பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமிலங்கள் 21

அமிலம் புளிப்பானது; அரிக்கும் தன்மை உடை யது; உலோகங்களைக் கரைக்க வல்லது; காரங்க ளோடு வினைபுரிந்து உப்பையும் நீரையும் தருவது. நீல லிட்மஸ் (blue litmus) என்ற தாவரச் சாயத்தைச் சிவப்பு நிறமாக்கும் தன்மை உடையது. இலையே அமிலத்தின் பண்புகள் என்று இராபர்ட் பாயில் (Robert Boyle) என்பவர் 1667ஆம் ஆண்டு அறி லித்தார்.

ஓர் அமிலம் நீரில் கரைந்து கரைசலாகும்போது பிரிகையுற்று ஹைட்ரஜன் அயனிகளை உண்டாக்கு கிறது. இந்த அயனிகளின் செறிவைப் பொறுத்துத் தான் அமிலத்தின் வலிவு அமைகிறது. தற்போதைய அணுக்கட்டமைப்புக் கொள்கையும் இதையே வலியு றுத்துகிறது. அமிலத்திலுள்ள அயனிகளாகும் ஹைட் ரஜன் அணுக்களைப் பொறுத்து அந்த அமிலம் வீரி யம் மிக்க அமிலமா அல்லது வீரியம் குன்றிய அமி லமா என்று கண்டு கொள்ளலாம்.

ஹைட்ரோக்குளோரிக் அமிலம், கந்தக அமிலம், நைட்ரிக் அமிலம் ஆகியவை கனிம அமிலங்கள் (inorganic acids) எனப்படும். இந்த அமிலங்கள் நீர்க் கரைசலில் அனேகமாக முழுவதும் அயனிகளாக மாறு வதால், ஹைட்ரஜன் அயனிகளின் செறிவு (concentra tion) மிகுதியாகிறது. எனவே, கனிம அமிலங்கள் பொதுவாக வீரியம் மிக்கவை. அசெட்டிக் அமிலம், ஆக்சாலிக் அமிலம் (oxalic acid), சிட்ரிக் அமிலம் (citric acid) ஆகியவை கரிம அமிலங்கள். இவை நீர்க் கரைசலில் முழுவதும் அயனிகளாக மாறுவதில்லை. ஓரளவே அயனிகளாகின்றன. இதனால், ஹைட்ரஜன் அயனிகளின் செறிவு குறைகிறது. எனவே, கரிம அமி லங்கள் (organic acids) பொதுவாக வீரீயம் குன்றி யவை.

அமிலங்களின் வலுவைக் காட்டிகளால் (indicators) அறிந்து கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, லிட்மஸ் (litmus), மெத்தில் ஆரஞ்சு (methyl orange) போன்ற தாவரச் சாயங்கள் அமிலங்களின் வலிமைக் கேற்ப நிறமாறுதல் அடைகின்றன.

pH அளவி (pH meter) என்ற மின்கருலியின் உதவியால், அமிலத்தின் வலுவை, ஹைட்ரஜன் அயனிச் செறிவு என்ற ஒரு குறியீட்டினால் (pH) துல்லியமாக அளக்கிறார்கள். இக்கருவியில் 7 என்பது கரைசலின் நடுநிலைத்தன்மையைக் (அதாவது அமில மும் இல்லை, காரமும் இல்லை என்பதைக்) குறிக்கும். ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் ஓர் அமிலக் கரைசலை இந்த மின்கருவியால் ஆய்வு செய்யும்போது கருவியி லுள்ள முள் 7-க்குப் பிறகு இடது பக்கமாக 0-ஐ நோக்கி நகர்ந்து கொண்டே போனால் கரைசலி லுள்ள அமிலத்தின் வலிவு மிகை என்பது பொருள். அளவியின் முள் எந்த எண்ணைக் குறிக்கிறதோ

அந்த எண் அமிலக் கரைசலின் pH ஆகும். காட்டாக, முள் 6-ஐக் காட்டினால் pH = 6 என்று பொருள். முள் 4 -ஐக் காட்டினால் pH=4 என்று பொருள். இந்த pH-4 என்பது அமிலத் தன்மையில் pH-6ஐ விட உயர்ந்துவிட்டது என்று பொருள்படும். இப் படியே கணக்கிட்டு அமிலத் தன்மையைத் தெரிந்து கொள்ளலாம். இதேபோல் pH அளவுமானியின் முள் 7 முதல் 14 வரை நகர்ந்தால் எடுத்துக் கொண்ட காரக் கரைசலின் வீரியத்தை அளந்தறியலாம்.

பயிர்த் தொழிலில் மண் வளத்தைப் பெருக்கு வதில் அமிலத்திலுள்ள ஹைட்ரஜன் அயனிச் செறிவு முக்கியப் பங்கேற்கிறது, மண்ணில் கலந்துள்ள கால்சியம் சத்து, மழை பெய்வதாலோ அடிக்கடி பயிரிடுவதாலோ, குறைவதால் அமில வலிவு மிகுந்து விடுகிறது. மண்ணில் இயற்கைச்சத்தின் விழுக்காடு கூடிவிட்டால் அமில வலிவு விடுகிறது. எனவே, ஹைட்ரஜன் pH அளவியைக் கொண்டு நடவடிக்கை எடுக்க முடிகிறது. (humus) மிகுந்து அயனிச்செறிவு ஆய்ந்தறிந்து, தக்க

நமது இரைப்பையில் உற்பத்தியாகும் இரைப்பை நீரில் ஹைட்ரோக்குளோரிக் அமிலத்தின் pH ஒன்று, இரைப்பையை வந்து அடையும் உணவோடு கலக்கும் போது அமிலத்தின் pH ஆனது 2 ஆகின்றது. இந்த நிலையில்தான் இரைப்பையிலுள்ள பெப்சின் என் னும் நொதி உணவிலுள்ள புரதச் சத்துக்களைச் சிதைத்துச் செரிக்க வைக்கிறது. இரைப்பையின் சுவர்கள் இந்த அமிலத்தால் பாதிக்கப்படுவதில்லை, காரணம், இரைப்பையின் உட்சுவரில் மேலாக அமைந்துள்ள மெல்லிய சவ்வு (membrane) அம்மோ னியா (ammonia) என்ற காரத்தை உற்பத்தி செய்து ஹைட்ரோக்குளோரிக் அமிலத்தோடு வினைபுரிந்து அதை நடுநிலையாக்கி (ncutralize) விடுகிறது.

நமது இரத்தத்தில் ஹைட்ரஜன் அயனியின் செறிவு pH-7.35-க்கும் 7. 45-க்கும் இடையில் இருக்க வேண்டும். இந்த அளவுக்குக் குறையவோ கூடவோ ஆகாமல் பார்த்துக் கொள்வது இன்றி யமையாதது. ஆனால், இயற்கையிலேயே வீரியம் குன்றிய அமிலமும், அதன் உருபும் உற்பத்தியாகி அந்நிலையைச் சமாளிக்கிறது. இந்தநிலை மாறி னால் உயிருக்குக் கேடு விளையும்.

நூலோதி

-ப.இரா.

1. Cotton, Albert F., Wilkinson, Geoffery., Advanced Inorganic Chemistry. Third Edn., Willy Eastern Limited, New Delhi, 1979.