பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுக்கினாக் கிழங்கு

2. Scheel, C.F., Gas and Air compression Machinery, McGraw-Hill Book Company, New York, 1961.

3. McGraw-Hill Encyclopaedia of Science & Technology, Vol.3, 4th Edition, McGraw-Hill Book Company, New York, 1977.

அமுக்கிளாக் கிழங்கு

தாவரவியலில் வித்தேனியா சோம்ணிஃபெரா Withanla somnifera dunal) என்று பெயர். அல்லி இணைந்த (gamopetalous) இருவிதையிலைக் குடும் பங்களில் ஒன்றான சோலனேசியைச் (Solanaceae) சார்ந்தது. இக்கிழங்கு அமுக்குரா (Amukkura). அம்குலாங் (Amkulang), அமுக்குராம் கிழங்கு (Amukkuram Kilangu), அமுலாங்-காலுங் வேர் (Amulang-Kalung root), அஸ்வகந்தி (Aswagandhi) எனப் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. இருந்தபோதிலும் வணிகத் துறையில் அஸ்வகந்தா (Aswagandha) என்றே கூறப்படுகின்றது. இந்தியா வில் வறண்ட பகுதிகளிலும், வரப்புகளிலும், தரிசு நிலங்களிலும் சாதாரணமாக வளர்கின்றது. மருத்துவச் சிறப்பு வாய்ந்த வேர்களுக்காக இது ஓரளவிற்குப் பயிராக்கப்படுகின்றது.

சிறப்புப் பண்புகள். இது கேசங்களை உடைய ஒரு புதர்ச்செடி (shrub); ஏறக்குறைய 2 மீ. உயரம் வரை வளரக் கூடியது. இலைகள் மாற்றிலைஅமைவு கொண்டவை (alternate phyllotaxy); அகலமான முட்டைவடிவானவை (ovate); ஏறக்குறைய 10 செ.மீ. நீளமும், இதற்குச் சற்றுக் குறைவான அகல மும் உடையவை. மலர்கள், இலைக் கோணங்களில் தனித்தோ, ஃபேசிக்கில் (fascicle) மஞ்சரியிலோ அமைந்திருக்கும்; இவை இருபாலானவை (bisexual), ஆரச்சமச்சீரானவை (actinomorphic). புல்லிவட்டம் மணிவடிவத்தில் (campanulate) 5-6 பற்களுடனிருக் கும். அல்லிவட்டம் மணிவடிவத்தில் 3 - 6 பிளவு களைக் கொண்டிருக்கும். மகரந்தத் தாள்கள் 5 உண்டு; சூற்பை இரு அறைகளைக் கொண்டது; மேல் மட்டத்திலமைந்தது. சூல்கள் எண்ணற்றலை; அச்சுச்சூல் அமைவு முறையில் அமைந்திருக்கும். கனி உருண்டையான தீங்கனி (berry) வகையைச் சார்ந் தது; முதிர்ச்சியடைந்த கனி ஆரஞ்சு சிவப்பு நிறத் தைக் கொண்டது; நிலைத்த புல்லி வட்டத்தினால் (persistent calyx) சூழப்பட்டிருக்கும். விதைகள் சிறியவை, மஞ்சள் நிறமானவை, சிறுநீரக வடிவ முடையவை (reniform). இதன் வேர்கள் தடிப்பாக வும், சதைப்பற்றுடனும், வெளிர் பழுப்பு நிறத் துடனும் இருக்கும்.

பயிரிடும் முறை. இந்தியாவில் இந்தூர் (Indore) அருகிலுள்ள மனாசா (Manasa) என்ற ஊரைச்

10020 NoOLL20

அமுக்கிளாக் கிழங்கு (அசுவகந்தி)

2. மிலார் 2. பூவின் விரிப்புத் தோற்றம் 3. குலகம் 4. மகரந்தத்தாள் 5.புல்லிவட்டத்தினால் சூழப்பட்ட கனி 7. தூவிகள்

2

7

5. ரூலகமும்

1

56