உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12 அமில-காரச் சமன்பாடு

பிளாஸ்மா புரத முறை H.புரதம்/B. புரதம்

இரத்தச் சிவப்பணுக்களில்

பைக்கார்பனேட் முறை H₂CO₃/BHCO₃
HB முறை HHb/BHb, HHbO₂/BHbO₂

இரத்தத்தில் பிளாஸ்மா இணையின் அடர்த்தி குறைவானதால், அதன் செயற்பாடும் குறைவே. இரத்தத்தில் பிளாஸ்மாவிலும், சிவப்பணுக்களிலும் அதிகம் காணப்படும் பைக்கார்பனேட் தாங்கல் முறை 50 விழுக்காடுகளுக்கு மேல் அமிலங்களைச் சமன் செய்வதால், அதன் பங்கு மிக முக்கியமாகும்.

இரத்தத்தில் அமிலமும், காரமும். இரத்தத்தில் முக்கிய அமிலமான கார்பன் டை ஆக்சைடு (CO₂), H₂CO₃ ஆக கரைசல் வடிவில் அமைந்துள்ளது. இது தண்ணீரில் பிரியும் போது, H+ அயனியை வெளித்தள்ளுகிறது.

H₂CO + CO₂ H₂CO₃ H+ + HCO
2

இரத்தத்தில் உள்ள ஒரே காரம் பைக்கார்பனேட் BHCO₃ ஆகும். இது தண்ணீரில் கீழ்க்கண்டவாறு பிரிகிறது.

NaHCO₃ + H₂O H₂CO₃ + Na+ + OH

இரத்தத்தில் பைக்கார்பனேட்டின் இருப்பும், பிரிவும் ОН அயனியின் அளவை அதிகரித்து, காரத் தன்மையையும் அதிகரிக்கும். காரத் தொகுதிகளான Na+, K+, Ca++, Mg++ போன்றவை உணவின் வழி உடலில் அதிகம் சேரும். இரத்தத்தின் காரத் தன்மை மிகாமலிருக்க இவை அவ்வப்பொழுது வெளியேற்றப்பட வேண்டும்.

கார்பன் டை ஆக்சைடு உண்டாதலும், இரத்தத்தில் அது பரவி நிற்றலும். வளர்சிதை மாற்றத்தின் இறுதிப் பொருளாகக் கார்பன்-டை-ஆக்சைடு, ஓய்வில் ஒரு நிமிடத்திற்கு 200 மி.லி. அளவும், அதிகப்படியான உழைப்பில் 4 லிட்டர் அளவிலும் உற்பத்தியாகி, இரத்தத்தில் கலந்து, பின் நுரையீரலைச் சென்றடைகிறது.

100 மி.லி. தமனி இரத்தத்தில் CO₂, 48 மி.லி. என்ற அளவில் அமைந்துள்ளது. இரத்தத்தின் அமிலத் தன்மை, CO₂ தண்ணீருடன் கலந்து H₂CO₃ ஆக மாறும் அளவைப் பொறுத்ததேயாகும்.

சிறிதளவு CO₂ ஹீமோகுளோபினில் உள்ள தனி NH₂ தொகுதிகளுடன் கலந்து, கார்பமினோ ஹீமோகுளோபினாகிறது.

இரத்தத்தில் கார்பன் டை ஆக்சைடின் அளவு (48 மி.லி./100 மிலி)

அட்டவணை

CO₃ ஏற்ற வடிவம் பிளாஸ்மாவில் 35.6 மி.லி. இரத்தச் சிவப்பணு
க்களில் 12.6 மி.லி.
நீர்க்கரைசலில் H₂CO₃ வடிவில் 16 மி.லி 0.8 மி.லி.
NaHCO₃ வடிவில் 3.4 மி.லி. 9.6 மி.லி.
கார்பமினோ வடிவில் சிறிய அளவில் 2.2.மி.லி. சேர்ம

Hb.NH₂ + CO₃ Hb.NHCOOH.

இதன் அடர்த்தி சிரை இரத்தத்தில் கூடுதலாகக் காணப்படுகிறது.

இரத்தப் பிளாஸ்மா, சிவப்பணுக்களில் கார்பானிக் அமில (H₂CO₃) வடிவில் இருக்கும் CO₂, Hb, தாங்கல் முறை, பிளாஸ்மா புரதத் தாங்கல் முறைகளால் நன்கு தாங்கப்படுகிறது.

ஹீமோகுளோபின் தாங்கல் முறை. ஹீமோ குளோபினுடைய தாங்கல் ஆற்றல் ஹிஸ்ட்டிடினில் (histidine) உள்ள இமிடசோல் தொகுதிகளைப் (imidazole groups) பொறுத்ததே. ஹீமோகுளோபினின் குளோபின் (globin) பகுதியே ஹிஸ்டிடின் ஆகும். pH 7இலிருந்து 7.8 வரை இமிடசோலின் தாங்கல் ஆற்றல் அதன் பிரிகை எண்ணைப் (degree of dissociation) பொறுத்ததே. இமிடசோலின் பிரிகை எண் ஹீமோகுளோபினின் ஆக்சிஜனேற்றத்தைப் பொறுத்ததேயாம். ஆகவே, ஆக்சிஜன் ஏற்றப்பட்ட ஹீமோகுளோபின், அதையிழந்த ஹீமோகுளோபினைவிட அமிலத்தன்மை மிக்கது.

HbO₂ நுரையீரலில் உருவாதல், அது திசுவில் பிரிந்து H Hb ஆக மாறல், பின் CO₂ வழி H+ அயனி நுரையீரல் மூலம் வெளியேறல் ஆகியவை அடுத்துள்ள படத்தில் தெளிவாக்கப்பட்டுள்ளன.

திசுக்களில் O₂ அழுத்தம் குறைந்த நிலையில், HbO₂ பிரிந்து, உயிரணுக்களுக்கு O₂ வை அளித்து, ஆக்சிஜனை இழந்த ஹீமோகுளோபின் ஆகிறது.