பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாக்கிக் கொள்ள வேண்டும். உணவு பரிமாறுபவர் களும் தங்களுடைய கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கைகளிலே வளர்ந்துள்ள நகங் களை வெட்டிக் கொள்ளுவது நல்லது. உணவகங் களின் பணியாளர்கள் இந்த நோயினால் பீடிக்கப் பட்டு உள்ளார்களா என அவ்வப்பொழுது மருத்து வச் சோதனை செய்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அமீபா 41

அமீப உறைவடிவங்கள், மலத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டு வெளிச்சூழ்நிலையை அடைவ தால், திறந்தவெளிகளில் மலங்கழிக்கும் வழக்கத்தை அறவே கைவிட்டு நவீன கழிப்பிடங்களைப் பயன் படுத்த வேண்டும்.

சமைக்காமல் உண்ணும் காய்கறிகளையும் பழங் களையும், நன்றாகக் கழுவிச் சுத்தப்படுத்திய பிறகு, உண்ண வேண்டும்.

லயிற்றுளைவினால் பாதிக்கப்பட்டவர்கள் காலங்கடத்தாமல், உடனடியாக மருத்துவம் செய்து கொள்ள வேண்டும். அமீப வயிற்றுளைவினால் பாதிக்கப்பட்ட சிலரது உடலில் அமீப ஒட்டுண்ணி கள் நிலையாகத் தங்கிக் கொண்டு, காலப்போக்கில் அவர்கள் உடலுக்கு எந்தவிதத் தீங்குகளையும் விளை விக்காமல் அமீப ஒட்டுண்ணிகள் அவர்கள் மலத் தின் மூலம் பரவிக் கொண்டேயிருக்கும். இவர்களை நோய்க்கடத்திகள் (carriers) எனக் கூறுவர்.

சிகிச்சை முறைகள். மெட்ரினிடஸோல் (metrinidazole), எமெட்டின் (emctine), க்ளோரோக்யின் (chloro quine) போன்ற நல்ல மருந்துகள் உள்ளன. இவற்றை உபயோகித்துப் பரிபூரண குணமடைய இயலும்.

- து. சு,

நூலோதி

1. Detey & Shah A. P. I. Text Book of Medicine, 1979.

2. Mansons - Bahr P. Manson's Tropical Diseases 15th Edition, Cassel & Co London, 1960.

3. Dr. R. Subramanian "Therapevtics" 7th Edition, Publisbed by Lalitha Publication, Madras, 1976.

அமீபா

குளம், குட்டை போன்ற நன்னீர் நிலைகளில் மூழ்கி

யுள்ள கற்கள், அழுகும் இலைகள் போன்றவற்றின் அடிப்பக்கத்தில் ஊர்ந்து வாழும் நுண்ணுயிரிகளுள் அமீபாவும் (amoeba) ஒன்றாகும். நுண்ணோக்கியின் வழியாகப் பார்க்கும்போது நிறமும், நிலையான உருவமுமற்ற சிறு உயிரியாகத் தோன்றும். இதன் வடிவம் இடைவிடாது மாறிக்கொண்டேயிருக்கும்.

அமீபா

அமீபா புரோட்டியஸ் (Amoeba proteus), கிட்டத் தட்ட 0.25 மி.மீ. அளவுடையது. நிலையான உருவ மற்ற இவ்வுயிரியின் உடற்பொருள் இம்மியளவுப் புரோட்டோப்பிளாசத்தாலானது (protoplasm). உடல் பெலிக்கிள் (pellicle) எனப்படும் மென்சவ் வினால் மூடப்பட்டுள்ளது. உடலின் செல்பிளாசம் (cytoplasm) அடர்ந்த புறப்பிளாசம் (ectoplasm) என்னும் வெளிப்பகுதி ஆகவும் அடர்த்தி குறைந்த அகப்பிளாசம் (endoplasm) என்னும் உட்பகுதியாக வும் வேறுபட்டுள்ளது. அகப்பிளாசம் புறப்பிளாசமா கவும், புறப்பிளாசம் அகப்பிளாசமாகவும் மாறுந் தன் மையுடையன. அகப்பிளாசத்தின் நடுவில் உருண்டை வடிவ நியூக்ளியஸ் (nucleus) உள்ளது. நியூக்ளிய சிலுள்ள உயிர்ப்பொருள் நியூக்ளியப்பிளாசம் (nuclco plasm) எனப்படும். அகப்பிளாசத்தில் சுருங்கு குமிழி (contractile vacuole) ஒன்று காணப்படுகிறது; இது சீராகச் சுருங்கி விரியுந்தன்மையுடையது. அகப்பிளா சத்தில், சுருங்குந்தன்மையற்ற உணவுக் குமிழிகள் (food vacuoles) பல உள்ளன. அமீபாவினால் உட்கொள்ளப்பட்ட உணவுப்பொருள்கள் இவ்வுண வுக்குமிழிகளில் காணப்படுகின்றன.

அமீபாவினால் தன் உடலின் எப்பகுதியையும் பயன்படுத்தி இடப்பெயர்ச்சி செய்ய இயலும். இடப் பெயர்ச்சியின் போது புறப்பிளாசப் பகுதியில் ஒரு பிதுக்கம் ஏற்படுகிறது; இதனுள் அகப்பிளாசம் பாய் கிறது. பின்னர் இப்பிதுக்கம் அளவில் பெரிதாகி ஒரு நீட்சியாக மாறுகிறது. இந்த நீட்சி போலிக்கால் (pseudopodium) எனப்படும். போலிக்காலினுள் உடற்பிளாசம் முழுவதும் பாய்கிறது; அதனால் அமீபா இடம்விட்டு இடம் பெயர்கிறது. இதற்கு