பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளோரைடு அமீன்களுடனும் ஃபீனால்களுடனும் சோடியம் ஹைட்ராக்சைடு உடனிருக்கப் பென் சாயில் பெறுதிகளைக் கொடுக்கின்றது. இவ் வினைக்கு பென்சாயில் ஏற்றம் (benzoylation) என்று பெயர். பென்சாயில் குளோரைடு நீரினாலோ நீர்த்த சோடியம் ஹைட்ராக்சைடினாலோ மிக மெதுவாகச் சிதைவடைகிறது. எனவே வினையுறு ஹைட்ரஜன் அணுக்களைக் (active hydrogen atoms) கொண்ட கரிமச் சேர்மங்கள், நீர்த்த சோடியம் ஹைட்ராக்சைடு உடனிருக்க பென்சாயில் ஏற்றம் எளிதில் அடைகின்றன. இத்தகைய பென்சாயில் ஏற்ற வினைக்கு ஷாட்டன் பாமன் வினை (Schötten - Baumann reaction) என்று பெயர்.

C.H,COC1 + C.H.NH, + NaOH CūH_CONHC;H; + NaCl + H,O

ஃபீனாலுடன் இது வினைபுரிந்து ஃபீனைல் கொடுக் பென்சோயேட்டைக் (phenyl benzoate) கிறது.

பயன்கள். பென்சாயில் பெறுதிகள் பெரும்பா லும் அதிக உருகுநிலை உடைய திண்மங்கள்; எனவே பென்சாயில் குளோரைடைப் பயன்படுத்தி அமீன்கள், ஆல்கஹால்கள், ஃபீனால்கள் ஆகியவற்றின் பென் சாயில் பெறுதிகளைத் தயாரிக்கவும், இதன் மூலம் அவற்றை வேறுபடுத்திக் கண்டு கொள்ளவும் உதவு கின்றது. வன்முறைக் கூட்டங்களைக் கலைப்பதற்கு உதவும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளில் பென்சாயில் குளோரைடு பயன்படுகிறது. காண்க, அமில ஹாலைடுகள்,

-இரா. இல.

நூலோதி

1. Finar, I. L., Organic Chemistry, Vol I, Sixth Edition, ELBS, London, 1973.

2. McGraw-Hill Encyclopaedia of Chemistry. Fifth Edition, McGraw - Hill Book Company. New York, 1983.

அமிலங்கள்

உலகில் புளிப்புச் சுவை உடைய பொருள்கள் பல உண்டு. இவை அமிலங்கள் (acids) எனப்படும்.

மதுவைப் புளிக்க வைக்கும் காடி (vinegar) எனப் பட்ட நீர்த்த அசெட்டிக் அமிலத்தை மேனாட்டார் பழங்காலத்திலேயே அறிந்திருந்தனர். நம் நாட்டில் கந்தக அமிலம், அக்கினித் திராவகம் எனப்படும் நைட்ரிக் அமிலம் போன்றவற்றை இரசவாதிகளும் (alchemists). சித்தர்களும் பண்டைய நாட்களிலேயே பயன்படுத்தினர்.

வேதியியலார் தங்கள் ஆய்வுக்கும், செய்முறைக் கும் பயன்படுத்தப்படும் வேதிப் பொருள்களுள் வீடுகள், இன்றியமையாதவை. அமிலங்கள் மிக ஆய்வுக் கூடங்கள், தொழிலகங்கள் எல்லாவற்றிலுமே அமிலங்கள் ஏதோ ஒரு வகையில் பயன்படுகின்றன.

கந்தக அமிலம், நைட்ரிக் அமிலம், ஹைட்ரோக் குளோரிக் அமிலம் ஆகியவை வேதியியல் தொழில் களில் மிகப் பெருமளவில் பயனாகின்றன. நாம் குடிக் கும் சோடா நீர் கார்பானிக் அமிலம் கரைந்த நீரே (carbonic acid) ஆகும். ஆரஞ்சுப் பழத்தில் சிட்ரிக் அமிலமும் (citric acid), திராட்சைப் பழத்தில் டார்ட் டாரிக் அமிலமும் (tartaric acid), ஆப்பிள் பழத்தில் மாலிக் அமிலமும் (malic acid), சமையலுக்குப் பயன் படும் புளியம்பழத்தில் டார்ட்டாரிக் அமிலமும் உள் ளன. எறும்பு கடித்தாலும், வண்டு, குளவி கொட்டி னாலும் உடலில் கடுப்பதின் காரணம் அவை நம் உடலினுள் செலுத்தும் ஃபார்மிக் அமிலமே (formic acid). ஃபார்மிக் அமிலம் இறந்த உயிர்ப் பொருள் களைப் பதப்படுத்தவும் தோல் பதனிடுதலில் தோலி லுள்ள சுண்ணாம்புச்சத்தை நீக்குவதற்கும், பருத்தி, கம்பள இழைகளுக்குச் சாயம் ஏற்றுவதற்கும் பயன் படுகிறது. அசெட்டிக் அமிலத்தைப் பயன்படுத்தி மருந்துகள். சாயங்கள் முதலியவை செய்யப்படுகின் றன. தற்போது அசெட்டிக் அமிலம், மிகப் பெருமள வில்பயனாவது அசெட்டேட்டுப் பட்டு எனப்படும் செயற்கைப் பட்டுத் தயாரிப்பில்தான்.

கொழுப்பு அமிலங்கள் (fatty acids) சமையல் எண்ணெய்களிலும், விலங்குகளின் கொழுப்புகளிலும் இவ்லிதக் கொழுப்பு எஸ்ட்டர்களாக உள்ளன. அமிலங்களே சோப்பு தயாரிக்கப் பயன்படுகின்றன.

அரோமாட்டிக் அமிலங்கள் பெரும்பாலும் மருந் துகள் தயாரிக்கப் பயன்படுகின்றன. ஆஸ்ப்பிரின் (aspirin) எனப்படும் வலி குறைப்பி (மாத்திரை) அசெட்டைல்சாலிசைலிக் அமிலமே (acetylsalicyclic acid) ஆகும்.

பழங்காலத்திலிருந்தே வேதியியலார் அமிலங் களை ஆய்வுக்குள்ளாக்கி அவற்றின் பண்புகளைக் கண்டறிய முற்பட்டனர். அவர்களது ஆய்வின் முடி வாகக் பின்வரும் கருத்துக்கள் வெளியாயின.

20 அமிலங்கள்