பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதுஎரிபொருளையும் எரிதல் அல்லது கனற்சி நிகழும் பயின் வடிவத்தையும் பொறுத்தே அமைகிறது. உருளை காண்க, கனற்சி அறை; டீசல் பொறி; பொறி; பருமன் திறமை. உட்கனல்

நூலோதி

1, Compressed Air and Gas Institute, Compressed Air and Gas Handbook, 3rd Edition, McGrawHill Book Company, New York, 1966.

2. Scheel, C.F., Gas and Air Compression Machinery, McGraw-Hill Book Company, New York, 1961.

3. Cherkassky, V.M., Pumps, Fans, Compressors, (English Translation), Mir Publishers, Moscow, 1985

அமுக்கிகள்

கலலையின் வளிமம் (gas), ஆவி (vapour) அல்லது இவ்விரண்டின் அழுத்தத்தை உயர்த்தும் எந்திரம் அமுக்க எந்திரம் அல்லது அமுக்கி (compressor) எனப்படுகிறது. அமுக்கியில் வளிமம் செல்லும்போது அது வளிமத்தின் தன்-பருமனைக் (specific volume) குறைத்து அதற்கு அழுத்தத்தை ஊட்டுகிறது. மைய விலகு விசிறி, அச்சுவழிப் பாய்வு விசிறிகளோடு உயர் அழுத்த (fans) ஒப்பிடும்போது அமுக்கிகள் எந்திரங்களாகும். எந்திர விசிறிகள் குறைந்த அழுத்த எந்திரங்களாகும்.

0049 படம் 1. நடமாடும் அமுக்கி அணி பல தேவைகளுக்காக வளிமம், ஆவி ஆகிய வற்றின் அழுத்தத்தை அதிகரிக்க அமுக்கிகள் பயன்

படுத்தப்படுகின்றன (படம் 1). காற்றமுக்கிகள் பல இடங்களில் மிகப் பரவலாகப் பயன்படுகின்றன. இவை பொருள்களைச் சுமந்து செல்லவும், வண்ணப் பூச்சைத் தெளிக்கவும், வட்டைக்குக் (tyre) காற்றடிக் கவும், தூய்மை செய்யவும். அமுக்கிக் காற்றுக்கருவி களை இயக்கிப் பாறைகளைத் துளைக்கவும் தேவை யான உயரழுத்தக் காற்றைத் தருகின்றன. ஆவியாக் சுக் கலனில் (evaporator) உருவாக்கப்பட்ட வளி மத்தைக் குளிர்பதனாக்க அமுக்கி அமுக்குகிறது. அமுக்கிகள் வேதியியல் செயல்முறைகள், வளிமச் செலுத்தம், வளிமச்சுழலிகள் ஆகியவற்றிலும் பிற கட்டுமானப் பணிகளிலும் பயன்படுகின்றன. காண்க, வளிமச்சுழலிகள் (gas turbines), குளிர் பதனாக்கம் (refrigeration).

சிறப்பியல்புகள். அமுக்கியின் இடப்பெயர்ச்சி (displacement) என்பது ஓரலகு நேரத்தில் (unit time) அமுக்கும் உறுப்பு இடம்பெயரச் செய்யும் பருமனாகும். இது ஒரு நிமிடத்தில் அமுக்கப்படும் பருமனடிகளால் (கன அடிகளால்) குறிப்பிடப் படும். அமுக்கப்படும் வளிமம் அடுத்தடுத்துப் பல அமுக்கும் உறுப்புகளிடையே செலுத்தப்படும் போது அமுக்கியின் இடப்பெயர்ச்சி முதல் உறுப்பினுடைய இடப் பெயர்ச்சிக்குக் சமமாகும். அமுக்கியின் கொள்ளளவு அல்லது கொண்மை (capacity) என்பது ஓரலகு நேரத்தில் நடைமுறையில் அமுக்கப்பட்டு வெளியேற்றப்படும் வளிமப்பருமன் அளவைக் குறிப்பிடும். இது அமுக்கியின் நுழைவாய்ப் புறத்தில் உள்ள வளிமக் கலவை, மொத்த வெப்ப நிலை, மொத்த அழுத்தம் ஆகிய நிலைமைகளின் கீழ் ஒரு நிமிடத்தில் வெளியேற்றப்படும் பருமனடிகளால் குறிப்பிடப்படும். கொள்ளளவு எப்போதும் நுழை வாய்ப் புற வளிமம் அல்லது காற்றின் நிலைமைகளில் வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட செந்தர நிலைமைகளின் கீழ் குறிப்பிடப்படுவதில்லை.

காற்றமுக்கிகளின் இடப்பெயர்ச்சி வளிமண்டலக் காற்று நிலைமைகளில் குறிப்பிடப்படும். வளிமண் டலக் காற்றுநிலை என்பது ஒரு குறிப்பிட்ட இடத் தில் வளிமண்டலத்தில் உள்ள காற்றின் நிலைமை யாகும். ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு மாறும்போது இவ்விடத்தின் உயரமும் அழுத்தமும் வெப்ப நிலையும் மாறுவதால் கொள்ளளவு சீரான அல்லது செந்தர நிலைமையின் கீழ் குறிப்பிடவேண்டி தேவை ஏதும் இல்லை. செந்தரக்காற்று என்பது 68' F 13.7 psig வளிமண்டல அழுத்தம், 36% சார்பு ஈரப் பதம் உள்ள காற்றாகும். வளிமத் தொழிலகங்கள் 60°F வெப்பநிலைக் காற்றைச் செந்தரக் காற்றாகக் கொள்கின்றன.

வகைகள். அமுக்கத்தை ஏற்படுத்தும் இயக்க முறை களைப் பொறுத்து அமுக்கிகள் ஊடாட்ட, சுழல்

48 அமுக்கிகள்