பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

HNO, = H+ + NO," Ka 4.6 x 10+

பிரிகை மாறிலிகள் வெப்பநிலை மாறுபாட்டா லும், கரைப்பான் மாற்றத்தாலும் சிறிது மாறுபடு கின்றன. பொதுவாக, இவ்வுலகில் நீர் எங்கும் எளிதில் கிடைப்பதாலும், சிறந்த கரைப்பானாக விளங்குவதாலும்அமில-கார வினைகள் இவ்வூடகத் திலேயே நடத்தப்படுகின்றன.

அசெட்டிக் அமிலத்தில் ஒரே ஒரு பிரிகையுறு ஹைட்ரஜன் மட்டும் இருப்பதால் அது ஒரு காரவியல் அமிலம் (monobasic acid) ஆகும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிரிகையுறு ஹைட்ரஜன் அணுக் கள் ஓர் அமிலத்தில் இருந்தால் அவை பல்காரவியல் அமிலங்கள் (poly basic acid) என்று அழைக்கப் பாஸ்ஃபோரிக் படுகின்றன. எடுத்துக்காட்டாக அமிலத்தைக் கீழ்க்கண்டவாறு குறிக்கலாம்.

அயனியாக்கல் H,PO, =H++ H,PO, H,PO, == H+ + HPO< HPOH + PO₂³ 4 × 10-33 Ka, 25°C 1.5 × 10-³ 8 6.2 X 10°

இதேபோல் நீரில் காரங்கள் அயனியாவதையும் கூற லாம். இருந்தாலும் நீர்க்கரைசலில் H, OH அயனி களின் செறிவு தனித்தனியாக வேறுபடுவதில்லை இதற்குக் காரணம் நீரே ஒரு வீரியம் குன்றிய அமில மாகவும், காரமாகவும் விளங்குலதுதான்.

H,O = H+ + OHT

சுத்தமான நீரில் H, OH அயனிகளின் செறிவு சமநிலையில் உள்ளது. அறை வெப்ப நிலையில் கிட்டத்தட்ட 2×1071%நீர் அயனிகளாக உள்ளது. ஆகவே,

K = [H"] [OH"] [H,O] = 1 × 1014

இதன் மூலம் நீர்க் கரைசலில் H* அல்லது OH அயனி களின் ஏதாவது ஒரு செறிவு தெரிந்தால் மற்றதை எளிதில் கணக்கிடலாம், இதுவே கி.பி. 1909 ஆம் ஆண்டில் எஸ்.பி.எல். சாரன்சன் (S.P.L. Sorenson). என்ற அறிவியலார்க்கு ஹைட்ரஜன் அயனிகளின் செறிவைக் கணக்கிட உதவும் மடக்கை pH அள கோலை (logarithmic pH scale) வரையறுத்து விளக்கக் காரணமாயிருந்தது.

அமிலமும் காரமும் 27

pH Jog [H+] (25C)

pH அளவீடுகள் 0 - 14வரை, வீரியமிக்க அமிலத் திலிருந்து, வீரியமிக்க காரம் வரை அளவிடப் பட்டுள்ளன. சாதாரண லெப்பநிலையில் சுத்தமான நீரின் pH = 7.

பிரான்ஸ்டெட்-லவ்ரி கொள்கை. அர்ரேனியஸின் கொள்கை முழுமையாக ஏற்றுக்கொள்ளும்படி அமைத் திருக்கவில்லை. ஏனெனில் 1) அவர் கொள்கை நீரி யக் கரைசல்களுக்கு மட்டுமே ஏற்புடையதாக இருந் தது. 2) அம்மோளியா அல்லது நைட்ரஜனைக் கொண்டிருக்கும் மற்ற பொருள்களில் ஹைட்ராக்சில் தொகுதி இல்லாவிட்டாலும் நீரில் கரைந்து காரக் கரைசல்களைக் கொடுத்தன 3) சில உப்புகள் நீரில் கரைந்து நடுநிலைக் கரைசல்களை உண்டாக்குவ தில்லை. இதனை அவரால் விளக்க முடியவில்லை. கி.பி. 1920 ஆண்டு வாக்கில் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஜெ.என். பிரான்ஸ் டெட் (J.N. Brönsted) என்பவரும், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டி.எம். லவ்ரி (T.M. Lowry) என்பவரும் தனித்தனியே நீர்க் கரைசல்களுக்கும், நீரல்லாத மற்றக் கரைசல்களுக் கும் பொருந்தும்படியான அமில-காரங்களுக்கு ஒரு பொதுவான வரையறை வகுத்தனர். இவர்கள் கொள்கைப்படி அமிலம் என்பது புரோட்டான் வழங்கி (proton doonor); காரம் என்பது புரோட் டான் ஏற்பி (proton aceptor). இப்புதுக் கொள்கை அர்ரேனியஸ் சொன்ன அமில-காரம் பற்றிய விளக் கங்களுக்கும் பொருந்துவதாக இருந்தது. எடுத்துக் காட்டாக அசெட்டிக் அமிலத்திற்கும் சோடியம் ஹைட்ராக்சைடிற்கும் இடையே நிகழும் வினையைக் கீழ்க்கண்டவாறு எழுதலாம்.

CH COOH + OH"> CH,COO" + H,O Na + OH* NaOH

அசெட்டிக் அமிலம் புரோட்டானை வழங்குவதால் அமிலம், சோடியம் ஹைட்ராக்சைடு புரோட்டானை ஏற்றுக் கொள்வதால் அது காரம், பிரான்ஸ்டெட்லவ்ரி கோட்பாடு கரைப்பான்களின் அமில-காரமா கச் செயல்படுவதை வலியுறுத்துகிறது. (எ.கா) நீர்த்த ஹைட்ரஜன் குளோரைடு கரைசல் (ஹைட்ரோ குளோரிக் அமிலம் ) ஒரு வீரிய மிக்க அமிலம். ஏனெனில் நீர் HC1 இலிருந்து எளிதில் புரோட்டானை ஏற்றுக் கொண்டு H,O+ அயனியாகிறது. மற்ற இத்தகைய புரோட்டான் மாற்றம் நீரில் நடைபெறுவது போல் நிகழ்வதில்லை. பிரான்ஸ்டெட் லவ்ரி கோட்பாட்டின் படி HCI புரோட்டான் வழங்கி; எனவே அது அமிலம் நீர் புரோட்டானை ஏற்பதால் அது காரம். கரைப்பான்களில்

HCI + H,O » Hạo + CI அமிலம் காரம் இணை

அமிலம்

இணை

காரம்