பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமீப சீதபேதி

மேலும், மீள் உறிஞ்சும் திறன் குறை நோய்க் குறித் தொகுதிகளில் (renal tubule reabsorption deficicncy syndrome) அமினோ அமில நீரிழிவு வெகு வாகக் காணப்படும்.

அமினோ அமில நீரிழிவிற்கான மேற்கண்ட காரணங்களை இனங்கண்டு சிகிச்சை முறைகளை மேற்கொள்ளல் வேண்டும். நோயை முழுமையாக அகற்ற, சிகிச்சை முறை (பண்டுவம்) எதுவும் இல்லை. வளர்சிதை மாற்றக் கோளாறுகளின் அறிகுறிகளை க் கொண்டு, தற்காலிகமான சிகிச்சை அளிக்கலாம்.

நூலோதி

1. Fundamentals of Bie-Chemistry-1982 for Medi cal Students. By Dr. Ambiga Shanmugam, M.B. B.S., M.Sc., Published by the Author.

2. Oxford Text Book of Medicine-Weatherall, Ledingham and Warrell. Oxford University Press Publications.

அமீப சீதபேதி

மனிதர்களைத் தாக்கும் நோய்களிலே அமீப சீதபேதி (amoebic dysentery) முக்கியமானதொன்றாகும். இந்தியாவைப் போன்ற மிதவெப்ப நாடுகளில் இந்த நோய் அதிகமாக நிலவி வருகிறது.

நோயின் அறிகுறிகள். அமீப சீதபேதியால் பாதிக் கப்பட்டவருக்கு, அடி வயிற்று வலி, மலக்குடல் வலி, குதவலி, தாகம் ஆகியவை ஏற்படும். வயிற்றை வலித்து மலம் வெளிவரும். பல முறை மலங்கழிப் பர், மலம் சீதமும் இரத்தமும் கலந்து, புளிப்பு நாற்ற முடையதாக இருக்கும். இந்த நோய் குழந்தைகளை யும் பாதிக்கும். வலியென்று சொல்லத் தெரியாததால் குழந்தைகள், ஒவ்வொரு தடவையும் மலங்கழிப்பதற்கு முன்னால் அழும், குழந்தைகள் மெலிந்து போகும். இதே போன்ற அறிகுறிகள் நுண்ணுயிர் (baciary) சீதபேதியிலும் ஏற்படுகின்றன. மலத்தை உருப் பெருக்கி மூலம் பரிசோதித்துப் பார்த்தால், வீரிய முள்ள அமீபா (vegetative form of amoeba) அல்லது அமீபாவின் உறைவடிவம் (amoebic cyst) அல்லது இவ்விரண்டுமே மலத்தில் தென்படுமானால், அந் நோய் அமீப சீதபேதி என்று அறியலாம்.

5

2

படம் 1. அமீபாவின் தோற்றம்.

1

போலிக்கால் 2. அகப்பிளாசம் 3. நியூக்ளியஸ் நியூக்ளியஸ் 5. சிவப்பு இரத்த அணு 6, புறப்பிளாசம்

1. 4.

அப்படியின்றி, மலப்பரிசோதனையில், பெரும் உயிர் உண்ணி (macrophages), நுண்ணுயிரி (bacteria), அதிக சிவப்பு இரத்த அணுக்கள் ஆகியவை தென்பட்டால், அந்நோய் நுண்ணுயிர் வயிற்றுளைவு என்று அறியலாம்.

சிற்சில சமயங்களில், அமீப சீதபேதியும் நுண் ணுயிர் சீதபேதியும் ஒரே நோயாளியைப் பாதிப்ப துண்டு. அத்தகையவருடைய மலப்பரிசோதனையில் அமீபா, அமீபாவின் உறை வடிவம், நுண்ணுயிர், பெரும்உயிர்உண்ணி, சிவப்பு இரத்த அணுக்கள் அனைத்தும் காணப்படும்.

சிகிச்சை முறை. இரண்டினுக்கும் வெவ்வேறு ஆதலால், நோய் இன்னதென்று கண்டறிதல் முக்கிய மாகும்.

ஒட்டுண்ணியியல். அமீபா ஓர் ஓட்டுண்ணியாகும். அது மனிதர்களின் பெருங்குடலைத் தங்குமிடமாகக் கொள்கிறது.

எல்லா இனங்களைப் போலவே, அமீபாவும் இனப்பெருக்கத்தை விரும்புகிறது. அமீபா பெருங் குடலிலே வளரும் பொழுது, ஹிஸ்டோலைஸின் (histolysin) என்ற நீர்மத்தை வெளிப்படுத்துகிறது. இந்தத் திரவத்தின் உதவியினால், குடலின் சுவர்களி லுள்ள சளிப் படலத்தைக் கரைக்கிறது. குடற் சுவர் களில் குழி செய்து, அங்கு வாழ்கிறது. இவை இலட் சக்கணக்கில் வாழ்கின்றன. அங்கு உண்டாகும் சிதை

6

4

3

38