பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 அமில ஹாலைடுகள்

அமில ஹாலைடுகள்

ஓர் அமிலத்தின் கார்பாக்சில்(-COOH) தொகுதியில் உள்ள ஹைட்ராக்சில் (- OH) தொகுதிக்குப் பதிலாக ஹாலோஜன் அணுவைப் பதிலீடு செய்து பெறப் படும் சேர்மமே அமில ஹாலைடு (acid halide). அமில ஹாலைடுகளின் பொது வாய்பாடு RCOX; X என்பது ஃபுளோரின், குளோரின், புரோமின் அல்லது அயோடின் என்னும் ஹாலோஜன் அணு வைக் குறிக்கும்.

O ப RCOH அமிலம் ஹாலோஜன் RCX அமில ஹாவைடு

ஒற்றைக் கார்பாக்சில் அமில மூலக்கூறில் -CH தொகுதியை நீக்கிய பிறகு கிடைக்கும் RCO -தொகுதி அசைல் தொகுதி (acyi group) எனப்படுகிறது. எனவே RCOX என்னும் வாய்பாடுடைய அமில ஹாலைடுகள் அசைல் ஹாலைடுகள் (acyl halides) என்றும் அழைக்கப்படும். இதுபோல் R தொகுதி அரோமாட்டிக் தொகுதியாக இருந்தால் இவை அரா யில் ஹாலைடுகள் (aroyl halides) என்று அழைக் கப்படும்.

அசைல் குளோரைடு. கரிம அமிலத்தைப் பாஸ் ஃபரஸ் முக்குளோரைடுடன் அல்லது பாஸ்ஃபரஸ் ஐங்குளோரைடுடன் சேர்த்து வெப்பப்படுத்தினால் அமில குளோரைடுகள் கிடைக்கின்றன.

3 RCOOH + PCl, → 3 RCOCl + H,PO,

RCOOH + PC; → RCOCI + HCI + POCI3

பாஸ்ஃபரஸ் குளோரைடுகளுக்குப் பதிலாக தயோனைல் குளோரைடைப் (SOCI,) பயன்படுத்தி யும் இதனைப் பெறலாம்.

RCOOH + SOCI, ➜ RCOCI+SO, + HCl

அசைல் புரோமைடு. கரிம அமிலத்துடன் ஃபாஸ் பரஸ் மூப்புரோமைடு அல்லது ஐம்புரோமைடு வினை புரியும்போது அசைல் புரோமைடுகள் (acyl bromides) உண்டாகின்றன. அமிலத்துடன் சிவப்புப் பாஸ்ஃபர சும் புரோமினும் வினைப்பட்டு இம்மாற்றத்தை நிகழ்த்தலாம்.

RCOOH

அமிலம்

RCOBR

P + Br,

அசைல் புரோமைடு

அசைல் குளோரைடுகளுடன் மிகுதியான ஹைட் ரஜன் புரோமைடு வினைப்படும் பொழுது அசைல் புரோமைடுகள் உண்டாகின்றன.

அசைல் அயோடைடுகள். அமில நீரிலிகளுடன் பாஸ்ஃபரஸ் மூவயோடைடு (phosphorus triiodide) வினைபுரிந்து அசைல் அயோடைடுகளைத் (acyl jodidcs) தருகின்றது.

(RCO),0 அமில நீரிலி p + I, (PJ) RCOI அசைல் அயோடைடு

இயற்பியல் பண்புகள். குறைந்த கரி அணுக் களைக் கொண்ட அசைல் குளோரைடுகள் நிறமற்ற னவாகவும், நெடியுள்ள நீர்மங்களாகவும் உள்ளன; மற்றவை நிறமற்ற திண்மங்கள். ஈரக்காற்றுப் பட் டால் இவை புகையும்.

குளோரின் அணு வினைத்திறன் மிக்கது; எனவே அமிலக் குளோரைடுகள் பொருள்களாக விளங்குகின்றன. முக்கியமான வினைப்

வேதிப்பண்புகள், அசைல் குளோரைடுகள் எளிதில் நீராற்பகுப்பு அடைந்து கார்பாக்சிலிக் அமிலத்தை யும் ஹைட்ரஜன் குளோரைடையும் கொடுக்கின்றன.

RCOCI + H,O RCOOH + HC

ஆல்கஹாலுடனும், ஃபீனால்களுடனும் அசைல் குளோரைடுகள் வினைப்பட்டு எஸ்ட்டர்களைத் தரு கின்றன.

R'COCl + ROH → R'COOR + HCI

அம்மோனியாவுடன் அசைல் குளோரைடுகள் விரைவில் வினைபட்டு அமில அமைடுகளை உண் டாக்குகின்றன.

RCOCI + 2 NH

RCONH, + NHẠCI

அமிலங்களின் உப்புகளுடன் வினைபுரிந்து அமில நீரிலிகளைக் கொடுக்கின்றன.

R'COCI + R"COONa →R'COOCOR" + NaCl

ஃப்ரீடல்- கிராஃபட்ஸ் வினையின் (Friedel-Crafts rcaction) மூலம் அரோமாட்டிக் கீட்டோன்களைத் தயாரிப்பதில் அசைல் குளோரைடுகள் பயன்படு கின்றன. பென்சீனுடன் அசெட்டைல் குளோரைடு நீரற்ற அலுமினியம் குளோரைடு (anhydrous alumi. nium chloride) வினையூக்கி உடனிருக்க வினைபுரியும்