பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமெரிக்க ட்டிரிப்பனோசோமியாசிஸ்

கசை இழை (undulatiog membrane) தொடங்கி, ட்ரிப்பனோசோமா குரூசியின் உடலின் ஓரம் லளைந்து, மேல் முனைவரை சென்று, ட்டிரிப்பனோசோமா வின் மேல் முனையையும் விட நீண்டு காணப்படு கிறது. இதன் உடலின் மத்தியில் மையக் கரு இருக் கிறது. இதற்குக் கீழே கீழ்முனைக்கருகில், நீள உருண்டை வடிவத்தில் கைனிட்டோபிளாஸ்ட் இருக் கிறது.

உண்ணிகள் இரத்தத்தை உறிஞ்சும்போது ட்டி ரிப்போமாஸ்ட்டிகோட் வடிவில் உள்ளவை, உண்ணி களின் உடலினுள் சென்று விடுகின்றன. இங்கு அமாஸ்ட்டிகோட் வடிவடைகின்றன. அமாஸ்ட்டி கோட் வடிவமைப்பில் உள்ளவை நீள உருண்டை யானவை. இவை சுமார் 2-4 மி.மீ. (mm)விட்டமுடை யவை. இவற்றின் உடலின் மத்தியில் மையக் கருவும், கைனிட்டோப்பிளாஸ்டும் உள்ளன. ஆனால் இப்படி வத்தில் வலைக் கசை இழை இருப்பதில்லை. இப்படி வம் முழு வளர்ச்சியடைந்து இனப்பெருக்கமடை கின்றது.

ட்டிரிப்பனோசோமா குரூசியின் வாழ்க்கைச் சுழல். ட்டிரிப்பனோசோமா குரூசியின் வாழ்க்கைச் சுழல் (life cycle) மனித இனம் அல்லது சில விலங்குகள், பின் ரெடுவிட் உண்ணிகள், இவற்றின் இடையே சுழன்று வருகிறது. மனிதன் மூலம் இவ்வொட் டுண்ணிகள் பரவுவதில்லை. ஆனால் ரெடுவிட் உண்ணிகள் இவ்வொட்டுண்ணிகளை மனிதரிடையே பரப்பி வருகின்றன. சாகாஸ் நோயால் பாதிக்கப் பட்டவர்களிடமிருந்து ரெடுவிட் உண்ணிகள் ட்டிரிப் பனோசோமா குரூரியை மற்றவர்களுக்குக் கடத்தவும் செய்கின்றன.ரெடுவிட் உண்ணி நோயுற்றவரைக் கடித்துத் தோலின் வழியே இரத்தத்தை உறிஞ்சும் போது நோயுற்றவரின் புற இரத்த ஓட்டத்தில் ட்டிரிப்போமாஸ்ட்டிகோட் வடிவத்தில் உள்ள ஒட்டுண்ணிகள், ரெடுவிட்டின் வயிற்றினுள் செல் கின்றன. அங்கு அவை ஏமாஸ்டிகோட் வடிவமடை கின்றன. ஏமாஸ்டிகோட் வடிவம் முழு வளர்ச்சி யடைந்ததும் இரு சமபாகங்களாக நீள வாக்கில் பிரிந்து இனப்பெருக்கம் செய்கின்றது. இவை எபிமாஸ்ட்டிகோட் (epimastigote) வடிவமைந்து விடுகின்றன. இவ்வடிவமே முன்பு கிரித்திடியல் நிலை என்றழைக்கப்பட்டது.

கைனிவிட்டோபிளாஸ்ட் எபிமாஸ்ட்டிகோட் வடிவத்தில், மையக் கருவின் மேற்புறத்தில், மேல் முனைக்கருகில் காணப்படுகிறது. வலைக்கசை இழை, கைனிட்டோபிளாஸ்ட்டிலிருந்து தொடங்குகிறது. இவ்வடிவ நிலை வரை, ரெடுவிட் உண்ணியின் உணவுப் பாதையின் மேற்பகுதிகளிலிருக்கும் இவ் வொட்டுண்ணிகள் எபிமாஸ்ட்டிகோட் வடிவத்தில்

உணவுப் பாதையின் பின் பகுதிகளுக்கு வந்து விடு கின்றன. இங்கு இலை, நீள வாக்கில் பிரிந்து மேலும் பெருக ஆரம்பிக்கின்றன. சுமார் 8-10 நாள்களில் இவை முழு வளர்ச்சியடைந்து "ட்டிரிப்போமாஸ்ட்டி கோட்” வடிவமடைந்துவிடுகின்றன. இந் நிலையில் இவை ரெடுவிட் உண்ணிகளின் கழிவில் வெளியேற் றப்படுகின்றன.

ரெடுவிட் உண்ணிகள் மனிதரின் இரத்தத்தை உறிஞ்சும் இயல்புடையவை, ரெடுவிட் உண்ணிகள் தென் அமெரிக்காவில் மட்டுமே பெரும்பான்மையாகக் காணப்படுகின்றன. ரெடுவிட் உண்ணி மனிதரைக் கடிக்கும்போது, தோலைச் சொறிவதால் தோலின் மீது மிகச்சிறிய சிராய்ப்புகள் உண்டாகின்றன. இரத் தத்தை உறிஞ்சும்போது. ரெடுவிட் உண்ணிகள் கழிவுகளை வெளியேற்றுகின்றன. இக் கழிவுகளின் வழியே, ட்டிரிப்போமாஸ்டிகோட் வடிவங்கள் மனி தனின் உடலினுள் நுழைந்துவிடுகின்றன. கடிவாயைச் சொறிந்த பின் அதே கையால் கண்ணைக் கசக்க நேரிட்டால், கையில் ஒட்டியிருக்கும் கழிவுப்பொருள் கண்ணில் பட்டு விழிமுன் படலத்தின் வழியாகவும் (conjunctiva)ட்டிரிப்போமாஸ்ட்டிகோட்டுகள், மனித உடலினுள் நுழைந்து விடுகின்றன.

மனிதனின் உடலுள் நுழைந்த டிரிப்போமாஸ்ட்டி கோட்டுகள் திசுக்களை ஆக்கிரமித்துக் கொண்டு அங்கு ஏமாஸ்டிகோட்களாக மாற்றமடைகின்றன. ஏமாஸ்டிகோட்கள் முழு வளர்ச்சியடைந்து இரு சமபிரிவுகளாக நீள வாக்கில் பிரிந்து புரோ மாஸ்ட்டிகோட்களாக (promastigote) மாறுகின்றன. புரோமாஸ்ட்டிகோட் வடிவமைப்பில் கைனிட்டோ பிளாஸ்ட், மையக் கருவிற்கு மேற்பகுதியில் இருக் கிறது. கசை இழை, புரோமாஸ்ட்டிகோட்டின் மேல் முனையிலிருந்து நீண்டு காணப்படுகிறது. ஆனால் இது வலைக்கசை இழை (undulating membrane) போலில்லாமல், வளைவுற்றுச் சிறிது நீண்டிருக்கிறது. ஒட்டுண்ணியின் உடல் நெடுக வளைந்து இருப்ப தில்லை. புரோமாஸ்ட்டிகோட் படிலத்தில் முழு வளர்ச்சியடைந்ததும் இவை எபிமாஸ்டிகோட்களாக மாறுகின்றன. இப்படிவ மாறுதல்கள் அனைத்தும் புற இரத்த ஓட்டத்திலேயே நிகழ்கின்றன. எபி மாஸ்ட்டிகோட் முழு வளர்ச்சியடைந்து ட்டிரிப்போ மாஸ்ட்டிகோட்டுகளாக மாறிவிடுகின்றன.

ஆர்மடில்லோ எனப்படும் எறும்பு தின்னி இனத் தைச் சேர்ந்த விலங்குகளிடத்தும், ஒபோஸம் (opossum) எனப்படும் விலங்குகளிடத்தும் இந்த ஒட்டுண் ணிகள் காணப்படுகின்றன. மனிதனை இரண்டாம் பட்சமாகவே இவை பாதிக்கின்றன. பூனை, நாய், ஒளவால், காட்டு எலி போன்றவை இயற்கையாகவே டிரிப்பனோசோமா குரூசியால் பாதிக்கப்படுகின்றன.

64