பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுங்காப் பாய்வு 57

சுற்றிலுமுள்ள கிராமங்களில் ஏறக்குறைய 1600 ஹெக் டேர் நிலப்பரப்பிலும் இராஜஸ்தானிலும் சாகுபடி யாகின்றது. மற்றப் பயிர்களைச் சாகுபடி செய்ய முடியாத நிலங்களில் எல்லாம் இதை எளிதில் பயிராக்க முடியும். ஒரு ஹெக்டேருக்கு நடவு செய்ய 5 கிலோ கிராம் விதைகள் தேவைப்படும். மழை வருவதற்கு முன்னதாக விதைகளை ற்றங்காலில் தூவ வேண்டும். நாற்றுகள் ஒரு குறிப்பிட்ட உயரம் அடைந்தவுடன் அவற்றைக் களைந்து 60 x 60 செ.மீ இடைவெளி விட்டு நடுதல் வேண்டும். உரமிடுதல், களை அகற்றுதல், ஆகியவை வேண்டியதில்லை. நீர்ப் பாசனம் அதிகம் தேவையில்லை. இவை டிசம்பர் மாதத்தில் பூத்துக் காய்க்கும். சனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை அறுவடை தொடர்ந்து செய்யப் படுகின்றது.

அறுவடையின்பொழுது, முழுச் செடியை வேரு டன் களைந்து, பிறகு வேர்ப்பாகம் மட்டும் தண்டுப் பாகத்திலிருந்து வெட்டியெடுக்கப்படுகின்றது. பிரித் தெடுத்த வேர்கள் சிறு துண்டுகளாக நறுக்கி உலர்த் தப்படுகின்றன. சிலசமயங்களில் முழுலேர்களை அப் படியே உலர்த்துவதுமுண்டு. உலர்த்தப்பட்ட வேர் களைக் கட்டையினால் அடித்து அவற்றில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற மண்ணையும் பக்கவேர்களையும் அகற்றுவார்கள்.

பலவகையான வகை பொருளாதாரச் சிறப்பு. வேரிலிருந்து 13-15 வகை யான அல்க்கலாய்டுகள் (alkaloids) பிரித்தறியப் பட்டிருக்கின்றன. இவற்றிலிருந்து மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. எல்லா அல்கலாய்டுகளுக்கும் குடல், கருப்பை, சுவாசக் குழாய், உணவுக்குழாய், இரத்தக்குழாய் ஆகிய வற்றில் ஏற்படுகின்ற இசிப்பைக் (spasm) குணப் படுத்தும் பொதுவான தன்மை உண்டு. இது மன அமைதி உண்டாக்கும் மருந்தாகவும் (sedative) பயன் படுகின்றது; இளைப்புநோய்க்கு (asthma) மருந்தா கின்றது; சொற் சிரங்குகளையும் (scabies), குடற் புண்ணையும் (ulcer) குணப்படுத்துவதற்குப் பயன் படுகின்றது; குழந்தைகளின் உடல் கரைவு நோய்க்கு (marasmus ) மருந்தாகக் கொடுக்கப்படுகின்றது. கருச் சிதைவு ஏற்படுத்தும் தன்மை (abortifacient) இதற் குண்டு என்று கருதப்படுகின்றது. கசப்புத் தன்மை யுள்ள இலைகள் காய்ச்சலுக்கு மருந்தாகும். இவற்றின் பசை மேகநோயால் (syphilis) உண்டாகின்ற புண் களுக்கு மருந்தாகின்றது. இலைகளிலுள்ள விதாஃ பெரின் 'A' (withaferin 'A') என்ற அல்கலாய்டு பாக்டீரியா கொல்லியாகவும், வீக்கததைக் குறைப் பதற்கும் (anti - inflammatory), கட்டியெதிர்ப் பியாகவும் (antitumour), கீல்வாதத்திற்கு மருந்தாக வும் (anti - arthritic) பயன்படுகின்றது. இளம் தண்டுகள் கூறியாகச் சமைத்து உண்ணப்படுகின்றன.

இதன் பட்டையில் பலவகையான அமினோ அமிலங் கள் அடங்கியிருக்கின்றன. விதைகள் மென்று (mast -catory) சாப்பிடப்படுகின்றன.

நூலோதி

1. Atal & Schwarting. Econ. Bot., 15 Vol, 1961.

2. Clarke, C. B. in Hook. f. Fl. Br. Ind. Vol. IV. 1883.

3. Gamble, J. S. Fl. Press. Madras. Vol. II, Adlard & Sons, Ltd., London, 1921.

4. The Wealth of India. Vol. X. CSIR Publ., New Delhi, 1976.

அமுங்காப் பாய்வு

அடர்த்தி மாறுபாடு இல்லாத பாய்ம இயக்கம் அமுங்காப் பாய்வு (incompressible flow) எனப் வளிமம் படும். நீர்மம், இரண்டும் பாய்மத்தில் அடங்கும். இவற்றில் அமுங்காமல் ஓடுவது நீர்மமே.

நீர்மமும் வளிமமும் பெரும்பாலும் ஒரே புற நிலைப் பண்புகளைக் கொண்டவை. வளிமம் அதன் தொடக்கப் பருமன் எவ்வளலாக இருப்பினும், எந்த மூடிய வெளியிலும் முழுவதும் பரவியிருக்கும். மூடிய வெளியின் பருமன் குறைந்தால். வளிமம் அமுங்கிக் கொள்ளும். நீர்மம் இவ்வாறு அமுங்காது. நடை முறையில் நீர்மங்களை அமுக்க முடியாதவையாகவே கருதுகின்றோம். குறைவான திசைவேகம் (velocity) உள்ள பாய்வில், இது முற்றிலும் உண்மை. திடீர்த் திசைவேக மாறுபாடுகள், நீர்மங்களிலும் ஓரளவு அமுக்கத்தை அல்லது விரிவை உண்டாக்குகின்றன.

நீர்மம், புவிஈர்ப்பு விசையின் காரணமாக, ஒரு திறந்த கலத்தின் தாழ்வான பகுதிக்கு ஓடி நிற்கின் றது. இப்பண்பு வளிமத்தினின்று வேறுபட்டதாகும். வளிமம் சுருங்கியோ, விரிந்தோ மூடிய கலத்தின் எல்லாப் பகுதியிலும் பரவிவிடும். வளிமம் குறை வான வேகத்தில் பாயும்போது, நீர்மத்தைப் போன்று அமுங்காத பாய்வு உடையதாகக் கருதலாம்.

வேக ஒரு பாயமத்தின், அழுத்த அலை பரவும் திசை வீதத்தை ஒப்பிடும்போது, பாய்மத்தின் பாய்வுத் திசைவேகம் குறைவாக (நான்கில் ஒரு பங் கிற்குக் குறைவாக) இருந்தால் அப்பாய்மம் அமுங்க முடியாத நிலையில் இருப்பதாகக் கருதலாம்.

.-2-8