பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமினோ அமிலங்கள் 33

நூலோதி

1. Holmes, A., Holmes, D. L., Holmes Principles of Physical Geology, E. L. B. S., London, 1978.

2. Gorshkov, G., Yakushova, A., Physical Geology, Mir Publishers, Moscow, 1967.

3. Whitten, D.G.A., Brooks, J.R.V., The Penguin Dictionary of Geology, Penguin Books Ltd., Middlesex, England, 1978.

அமினேற்றம்

இது அமீன்களைத் தயாரிக்க உதவும் முறை, அம் மோனியாவிலிருக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற் பட்ட ஹைட்ரஜன் அணுக்களுக்குப் பதிலாகப் பதி வீட்டு விளையின் மூலம் (substitution reaction) அல்க்கைல் (CH3-), அரைல் (CøH;-), வளைய அல்க் கைல் (C8 Hu−) அல்லது வேற்றணு வளையத் தொகுதிகளை (beterocyclic groups) இணைப்பதே அமினேற்றம் (amination) எனப்படும். அமீன்களைப் பெறப் பல வழிமுறைகள் உள்ளன. இவை சாயங்கள் தயாரிப்பிலும், மருந்துகள் தயாரிப்பிலும், பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிப்பிலும், ஏவூர்தி எரிபொருள் தயாரிப்பிலும் பெரிதும் பயன்படுகின்றன.

நைட்ரோநைட்ரோசோ{nitroso), அசாக்சி (az0xy) அல்லது அசோ தொகுதிகளைக் (azo groups) கொண்ட சேர்மங்களை ஆக்சிஜன் இறக்க வினைக்கு உட்படுத்துவதால் அமீன்களைப் பெறலாம். மேலும் எளிதில் விலக்கப்படுகிற தொகுதிகளைக் (labile groups. −Cl, -OH, -SO,H) கொண்ட சேர்மங்கள் அல்லது கார்பனைல் தொகுதிகளைக் கொண்ட சேர் மங்கள் அல்லது வேகமாக வினைபுரியும் சேர்மங்கள் அம்மோனியாவுடன் வினைபுரிவதாலும் அமீன் களைப் பெறலாம். மாறாகக் கரிமச் சேர்மங்கள் அம் மோனியாவிலோ, அல்லது அம்மோனியா -ஹைட் ரஜன் கலந்த கலவையுடனோ வினைபுரிந்து அமீன் களைப் பெறும் முறைக்கு அம்மோனாலிசிஸ் (ammo nolysis) அல்வது ஹைட்ரோஅம்மோனாலிசிஸ் (hydroammonolysis) என்று பெயர்.

நூலோதி

McGraw-Hill Encyclopaedia of Chemistry, Fifth Edition, McGraw-Hill Book company. New York, 1983.

அமினோ அமிலங்கள்

அமினோ தொகுதியையும் அமிலத் தொகுதியையும் கொண்டிருக்கும் சேர்மங்கள் அமினோ அமிலங் களாகும் (amino acids), சேர்மத்தில் உள்ள கார்பாக் சில் அமிலத் தொகுதியோ (cazboxlic acid group) சல்ஃபானிக் அமிலத் தொகுதியோ (sulphonic acid group), வேறு அமிலத் தொகுதியோ சேர்மத்திற்கு அமிலத் தன்மையைத் தருகிறது. அமினோ தொகுதி யானது மூலக்கூற்றின் மற்ற இடங்களில் அமைந்திருக் கலாம். அமினோ அமிலங்களின் மூலக்கூற்று வாய் பாடு RCH (NH,) COOH, அமினோ அமிலங்களில் இன்றியமையா தவை கார்பாக்சில் தொகுதியைக் கொண்ட அமினோ அமிலங்களாகும்.

க- அமினோ அமிலம் தீ-அமினோ அமிலம் y-அமினோ அமிலம் கிளைசின் (glycine) H,NCH,COOH நீ-அமினோ புரோப்யானிக் அமிலம் (தீ -amino propionic acid) H,NCHCH,COOH - அமினோபியூட்ரிக் அமிலம் (y-amino butyric acid) HØNCH,CH,CH,COOH

அமினோ அமிலங்களின் பல்லுறுப்பிகளே (polymers) புரோட்டீன்கள். எனவே புரோட்டீன களை நீராற் பகுக்கும்போது (hydrolysis) அமினோ அமிலங்கள் கிடைக்கின்றன. அமிலங்கள், காரங்கள் அல்லது நொதிகளின் (enzymes) உதவியால், புரோட்டீன்கள் (proteins)நீராற் பகுக்கப்படுகின்றன. புரோட்டீன்களின் தன்மையைப் பொறுத்து அமினோ அமிலங்கள் தனித்தோ அல்லது பிற சேர்மங்களுடன் சேர்ந்தோ உண்டாகலாம்.

இது வரை சுமார் 170 அமினோ அமிலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. புரோட்டீன் நீராற்பகுப்பில் 23 அமினோ அமிலங்கள் கிடைக்கின்றன. இவ்வமிலங்களின் கண்டுபிடிப்பு தற்கால உயிர் வேதியியலில் (biochemistry) ஒரு சிறப்பான கூறாக விளங்குகிறது.

அமினோ அமிலங்களில் இருக்கும் அமினோ தொகுதிகள், கார்பாக்சிலிக் அமிலத் தொகுதிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து அமிலத்தன்மை, காரத் தன்மை, நடுநிலைத்தன்மை உடையனவாக அமை கின்றன. ஓர் அமினோ தொகுதியும் ஓர் அமிலத் தொகுதியும் இருக்குமானால் அவ்வமினோ அமிலம்