பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமிலமும் காரமும்

HC! க்கும் H,O க்கும் இடையே நிகழும் வினையில் புது அமிலமும், புது காரமும் உண்டாகின்றன. அவை யே இணை அமிலம் (conjugate acid) இணை காரம் அழைக்கப்படுகின்றன. (conjugate base) என்று மேலே கொடுக்கப்பட்டுள்ள வினையின்படி HCL & CI்உம், H,O* & H, O -உம் இணை அமில-கார இரட் டைகள் (conjugate acid-base pairs) ஆகும். மேலே கொடுக்கப்பட்டுள்ள வினை முழுவதுமாக வலப்புறம் நோக்கியே அமைந்துள்ளன. ஒரு HCI மோல் ஒரு H,O" மோலையும், ஒரு CI மோலையும் உண்டாக்கு கின்றது. சாதாரண கனிம அமிலங்களான HNO H,SO4, HCIO, போன்றவை நீரில் முழுவதாகப் பிரி கையுறுகின்றன. இவை வீரியமிக்க அமிலங்கள் (strong acids) என்று அழைக்கப்படுகின்றன. ஆகவே ஒற்றை அம்புக்குறியால் இவ்வினை குறிக்கப்படுகின்றது. ஆனால் அசெட்டிக் அமிலம் நீரில் அதிக அளவில் பிரிகை அடைவதில்லை. ஆகவே அவை வீரியமிக்க அமில-காரங்களைப் போல் எளிதில் அயனிகளாகப் பிரிகையுறாமல் மூலக்கூறுகளாகவே உள்ளன.

CH,COOH + H,O =>H,O+ + CH COO இணை இணை அமிலம் காரம் அமிலம் காரம்

எனவே இவ்வினை இரு அம்புக்குறிகளால் மீள்வினை என்று பொருள்படும்படி குறிப்பிடப்படுகிறது. இவ்வாறு பெரும்பாலான கரிமக் கரைப்பான்கள் நீரில் அதிகம் அயனிகளாகப் பிரிகை அடைவதில்லை. இவ்வமிலங்கள் வீரியம் குன்றிய அமிலங்கள் (weak acids) என்று அழைக்கப்படுகின்றன.

பிரான்ஸ்டெட்-லல்ரி கொள்கையின்படி நீர் அமிலமாகவும் காரமாகவும் செயல்படுகின்றது. எடுத் துக்காட்டாக நீரில் அம்மோனியா கரைவதைக் கீழ்க் கண்டவாறு எழுதலாம்

NH, + HOH காரம் அமிலம் 1 NH + OH இணை இணை அமிலம் காரம்

அமிலம் (HOH), காரமான NH, க்குப் புரோட் டானை வழங்குகின்றது. அயனி இணை அமிலமாகும். இவ்வினை முழுமை பெறுவதில்லை. அம்மோனியா கரைசலின் கடத்தும் திறன் குறைவு; இதிலிருந்து அம் மோனியா வீரியம் குனறிய காரம் என்றும் அறிய லாம். இவ்வாறு நீர் போன்று புரோட்டானை வழங் கும் அல்லது ஏற்றுக்கொள்கிற பண்பைப் பெற்றிருக் கின்ற பொருள்கள் ஈரியல்புடைத்த கரைப்பான் (amphiprotic solvent) என்று பெயர்பெறும்.

அர்ரேனியஸ் கொள்கையும்,பிரான்ஸ்டெட்-லவ்ரி கொள்கையும் காரத்தைப் பற்றி வரையறுப்பதில் வேறுபடுகின்றன. பிரான்ஸ்டெட்-லவ்ரி கொள்கை அம்மோனியா போன்ற ஹைட்ராக்சில் தொகுதி கொண்டிராத காரங்களில் காரத்தன்மையை விளக்க உதவுகின்றன. அம்மோனியா, மற்ற நைட்ரஜன் சேர் மங்கள் நீரில் கரையும்போது நீரிலிருந்து புரோட் டானைப் பெற்றுக் கொண்டு ஹைட்ராக்சில் அயனி களை உருவாக்குகின்றது.

NH, + H,O = NH* + OH^ (Na) CH,COO + H₂O அசெட்டேட்டு (காரம்) 11 CH,COOH + (Na+) Of அசெட்டிக் அமிலம் இணை காரம் (இணை அமிலம்) அமிலம்

பிரான்ஸ்டெட்- ஸவ்ரி கொள்கை. புரோட்டானைக் கொண்டுள்ள எந்தவொரு கரைப்பானுக்கும் (pro tonic solvents) பொருந்தும்.

லுாயிஸ் கொள்கை. கி.பி. 1938-ஆம் ஆண்டில் ஜி.என். லூயிஸ் (G.N. Lewis) என்ற அறிவியல் அறிஞர் அமில காரங்களை எலெக்ட்ரான்களை அடிப்படையாகக் கொண்டு விளக்கினார். நீர் அல் லாத கரைப்பான்களில் கரைந்த அமிலமும் காரமும் ஒன்றையொன்று முறிக்கின்ற வினையையும் பல கரிமச் சேர்ம வினைகளில் வினையூக்கியாகப் பயன படுகின்ற சில அமிலங்களின் வினைகளையும் (ஹை ட்ரஜன் அல்லது. புரோட்டான்கள் இல்லாதவை) லுாயிஸ் கொள்கை தெளிவாக விளக்குகிறது. இவர் கொள்கைப்படி ஓர் அமிலம் (Lewis acid) என்பது இணை எலெக்ட்ரான்களைக் (electron pair) காரத் திலிருந்து ஏற்கும் பொருள்; காரம் (base) என் பது இணை எலெக்ட்ரான்களை வழங்கும் பொருள். பிரானஸ்டெட்-லவ்ரி கொள்கைப்படி அம்மோனியா விற்கும் அசெட்டிக் அமிலத்திற்கும் இடையே நிகழும் வினை ஓர் அமில-கார வினையாகும்; காரணம் அமி லம் வழங்கும் புரோட்டானை அம்மோனியா ஏற்றுக் கொள்கிறது. ஆனால் லுாயிஸ் கொள்கைப்படி அம்மோனியா மூலக்கூறு இணை எலெக்ட்ரான்களை வழங்கிச் சகபிணைப்பு உண்டாவதால் இது ஒரு அமில-கார வினையாகும்.

H:N: H + ooCCH; . 1 1 H H + CH,COO"

28