பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமில மிகைவு

எடுத்துக்காட்டு கார்பானிக் அமிலம் acid), உடலில் உற்பத்தியாகும் அமில அயனிகள் (H ions). இவை மூன்று வழிகளில் வெளியேற்றப்படு கின்றன. அவையாவன, (1) நுரையீரல் வழி (Pulmonary excretion) வெளியேற்றம், (2) சிறுநீரக வழி ( Tenal excretion) வெளியேற்றம், (3) தாங்கிகள் (buffers) வாயிவாகச் சமன்படுத்துதல் வாகும். என்பன

(carbonic

நுரையீரல் வழி வெளியேற்றம். உயிரணுக்களுடைய வளர்சிதை மாற்றங்களினால் உண்டாக்கப்படும் கார்பன் டை ஆக்சைடு ஒரு கரைசலில் அமிலமா கிறது. அதாவது ஒரு கார்பன் டை ஆக்சைடு அயனி யும், இரண்டு H + அயனிகளுமாகச் சேர்ந்து நீரற்ற வினையூக்கியால் ஊக்குவிக்கப்பட்டுக் கார்பானிக் அமிலமாகிறது. நுரையீரலிலிருந்து வெளியேற்றப் படும் ஒவ்வொரு கார்பன் டை ஆக்சைடு மூலக்கூறும் இழப்புக்குச் சம (molecule) ஒரு H அயனியின்

மாகும்.

+ சிறுநீரகவழி வெளியேற்றம். H அயனியானது அம் மோனியா, பாஸ்ஃபேட்டு, கார்பானிக் அமிலமாக உயிரணு சூழ் நீரின் pH க்குத் தக்கவாறு நிறுத்தவோ, வெளியேற்றவோ படுகிறது. உள்

தாங்கிகள். ஒரு வலுக்குறைந்த அமிலமும் (weak acid) வீரியக் காரத்துடன் சேர்ந்த அதன் உப்பும் கலந்த கலவையின் கரைசலே தாங்கி எனப்படும். தாங்கல் கரைசல் ஒன்றுடன் புதிதாக ஹைட்ரஜன் அயனிகளைச் சேர்த்தால் இப்புதிய கலவையில் ஹைட் ரஜன் அயனியின் அளவு மாறாமல் தாங்கல் கரைசல் செயல்படும். இந்தத் தாங்கல் கரைசலிலிருந்து ஹைட் ரஜன் அயனி வெளியேற்றப்படுமானால் இப்பொழு தும் ஹைட்ரஜன் அயனியின் செறிவு மாறாமல் ஹைட்ரஜன் அயனியைப் புதிதாக உண்டாக்கும். இதனால்தான் இதற்குத் தாங்கிக் கரைசல் என்று பெயர்.

பைக்கார்பனேட்டு, கார்பானிக்அமிலம் இவற்றின் கூட்டு ஒரு மிக முக்கியமான உடற் செயலியல் தாங்கியாகும் (physiological buffer); இது அளவிலும் அதிகமானது.

எடுத்துக்காட்டுகள்.

1. (HHB) + (HB) + (cations)

2. H,PO, + HPO. + H,O+

கார்பானிக் அமிலம், H அயனியாகவும்

பைக்கார்பனேட் அயனி (HCO,) ஆகவும் பிரிகிறது. அது ஹீமோகுளோபினாலும் (haemoglobin), இரத்த நீர்ப் புரதத்தினாலும் (plasma proteins) சமனப் படுத்தப்படுகிறது. இது திசுக்களிலிருந்து நுரையீரல் களுக்குப் போகும் கார்பானிக் அமிலத்தினால் pH மாற்றங்களைக் குறைக்கிறது.

சமன் அமிலமிகைவு என்பது உடல் இயக்கத்தால் ஒவ் வொரு நாளும் ஏற்படுகின்ற அமிலகாரச் பாட்டில் (acid base balance) ஏற்படக்கூடிய ஒரு சாதாரண நிகழ்ச்சி அல்லது மாறுதலாகும். அமில மிகைவு கீழ்க்கண்ட வகைகளில் நேரலாம்

1) சுவாசித்தலின் அமிலமிகைவு (respiratory acidosis)

2) வளர்சிதை மாற்ற அமிலமிகைவு (metabolic acidosis)

3) லாக்ட்டிக் அமிலமிகைவு (1actic acidosis)

சுவாசித்தலின் அமிலமிகைவு. சுவாசித்தலின் அமிலமிகைவு என்பது ஒரு நோய்க்குறியாகும். இது மூச்சுவிடும் திறமையின்மையால் (respiratory failure) ஏற்படலாம். பலவித நுரையீரல் நோய்களினாலோ காற்று மாற்றப்பணியைப் பாதிக்கின்ற மருந்துகள் அல்லது நஞ்சுகளாலோ (respiratory depressants ) தலையில் படும் காயத்தினாலோ (head injury) ஏற் படலாம். மேலும் இளம்பிள்ளை வாதம் (polio mycilitis), பல நரம்பழற்சி (polyneuritis) இவைகளா லும் ஏற்படலாம்.

வளர்சிதைமாற்ற அமிலமிகைவை உண்டுபண்ணக் கூடிய நோய் நிலைகள்

(1) இனிப்பு நீரிழிவு (diabetes mellitus) அ) லாக்ட்டிக் அமிலமிகைவு ஆ) கீட்டோ அமிலமிகைவு

(2) பேதி - அதன் காரணமாக பைக் கார்ப னேட்டு இழப்பு.

(3) சிறுநீரகச் செயல் தளர்வு (renal failure). இதனால் அமில அயனிகள் வெளியேற்றப்படாமல் H அயனிகளின் மட்டம் இரத்தத்தில் உயர்ந்து அமிலமிகைவு ஏற்படும்.

(4) இதய நிறுத்தம் (cardiac arrest)

வளர்சிதை அமிலமிகைவால் ஏற்படுகின்ற உயிர்.

24