பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமிலத்தாற் பகுப்பு

2. Hawley, Gessner G., The Condensed Chemical Dictionary, Tenth Edo., Galgotia Book Source, Publishers, New Delhi, 1984.

அமிலத்தாற் பகுப்பு

வினைக்கு அமிலத்தால் சிதைவுறும் வேதியியல் அமிலத்தாற் பகுப்பு (acidolysis) அல்லது அசைல் மாற்று வினை (acyl exchange reaction) என்று பெயர். இந்த வினை நீராற் பகுப்பை அல்லது ஆல் கஹாலாற்பகுப்பைப் (alcoholysis) போன்றதாகும். இந்த வினையில் அமிலம் வினைபடு பொருளாகப் கரிம பயன்படுத்தப்படும். கரிமச் சேர்மத்துடன் அமிலத்தை வினை புரியச் செய்யும் பொழுது அமிலத் தொகுதி மாற்றப்படும். இம்மாற்று வினைக்கு அடர் கந்தக அமிலம் (strong sulphuric acid), துத்த நாகக் குளோரைடு, போரான் மூஃபுளுரைடு போன் றவை வினையூக்கிகளாகச் செயல்படுகின்றன. இது ஒரு மீள்வினை (reversible reaction) ஆகும். விளை யில் ஏற்படும் லிளைபொருள்களில் ஒன்றைக் காய்ச்சிவடித்தலாலோ பிற வேதியியல் வினையாலோ நீக்கும்போது இந்த வினைமுற்றுப்பெறும்.

எடுத்துக்காட்டாக ஒரு கரிம அமிலம் அசெட்டிக் நீரிலியுடன் வினைபுரியும்போது கரிம அமில நீரிலி யும், அசெட்டிக் அமிலமும் கிடைக்கும். எஸ்ட்டரும் அசைல் ஹாலைடும் (acyl halide) அமிலச் சிதைவிற்குட் படும் பொழுது மற்றோர் எஸ்ட்டரும், அசைல் ஹாலைடும் கிடைக்கும். இந்த வினை இரு காரவியல் அமிலத்தின் (dibasic acid) நடு நிலை எஸ்ட்டரை அமில எஸ்ட்டராக மாற்றப் பயன்படுகிறது. அசைல் ஹாலைடை அமிலத்திலிருந்து பாஸ்ஃபரஸ் முக் குளோரைடு (PCI,), அல்லது தயோனைல் குளோரை டைப் (SOCI2) பயன்படுத்தித் தயாரிக்கலாம், இந்த வினையில் பயன்படும் பொருள்களை பாஸ்ஃபரஸ் அமிலம் (H,PO;), சல்ஃப்யூரஸ் அமிலம் (H,SO,) ஆகியவற்றின் அசைல்ஹாலைடு என்று எடுத்துக் கொண்டால் இந்த வினையையும் அமிலச் சிதைவு என்று கருதலாம்.

- பி.எஸ்.இரா.

நூலோதி

McGraw-Hill Encyclopaedia of Chemistry, Fifth Edition, McGraw-Hill Book Company, New York, 1983.

அமில நீரிலிகள்

இவை கார்பாக்சிலிக் அமிலங்களின் முக்கியப் பெறுதி களில் ஒன்றாகும். கார்பாக்சில் அமில நீரிலிகளில், இருகார்பாக்சில் அமில நீரிலிகளும் (dicarboxylic acid anhydride) அரோமாட்டிக் அமில நீரிலிகளும் திண்மப்பொருள்கள் மற்ற ஒற்றைக் கார்பாக்சில் அமி லங்களின் (monocarboxylic acids) நீரிலிகள் நீர்மங் களாக உள்ளன. அசெட்டிக் நீரிலி (acetic anhydride) அரிக்கும் இயல்புடைய ஒரு நீர்மம். அசெட்டிக் நீரி லியும், ஒரு சில வளைய நீரிலிகளுமே பொதுவாகப் பயனுள்ள சேர்மங்கள். இருகார்பாக்சில் அமிலங்கள் சூடாக்கப்படும்போது நீரை இழந்து எளிதில் ஐந்து அல்லது ஆறு அணு வளையங்கள் ஏற்படுகின்றன. சக்சினிக் நீரிலிகளில் முக்கியமானவை (succinic), குளுடாரிக் (glutaric), மாலீயிக் (maleic), தாலிக் (phthalic) நீரிலிகள். வளைய

அசெட்டிக் நீரிலி தயாரிப்பு. ஆய்வுக்கூடத்தில் சோடியம் அசெட்டேட்டுடன் அசெட்டைல் குளோ ரைடு சேர்த்து, அக்கலவையைக் காய்ச்சிவடிப்பதால் இது கிடைக்கிறது.

H,CCOCI+ H₂CCOONa (H₂CCO),O

அசெட்டிக் நீரிலி தயாரிக்க மற்றோர் எளிய முறையானது, அசெட்டிக் அமிலத்துடன் சீட்டன் (keten) வினைபுரிதல் ஆகும். (கீட்டன் என்பது பொது வாக அசெட்டிக் அமிலத்தின் உயர்வெப்பநிலைச் சிதைவில் கிடைக்கும் விளைபொருள்)

H₂CCOOH H,O + H,C=C=O கீட்டன் HgC=C=O + H;CCOOH → (H,CCO),O

தொழில் முறையில் அசெட்டிக் நீரிலி தயாரிக்கப் பின்வரும் முறைகள் உள்ளன: நீரற்ற சோடியம் அசெட்டேட்டை (anhydrous sodium acetate) அதில் பாதியளவுடன் வினைபுரியத் தேவையான தயோ னைல் குளோரனடு (SOCI,) அல்லது சல்ஃப்யூரைல் குளோரைடு (SO,CI,) அல்லது பாஸ்ஃபரஸ் ஐங்குளோரைடுடன் (PCI,) வெப்பப்படுத்துவ தால் தயாரிக்கப்படுகிறது. காப்பர் அசெட்டேட்டு, கோபால்ட் அசெட்டேட்டு ஆகியவற்றை வினை யூக்கி களாகக் கொண்டு அசெட்டால்டிஹைடில் ஆக்சிஜன் ஏற்றம் (oxidation) செய்தும் தொழில் முறையில் அசெட்டிக் நீரிலி தயாரிக்கப்படுகிறது.

பொதுப் பண்புகள். அமில நீரிலிகள் நடுநிலை இயல்புடைய நீர்ம அல்லது திண்மப் பொருள்கள், ஈதரில் கரைகின்றன. இவற்றின் கொதிநிலை

22