பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 அமிலக் குளோரைடுகள்

ஆற்றலின்றி,எதிர்மின் அயனிகளான (cations) Ci அயனி, SO,2- அயனிகளுடன் வினைபுரிந்து அம்மோனியம் உப்பாகின்றது (ammonium salt).

இந்த இயங்கு முறையினால், குறிப்பிட்ட அளவு நிலைகாரங்கள், தனித்துவிடப்பட்டு, பின் இரத்தத் தில் கலக்கின்றன. எடுத்துக்காட்டாக, இரத்தத்தில் HL,NaHCO, யால் சமன்படுத்தப்பட்டு NaL உண்டா கிறது.

HL + NaHCOg → NaL + H,CO,

நுண்குழல்களில் NaL, NH; யுடன் வினைபுரிந்து அம்மோனியம் லாக்ட்டேட்டு (Iactate) ஆகிறது; தனித்துலிடப்பட்ட Na அயனி, இரத்தத்தில் NaHCO, ஆகி, கார இருப்பிற்குத் துணைபுரிகிறது. அம்மோனிய இயங்கு முறையின் ஆற்றலினால் அமில மிகை நிலையில், சிறுநீரகம் அதிக NH, ஐ அமிலத் தொகுதிகளுடன் வினைபுரிவதற்கு. உற்பத்தி செய் காரமிகைவில் இவ்வாறு நடைபெறுவ தில்லை. ஆகவே அமில மிகைவில் சிறுநீரில் அம் மோனியா மிகுந்தும், காரமிகைவில் குறைந்தும் காணப்படும்.

அமில மிகைவும், கார மிகைவும். (Acidosis, Alkalo sis). அமில-காரச் சமன்பாட்டில் குறையேற்படும் பொழுது அமில் மிகைவோ, காரமிகைவோ ஏற்படுகின்றது. இந்நிலை சுவாச இயங்கு முறை யிலோ வளர்சிதை மாற்றத்திலோ குறையேற்படும் பொழுது தோன்றுகின்றது.

சுவாசமுறை அமிலமிகைவு ( respiratory acidosis' இந்நிலையில் இரத்தத்தில் H,CO, யின் அளவு மிகுந்து காணப்படும். இந்நிலை நிமோனியா, எம்பிசிமா (emphysema), ஆஸ்த்மா, இரத்த தேக்க இதயத் தளர்வு (congestive cardiac failiure) போன்ற நோய் நிலைமைகளில் காணப்படும்.

சுவாசமுறை காரமிகைவு (Respiratory Alkalosisg) இந்நிலை இரத்தத்தில் H,CO அளவுகுறையும்பொழுது ஏற்படும். இந்நிலை, அதிகமாக மூச்சுவிடும் நிலை களான (hyper ventilation) மிக உயரமான இடங் கள், ஹிஸ்டீரியா (hysteria), சாலிசைலேட் நச்சு, சில மைய நரம்பு மண்டல நோய்கள் போன்ற நிலைமைகளில் காணப்படும்.

வளர்சிதை மாற்ற அமிலமிகைவு (Metabolic acidosis). இது, பிளாஸ்மா பைக்கார்பனேட்டு குறைந்து, கார்பானிக் அமில அளவு மாறாத நிலையில் காணப்படும். இந்நிலை, கட்டுப்படுத்த இயலாத சர்க்கரைநோய், மிகை கீட்டோன் இரத்தம் (ketosis)

அமில உப்பு நச்சு, அமிலமற்ற வாந்தி போன்ற வற்றின்போது காணப்படும்.

வளர்சிதை மாற்ற காரமிகைவு (Metabolic alkalosis). இது பிளாஸ்மா பைக்கார்பனேட்டு மிகுந்து, கார்பானிக் அமில அளவு மாறாத நிலையில் காண்ப் படுகின்றது. இந்நிலை, அதிகப்படியான காரங் (alkali) உட்கொள்ளல், வயிற்றுப்புண், அதிகப்படியான வாந்தி போன்றவற்றின் போது காணப்படும். களை

நூலோதி

1. Dr. Mrs Ambika Shanmugam, Fundamentals of Bio-Chemistry for Medical Students, Published by the Author, 1982.

2. Kleiner, I.S., Orten, J.M., Human BioChemistry, The C.V. Mosby & Co, 1966.

3. Pritham, G.H.. Anderson's Essentials of BioChemistry. The C.V. Mosby & Co., 1968.

அமிலக் குளோரைடுகள்

ஒரு கரிம அமிலத்தின் கார்பாக்சிலிக் தொகுதியி லுள்ள ஹைட்ராக்சில் தொகுதியைக் குளோரின் (-CI) அணுவால் பதிலீடு செய்து பெறப்படும் சேர் மமே அமிலக் குளோரைடு (acid chloride). இது கரிமச் சேர்மங்களில் அசெட்டைல் தொகுதியையும் (acetyl group), பென்சாயில் தொகுதியையும் (benzoyl group) ஏற்றுவிக்கும் காரணியாகவும், கண்ணீர்ப்புகை குண்டு களில் (tear gas shells) புகைதரவும் பயன்படுகிறது.

O || RCOH அமிலம் 0 RCCI அமிலக் குளோரைடு

R என்பது மெத்தில், எத்தில் போன்ற அல்க்கைல் தொகுதியாகவோ, ஃபினைல் போன்ற அரைல் தொகுதியாகவோ இருக்கலாம்.

அசைல் குளோரைடு (acyl chloride), அராயில் குளோரைடு (aroyl chloride) என்று இரு வகைப் பொருள்கள் உள்ளன. அசைல் குளோரைடுகளில்,

ம.ம.