பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமிலமும் காரமும்

காரம் தொடுவதற்கு சோப்பு போல் வழவழப் பாக இருக்கும்; சிவப்பு லிட்மசை நீலமாக மாற்றும் அமிலங்களுடன் சேர்ந்து உப்பையும் நீரையும் தரும்.

ஏ. எல். லவாய்சியர் (A. L. Lavoisier) பதினெட் டாம் நூற்றாண்டின் இறுதியில் தன் ஆராய்ச்சியின் முடிவாகப் பல அமிலப் பொருள்கள் ஆக்சிஜனைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்தார். ஆகவே அமிலத் தில் ஆக்சிஜன் முக்கியத் தனிமமாக இருக்கும் என் றார். கிரேக்க மொழியில் ஆச்சிஜன் என்றால் அமிலம் ஈனி (acid generator) என்று பொருள். கி. பி. 1808 ஆம் ஆண்டில் சர் ஹம்ஃப்ரி டேவி (Sir Humphry Davy) என்பவர் ஹைட்ரோகுளோரிக் வாயு நீரில் கரைவதால் உண்டாகும் ஹைட்ரோக் குளோரிக் அமிலம் ஆக்சிஜனைக் கொண்டிருக்க வில்லை என்று கண்டறிந்தார். மேலும் அவரது ஆராய்ச்சியின் பலனாக, கி.பி. 1816 ஆம் ஆண்டில் அமிலங்களுக்குத் தேவையான தனிமம் ஹைட்ரஜன் தான், ஆக்சிஜன் அன்று என்று விளக்கினார். ஆகவேதான் தற்போது ஆக்சிஜனும் உள்ள அமிலங் கள் (oxy acids) என்று அழைக்கப்படுகின்றன. பின்னர் ஐஸ்ட்ஸ் வான் லீபிக் (Justus Von Licbig) கி.பி.1840 ஆம் ஆண்டில் அமிலங்களுக்கான ஒரு விளக்கத்தை அளித்தார். அதன்படி, அமிலம் என்பது ஹைட்ரஜனைக் கொண்டுள்ள பொருள். ஒரு அது உலோகங்களுடன் வினைபுரியும்போது ஹைட் ரஜனை உண்டாக்குகின்றது.

அமிலங்களுடன் வினைபட்டு உப்புகளை உண் டாக்கும் பொருள்கள் காரங்கள் என்று கருதப் பட்டன. இவ்வகையில் எல்லோருக்கும் தெரிந்த சோடாக் காரமும், பொட்டாஷ் காரமும் காரங்க ளாகக் கருதப்பட்டன. இவற்றைத் தவிர மற்ற காரங்களும், முக்கியமாக அம்மோனியாவும், அமீன் களும் இருப்பது பின்னர் தெரியவந்தது. அமிலங் களும் காரங்களும் தற்காலத்தில் தொழில் துறையில் மிகவும் பயன்படுகின்றன. இவ்வகையில் கந்தக அமிலம் (H_SO,), பாஸ்ஃபாரிக் அமிலம் (H, PO,), நைட்ரிக் அமிலம் (HNO;), ஹைட்ரோக்குளோரிக் அமிலம் (HCi, போன்றவை முக்கிய கனிம அமிலங்க ளாகவும் (inorganic acids) அசெட்டிக் அமிலம் (CH, COOH}, ஆக்சாலிக் அமிலம் (C H2O ),ஃபீனால் C,H,OH) போன்றவை முக்கியக் கரிம அமிலங்களா கவும் (organic acids) விளங்குகின்றன. இவ்வாறே சோடியம் ஹைட்ராக்சைடு (NaOH), பொட்டாசியம் ஹைட்ராக்சைடு (KOH), கால்சியம் ஹைட்ராக்சைடு (Ca{OH),) போன்றவை பயனுள்ள கனிமக் காரங் களாகவும் (inorganic bases), பிரிடின் (CzH,N) எத்தில் அமீன் (C,H NH,) போன்றவை கரிமக் காரங்களாகவும் (organic bases) விளங்குகின்றன.

வரை அர்ரேனியஸ் - ஆஸ்ட்வால்டு கொள்கை. நீரில் வேதிப் பொருள்களின் அயனியாக்கம் (ionisation) யறுக்கப்பட்டபொழுது அமில-காரங்களைப் பற்றிப் புது உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டன. அர்ரேனி யஸ்ஆஸ்ட்வால்டு (Arrbenius - Ostwald ) கி: பி. 1884 ஆம் ஆண்டு வாக்கில் அமில - காரங்களைப் பற்றிய வரையறைகளைத் தனித்தனியாக ஆராய்ந்து விளக்கினர். அவர்கள் கொள்கைப்படி அமிலம் என் பது நீரில் பிரிகையுநறு ஹைட்ரஜன் அயனிகளையும் (H+) காரம் என்பது நீரில் பிரிகையடைந்து ஹைட் ராக்சில் அயனிகளையும் (OH") கொடுக்கவல்லவை.

+ HCI H ei + NaOH = Na* + OH அர்ரேனியஸ் கொள்கைப்படி நடுநிலையாக்கல் (neutralisation) என்பது ஹைட்ரஜன் அயனியும் ஹைட்ராக்சில் அயனியும் இணைந்து நீர் உருவாவ தாகும்.

H + OH →→ H,O Ba (OH), + H,SO, -→ 2 H,O + BaSO,

அர்ரேனியஸின் அமில - காரக் கொள்கையின் மூலம் அமில் - காரச் சமநிலைகளையும், அமில-காரங்களின் வீரியங்களையும் விளக்க முடிந்தது. நீரில் ஓர் அமிலம் (HA) பிரிகையுறுவதைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிட் டால் அதன் பிரிகை மாறிலியையும் (dissociation constant) பின்வருமாறு குறிப்பிடலாம்.

HA H KHA = + + A [H*J{A-] [HA}

அடைப்புக்குறிகள் [ ] செறிவை மோல்/லிட்டரில் குறிக்கின்றன. KHA என்பது அமிலத்தின் பிரிகை மாறிலியாகும். இப்பிரிகை மாறிலி வீரியமிக்க அமிலங்களுக்கு அதிகமாகவும், வீரியம் குன்றிய அமிலங்களுக்குக் குறைவாகவும் உள்ளது. எடுத்துக் காட்டாக, 25°C வெப்பநிலையில், நீர்க்கரைப்பாளில். அசெட்டிக் அமிலத்தின் பிரிகை மாறிலி 1.812075.

இம்மதிப்பு நீர்த்த கரைசல்களில் (dilute solutions) மிகக் குறைந்த அளவே மாறுபடுகின்றது. நைட்ரஸ் அமிலத்தின் (IHNO,) பிரிகை மாறிலி யானது அசெட்டிக் அமிலத்தின் பிரிகை மாறிலியை விட 25 மடங்கு அதிகமாக உள்ளது.

26