பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினால் ஏற்படுகின்ற இடிபாடுகளை உண்டு, வாழ்ந்து, வளர்ந்து இனப்பெருக்கம் செய்கின்றன. அப்பொழுது உண்டாகிற சிதைவுப் பொருள்களும், வடிகின்ற இரத்தமும்தான், நோயுற்றவர் வெளிப்படுத் தும் மலத்தில் காணப்படுகின்றன. அவற்றுடன் அமீ பாக்களும் கலந்து தென்படுகின்றன. பெருங்குட லில் புண்கள் ஏற்படுவதால், வயிற்றில் பெருங்குடலி லுள்ள பகுதிகளில் வலி ஏற்படுகிறது.

அமீப சீதபேதி

பிறகு புண்கள் இயற்கையாகவோ மருந்துகளின் செயலாலோ ஆறிவிடுகின்றது. புண்கள் ஆறுகிற பொழுது, அமீபாக்களுக்கு அங்கு வாழ்வதற்கு வசதி குறைகிறது. அந்தச் சமயத்தில், அவை, தங்கள் வீரிய வடிவங்களை மாற்றிக்கொண்டு, வசதியற்ற நிலை சமாளிக்கவல்ல உறைவடிவங்களைப் பெறு கின்றன. பெருங் குடலிலிருந்து, மலத்துடன் உறை வடிவங்கள் வெளியேறுகின்றன. அப்போது மலப் பரிசோதனை செய்தால். மலத்திலிருக்கும் உறை வடிவங்களைக் காணலாம். யைச்

நோய் பரவல். மலத்துடன் வெளி உலகத்துக்கு வந்த அமீப உறை வடிவங்கள், தரையின் பரப்பில் பல இடங்களில் தங்குகின்றன. மக்கள் திறந்த வெளி களில் மலங் கழிப்பதனால், திறந்த வெளிகளெல்லாம் இத்தகைய அமீப உறை வடிவங்களின் உறைவிடங் களாகின்றன. விளைகின்ற கீரைகள், செடிகள் ஆகிய வற்றின் மேல் படிகின்றன. மழை பொய்யும் பொழுது, அடித்துச் செல்லப்பட்டு, நீர்நிலைகளில் கலந்து விடு கின்றன. திறந்த வெளியில் மலங்கழிக்கின்றவர்கள், நீர் நிலைகளில் குதத்தைக் கழுவிக் கொள்ளும் பொழு தும், அமீபாக்களும் அமீப உறை வடிவங்களும், நீர் நிலைகளை அடையும் வாய்ப்பு உண்டு. அந்த நீர் நிலைகளிலுள்ள தண்ணீரைக், காய்ச்சாமல் பரூக நேர்ந்தால், அந்த நீரைப் பருகினவர்களை நோய் பாதிக்கும்.

அமீபா, அல்லது அமீப உறைவடிவங்கள் நிறைந் துள்ள மலத்தின் மீது, ஈக்களோ, கரப்பான் பூச்சி களோ உட்கார நேர்ந்தால், அவற்றின் கால்களில் அமீப உறைவடிவங்கள் அமீபாக்களும் ஒட்டிக் கொள்ளுகின்றன. நாம் உண்ணும் பண்டங்கள் மீது ஈக்களும் கரப்பான் பூச்சிகளும் உட்கார்ந்து சென் றால், அமீபாவும் அமீப உறைவடிவங்களும் உணவு டன் கலந்து விடுகின்றன. மாசுபட்ட உணவை உண் ணும்பொழுது, அவை வயிற்றையும் சிறு குடலையும் கடந்து சென்று பெருங்குடலையடைகின்றன. உறை வடிவங்கள் திரும்பவும் வீரிய அமீபாக்களாக மாறு கின்றன. அவை வளர்ந்து பெருகும்பொழுது வயிற்று ளைவை உண்டாக்குகின்றன.

அமீப சீதபேதியால் ஏற்படும் விளைவுகள். சில சம யங்களில் அமீபா, சீதபேதியை ஏற்படுத்துவதோடு

நின்றுவிடாமல், உடலின் வேறு உறுப்புகளையும் பாதிக்கும்.

LAMU

படம் 2, பெருங்குடலின் சுவர்களில் அமீபா குழி செய்து செல்லுதலும் அங்கே அது ஏற்படுத்தும் சிதைவும்

அமீபாக்கள் பெருங்குடலிலுள்ள இரத்தக்குழாய் களுக்குள் புகுந்து, வாயில் சிரை (portal vein) வழி யாகக், கல்லீரலை அடைகின்றன. அங்கு சீழ்க்கட்டி (amoebic liver abscess) ஏற்படுத்துகின்றன. களை

கல்லீரலிலுள்ள சீழ்க்கட்டிகள் உடைந்து, உதர விதானத்தின் {diaphragm) வழியாக, நுரையீரலுக் குள் அமீபா புகுகிறது. அங்கும் சீழ்க்கட்டிகளை (lung abscess) உண்டாக்குகின்றது.

சில சமயங்களில், கல்லீரலின் இடது பாகத்தில் சீழ்க்கட்டிகள் ஏற்பட்டு, அவை உடைந்தால், மேலே அருகிலுள்ள இதயத்தின் மேலுறையில் வழிசெய்து கொண்டு, அங்குக்குடியேறி இதயவெளியுறை அழற்சி (Pericarditis) என்ற நோயை உண்டாக்குகின்றன. பின்னர் அவை இரத்தத்தில் கலந்து சென்று மண்ணீ ரலை அடைந்து அங்கே கட்டிகளை (spleen abscess ) ஏற்படுத்தும்.

சிற்சில சமயங்களில், மூளைக்குச் சென்று அங் கும் கட்டிகளை ஏற்படுத்துவதுண்டு. (brain abscess)

பெருங்குடலிலிருந்துகொண்டு பெருங்குடலின் சுவரைத் வயிற்றுறையை துளைத்துக்கொண்டு (peritoneal cavity) அடைந்து, அங்கே வயிற்றுறை அழற்சி (peritonitis) என்ற நோயை உண்டாக்கும்; பெருங்குடலிலேயே கட்டிகளை ஏற்படுத்தும். இவற்றை அமீபோமா (omaeboma) என்று அழைப்பர்.

39