCO,