பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாரை, மையவிலகு, அச்சுப்பாய்வு அமுக்கிகள் (reci. procal, rotary, jet, centrifugal, axial compressors). என வகைப்படுத்தப்படுகின்றன. அமுக்கப்படும் வளி மத்தின்மேல் எந்திர உறுப்புகள் செயல்படும் முறை யைப் பொறுத்து அமுக்கிகள் நேரிடப்பெயர்ச்சி (positive displacement) அல்லது இயங்குநிலை (dynamic) அமுக்கிகள் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன. நேரிடப்பெயர்ச்சி அமுக்கிகளில் தொடர்ந்து பாயும் வளிமப்பருமன் ஒரு மூடிய கலனில் கட்டுப்படுத்தப்படு கின்றது. மூடிய கலனில் பருமன் குறையக் குறைய வளி மத்தின் அழுத்தம் உயர்ந்து கொண்டே போகும் இயங்குநிலை அமுக்கிகளில் சுழலும் இதழ்கள் (vanes) அல்லது வாளிகள் (buckets) பாய்மத்துக்கு அழுத்தத் தையும் விரைவையும் (velocity) ஊட்டுகின்றன.

அமுக்கிகள் 49

வெளியேற்றும் அடியின்போது வெளியேற்றப்படு கிறது. அழுந்துருள் அல்லது உலக்கையின் ஒருபுறம் மட்டும் வளிமத்தை அமுக்கப் பயன்பட்டால் இந்த அமுக்கி ஒற்றைச் செயல்பாட்டு அமுக்கி எனப்படும். அழுந்துருள் அல்லது உலக்கையின் இருபுறமும் வளி மத்தின் மீது செயல்பட்டால் அது இரட்டைச் செயல் பாட்டு அமுக்கி எனப்படும். ஒற்றைச் செயல்பாட்டு அமுக்கியைப்போல ஒவ்வோர் உருளைக்கும் இரு மடங்கு வளிமத்தை இரட்டைச் செயல்பாட்டு அமுக்கி வெளியேற்றும்.

ஒற்றைக்கட்ட அமுக்கிகள் (Single stage Compress ors). ஒவ்வோர் உருளையிலும் உலக்கையின் ஒவ் வொரு சுழற்சியின்போதும் அது நுழைவாயிலிருந்து

(அ) படம் 2. அமுக்கி உருளைகள் (ஆ)

அ. நீரால் குளிர்வித்தது ஆ. காற்றால் குளிர்வித்தது

ஊடாட்ட அமுக்கிகள் நேரிடப் பெயர்ச்சி வகை யின. இவற்றில் ஒன்று அல்லது இரண்டு உருளைகள் அமைந்திருக்கும். உருளைகளில் உள்ள உலக்கைகள் அல்லது அழுந்துருள்கள் இணைப்புத் தண்டால் (connecting rod) ஒரு வணரித் தண்டுடன (crank shaft) இணைக்கப்படும். இந்த வணரித்தண்டு சுழலும் பேரிது அழுந்துருள் முன்னும் பின் னும் இயங்கும். ஒவ்வோர் உருளையிலும் ஒரு நுழைவாய் இதழும் வெளியேற்றும் இதழும் எந்திரப்பகுதிகளைக் குளிர் விக்கும் அமைப்புகளும் இருக்கும் (படம் 2). உறிஞ் சல் அடியின்போது (suction stroke) உருளைக்குள் வளிமம் உறிஞ்சப்படும். உறிஞ்சல் அடியின் இறுதி யில் அழுந்துருள் அல்லது உலக்கை எதிர்த்திசையில் திரும்பும். அப்பொழுது வளிமம் அமுக்கப்பட்டு,

வெளியேற்றவாய் வரை வளிமத்தின் அழுத்தத்தை உயர்த்துகின்றது.

இருகட்ட அமுக்கிகளில் முதல் உருளையில் வளி மம் ஓர் இடைநிலை அழுத்தத்துக்கு அமுக்கப்படும். மறு உருளையில் வளிமத்தின் அழுத்தம் இறுதி வெளி யேற்ற அழுத்தத்திற்கு அமுக்கப்படும். இரு கட்டங் களுக்கு மேல் அழுத்தம் உருவாக்கப்பட்டால் அந்த அமுக்கி பல கட்ட அணி (multistage unit) எனப்படும்.

குத்து, கிடைநிலை (vertical and horizontal) அமுக்கிகள் ஒற்றை உருளையையோ பல உருளை களையோ கொண்டு அமையலாம். கோண நிலை அமுக்கிகள் பல உருளைகளை உடையவை. இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிடை அல்லது