பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 அமினோ அமிலங்கள்

நடுநிலையானது. மாறாக அமிலத்தொகுதி அமினோ தொகுதியைக் காட்டிலும் அதிகமாக இருப்பின் அவ்வமினோ அமிலம் அமிலத்தன்மை உடையதாகும். இதே போன்று அமினோ அமிலத்தில் உள்ள அமினோ தொகுதி அமிலத்தொகுதியை விட எண்ணிக்கையில் அதிகமாக இருப்பின் அவ்வமினோ அமிலம் காரத்தன்மை உடையதாக இருக்கும்.

எடுத்துக்காட்டு

நடுநிலை அமினோ அமிலங்கள்: கிளைசின் (glycine) H_NCH,COOH அலனைன் (alanine) CH,CH (NH,) COOH

அமில அமினோ

அமிலங்கள்:

அஸ்ப்பார்ட்டிக் அமிலம் (aspartic acid) HOOCCH,CH(NH,) COOH குளுட்டாமிக் அமிலம் (glutamic acid) HOOCCH,CH,CH(NH,) COOH

கார அமினோ

அமிலங்கள்:

ஆர்னிதைன் (ornithine) HẸNCH,CH,CH,CHCOOH

லைசின் (lysine) H_N (CH,) CHOOH

NH,

NH₂

ஓர் அமிலத்தின் அமினோ தொகுதியும் மற்றோர் அமினோ அமிலத்தில் உள்ள கார்பாக்சிலிக் அமிலத் தொகுதியும் வினைபுரிந்து பதிலீடு செய்யப்பட்ட அமைடு பிணைப்புகளைத் தரும். இப்பிணைப்பு களுக்குப் பெப்ட்டைடு பிணைப்புகள் (peptide linkages) என்று பெயர்.

+ COOH + H,N H₂N-C-→ -Cő H 1 C

நொதிகளைக் கொண்டோ. அமிலங்களைக் கொண்டோ, காரங்களைக் கொண்டோ புரோட்டீன் களை நீராற் பகுக்கும் பொழுது பல அமினோ அமிலங்கள் கொண்ட கலவை கிடைக்கிறது. இக் கலவையிலிருந்து அமினோ அமிலங்களைப் பின்னப் படிகமாதல் (fractional crystallisation) வழி

பிரித்தெடுக்கலாம். எடுத்துக்காட்டாக ஊன்பசையை (gelatin) நீராற்பகுத்துக் கிளைசின் தயாரிக்கப்படு கிறது.

பின்னக்காய்ச்சி வடித்தலால் (fractional distillation) அமினோ அமிலங்களை அவற்றின் கலவை யிலிருந்து பிரிக்க இயலாது. ஏனெனில் பெரும் பாலான அமினோ அமிலங்கள் பின்னக்காய்ச்சிவடிக் கும்போது சிதைவுறுகின்றன. இதனைத் தவிர்க்க எமில் ஃபிஷ்சர் (Emil Fischer) எனபார் ஒரு முறையைக் கையாண்டார். இதில், அமினோ அமிலங் கள் அவற்றின் எஸ்ட்டர்களாக மாற்றப்பட்டுப் பின்னர் பின்னக்காய்ச்சி வடித்தலுக்கு உட்படுத்தப் படுகின்றன. பீரிக்கப்பட்ட எஸ்ட்டர்களை நீராற் பகுக்கும்பொழுது அவற்றை ஒத்த அமினோ அமிலங் கள் உண்டாகின்றன. அமினோ அமிலக் கலவையை நிறச்சாரல் பிரிகை (chromatography) முறையில் எளிதில் பிரிக்கலாம்.

அயனிப்பரிமாற்ற நிறச்சாரல் பிரிகை (Jon Exchange Chromatography). இம்முறையினால் புரோட்டீன் காணப்படுகின்ற அனைத்து அமினோ அமிலங்களையும் பிரித்தெடுக்கலாம். இம் முறை யில் பாலிஸ்டைரின் ரெசின் (polystyrene resin) அயனிப் பரிமாற்றியாகச் (ion exchanger) செயல்படு கிறது. காரத் தன்மையுடைய அமினோ அமிலங்கள் ரெசினுடன் அதிக இறுக்கமாகவும் அமிலத் தன்மை யுடைய அமினோ அமிலங்கள் குறைந்த இறுக்கத் துடனும் பிணைந்துள்ளன. இம்முறையில் பகுத்துப் பிரிக்கும்போது முதலில் அமிலத் தன்மையுடைய அமினோ அமிலமும், பின்னர் நடுநிலைத்தன்மை உடைய அமினோ அமிலமும், இறுதியாகக் காரத் தன்மையுடைய அமினோ அமிலமும் வெளிப்படு கின்றன. களில்

காகித நிறச்சாரல் பிரிகை முறை (Paper Chromatograpby). இம் முறை கரிம நீர்மக் கலைலகளுக் கிடையே அமினோ அமிலங்களின் பிரிகைக் கெழுவின் partition coefficient) அடிப்படையில் செயல்படு கிறது. இம்முறையில் பிரிக்கப்பட வேண்டிய அமினோ அமிலக் கலவை காகிதத் தாங்கியில் தடவப்பட்டு அல்லது பொருத்தப்பட்டு, நீர் கரிம சேர்மக் கலவை உள்ள தொட்டியினுள் காகிதம் பொருத்தப்படுகிறது. கலவையில் உள்ள அமினோ அமிலங்களின் கரை திறனைப் பொறுத்துக் காகிதத்தில் முன்னேறிப் பிரிகை அடைகிறது. ஒரு கரைப்பானைக் கொண்டு நிறச்சாரல் பிரிகை முறையில் பிரித்தல் முழுமையாக இயலாத நிலையில் இரு பருமான காகித நிறச்சாரல் பிரிகை முறையில் (two-dimensional paper chromatography) முழுமையாகப் பிரிக்க இயலும். இம் முறை யில் முதலில் ஒரு கரைப்பானைக் கொண்டு ஒரு