பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமிலமும் காரமும்

வேதியியல் மாற்றங்கள் முகுளத்திலுள்ள (medulla) உயிர்ப்பு மையங்களை (respiratory centres) முடுக்கி விரைவாக்கிக் கார்பன் டை. மூச்சுவிடுதலை நுரையீரல் வழி வெளியேற்றி, pH ஆக்சைடை மட்டத்தை உயர்த்தி ஈடு செய்ய முயலும். அப்போது நோயாளி விரைவாகவும் ஆழ்ந்தும் மூச்சுவிடுவார். இதை அமிலமிகைவு மூச்சு விடுதல் (acidotic breathing) என்பர்.

லாக்ட்டிக் அமிலமிகைவு. உடற்செயலியல் நிலைமைகளில் ஊன்நீரின் (serum) லாக்ட்டிக் அமில அளவு 0.4 முதல் 1.3 மில்லிமோல்/லிட்டர் ஆகும். உடற்பயிற்சியினால் லாக்ட்டிக் அமில நிலை சிறிது உயரும். ஆனால் கீழ்க்கண்ட உடல் கோளாறுகளால் லாக்ட்டிக் அமில மட்டம் மிக உயரும்.

அ) இதயவழி அதிர்ச்சி (cardiogenic shock)

ஆ) இரத்த இழப்பு அதிர்ச்சி (haemorrhagic shock)

இ) நீரிழப்பு (dehydration)

மேற்கண்ட காரணங்களால் இரத்த ஓட்டம் குறைந்து திசுக்கள் ஆக்சிஜன் கிடைக்காத நிலையில் காற்றற்ற கிளைக்கோஜன் சிதைவு வழியே (anaerobic glycolysis) எரி பொருளை உற்பத்தி செய்து அதனால் உண்டான விளை பொருள்கள் (end products) (லாக்ட்டேட்டு,பைரூவேட்டு போன்றவை) இரத்தத்

+ தில் கலந்து H அயனி மட்டம் உயர்ந்து pH தாழ்ந்து விடும். இதுவே லாக்ட்டிக் அமிலமிகைவாகும்.

இதே நிலை சர்க்கரை நோயைக் குறைக்கும் சில மருந்துகளான ஃபென்ஃபார்மின் (phenformin) போன்றவற்றை நீண்டகாலம் உண்பதாலும் உண்டா கலாம்.

அமிலமிகைவைப் போலவே காரமிகைவும் (alkalosis) ஏற்படக்கூடும்.

சுவாசித்தலில் காரமிகைவு ( respiratory alkalosis). லேகமாகமூச்சுவிடுவதால் கார்பானிக் அமிலம் அதிக மாக வெளியேறிக் காரமிகைவு ஏற்படலாம்.

வளர்சிதை மாற்றக் காரமிகைவு. வாந்தி, குழாய் மூலம் இரைப்பை நீரை உறிஞ்சி எடுத்தல் ஆகியவற் றினாலும் அமில சமன சிகிச்சை (antacid therapy), இரத்தம் ஏற்றுதல், பொட்டாசியக் குறைவு, ஆகிய வற்றாலும் காரமிகைவு ஏற்படலாம்.

சுவாசித்தலில் அமிலமிகைவைச் சமன்படுத்தும் முறை. இடையிடையே மிக அழுத்தக் காற்று மாற்றி (intermittant positive pressure respirator) (IPPR) (இடைவிட்ட நிறையழுத்த உயிர்ப்பி) மூலம் ஆக்சிஜனை நுரையீரல்களில் செலுத்திக் குணப்படுத் தலாம்.

வளர்சிதை மாற்ற லாக்ட்டிக் அமிலமிகைவு. இவை இரண்டையும் மூல காரணமாக நோய்களைக் குணப் படுத்துவதனாலும், சிரை வழி 7.5 விழுக்காடு அல்லது 8.4 விழுக்காடு சோடா பைக்கார்பனேட்டு செலுத்து வதனாலும் குணப்படுத்தலாம்.

அமிலமிகைவைச் சரியான நேரத்தில், சரியான முறையில் சீர்செய்யாவிடில் இதயத் துடிப்புக்கான மின் ஓட்டங்கள் மாறி அல்லது தடைப்பட்டு இதயம் தாறுமாறாகத் துடித்துத் தடைப்படும். மேலும் நரம் பும், முக்கிய மையங்களும் பாதிக்கப்பட்டு உடல்நிலை சீரழியும், காண்க, அமில எதிர்ப்பிகள்.

- ச. இரா. இரா.

நூலோதி

Thompson. R.H.S., Wooton I.D.C., Bio-Chemical Disorders in Human Diseases, J & A Churchill, London, 1970.

Varley. H., Practical Clinical Biochemistry, The English Language Book Society & William Heiremann Medical Books Ltd., 1969 -பு . க

அமிலமும் காரமும்

படுத்தப்பட்டது. அமில் -காரங்களை நுட்பமாக வரையறுத்துக் கூறு வதற்கான முயற்சி பதினேழாம் நூற்றாண்டிலேயே வேதியியல் வல்லுநர்களால் மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு கொள்கையும் காலப்போக்கில் அவ்வப் பொழுது கிடைக்கும் சோதனைச் சான்றுகளால் மாற்றத்துக்குட்பட்டு மேலும் நுட்பமாக வரையறைப் இவ்வமில - காரவரையறைகள் வேதியியல் அறிவு வளர வளர அதற்கேற்ப மாறி வரு கின்றன. இராபர்ட் பாயில் (Robert Boyle) அமிலத் தைக் கீழ்க் கண்டவாறு வரையறுத்தார். அமிலம் புளிப்புச் சுவை உள்ளது; பல பொருள்களைக் கரைக்க வல்லது; அரிக்கும் தன்மை வாய்ந்தது; காரத்துடன் சேர்ந்து உப்பையும் நீரையும் கொடுக்கக் கூடியது; நீலலிட்மசைச் சிலப்பாக மாற்றும் தன்மை வாய்ந்தது.

25