உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 ஆய்வுக்கலங்கள்‌

50 ஆய்வுக்கலங்கள் 1 b 2 05 8 in 13 16 12 09 7)10 19 18 படம் 4. ஆய்வுக்கலத்தின் துணைக்கருவிகள் திசைகாட்டி ச. 1. மின்னாக்கி 2. எக்கி 3. ஆற்றல் மாற்று எதிரொலிமானி 7. இருப்பிட அளவி 8. எதிரொலிமானி 9. குடைவி 10. சுவ்விகள் 11. பக்க வரைவுச்சோனார் அதிர்வலைப் பதிவான் 14. சேற்றைத் துளைக்கும் கருவி 13. 18. காந்தமானி உணர்வி 19. பக்க அளவு சோனார் ஈர்ப்பி. களைப் பற்றி ஆய்வாளர்கள் கவலைப்படத் தேவை யில்லை. இப்படகுகளைக் கொண்டு, கம்பியில்லா மல் கடத்தப்படும் ஒலி அலைகளின் மூலம், கணிப் பிட்டு இருக்கை காணும் புதிய கருவிகளைக்கொண்டு கரை யினின்று 15 கி.மீ.க்கு அப்பால் மிகவும் குறுகிய இடைவெளியில் கூட அளவாய்வு நடத்த முடியும். இத்தகைய சிறிய சிறிய ஆய்வுக்கலங்களைப் பயன் படுத்தி, ஆய்வு நடத்தக் கடல் ஆய்வுக் கழகங்கள் தனித்தனியே அவற்றின் தேவைக்கும் வசதிக்கும் ஏற்ப அமைக்கவும் மாற்றவும் செய்து கொள்கின் றன. இவை போன்ற சிறிய கலங்களைக் கொண்டு ஆய்வு நடத்துவதில் தேசியக் கடலியல் கழகம் வாடகைக்கு அமர்த்துவதையே ஒரு சிறப்பான முறை யாகக் கருதுகிறது. ஆய்வுக்கலங்களைப் பயன்படுத்துதல். இந்தியா பெரிய ஆய்வுக் கலங்களைச் சொந்தமாக 1976இலி ருந்து பயன்படுத்தி வருகிறது. நடைமுறையில் தெரிய வந்ததென்னவெனில் 42 இலிருந்து 78 விழுக்காட் டிற்கு மேல் கவேஷனி, சாகர் கன்யா போன்ற கலங் களைப் பயன்படுத்த முடியவில்லை என்பதே. ஆனால் மங்கனிசு கனிம முடிச்சுக்களைக் கண்ட றியப் பயன்படுத்திய வாடகைக்கலங்களில் 89 விழுக்காடு வரை பயன்படுத்த முடிந்தது. ஓர் ஆய்வுக்கலத்தின் முழுப்பயனையும் அடையத்தடை யாக இருப்பது இரண்டு அல்லது மூன்று வாரத் திற்கு ஒருமுறை கப்பலைத் துறைமுகத்திற்குக் கொண்டு வரும்படியாகத் திட்டமிடுவதேயாகும். இதைத் தவிர்க்கக் கப்பலிலேயே தூய நீரைக் கடல் நீரினின்று காய்ச்சி வடிக்கும் கருவி, சலவைக் கருவி கள், உணவுப் பொருள்களைப் பாதுகாக்கப் பெரிய குளிர்சாதன அறைகள் ஆகியவற்றுடன் அறிவியல் உணர்கம்பி 12. காந்த 8. வரைபவகை அளவுப்பதிவான் 15. ஓட்டுநர் பகுதி 16. நீரியல் ஒலிப்பான் 17.அதிர்வலைவி கருவிகளையும், கப்பல் எந்திரங்களையும் சீர்ப்படுத் தும் வல்லுநர்களைக் கலங்களில் ஏற்றிச் செல்லுதல், அவர்களுக்குத் தேவையான செப்பனிட உதவும் எந் திரங்களையும், ஈருவிகளையும் கலங்களிலேயே பொருத்துதல் முதலிய வசதிகளையும் உருவாக்கி கலம் 6 வாரத்திற்குக் குறையாதபடி பயன்படுத்தக் கூடியவாறு அதன் வலுவையும் பெருக்கினால், ஆய் வுக் கலங்களைப் பயன்படுத்தும் அளவின் விகிதத்தை அதிகரிக்கச்செய்யலாம். கடந்த ஆண்டுகளில் ஆய்வுக் கலங்களைப் பயன்படுத்திய அறிவியல் துறைகளை ஒப்பிடும்பொழுது அவற்றில் நில இயலாய்வே மிகுதி யாகக் காணப்படுகிறது. கனிம எண்ணெய் மற்றும் இயற்கை வளிம ஆணையமே தேவைக்கு அதிகமாகக் கலங்களைப் பயன்படுத்தியதால், அந்தக் கலங்களைக் கண்காணிக்கும் செலவுத் தொகையில் பெரும் பகுதியை அக்கழகமே ஏற்றுக் கொண்டது. இரண்டு அல்லது மூன்று அறிவியல் கழகங்களோ அறிவியல் கழகத் தொழிலகங்களோ ஒவ்வொரு ஆய்வுப் பயணத்திலும் தேவைக்கு ஏற்பச் சேர்ந்து அதன் செலவைப் பகிர்ந்து பயன்படுத்துமாறு திட்டமிட் டால், ஆய்வுக் கலங்களை அரசின் பொறுப்பில் ஏற்று நடத்துவது சிக்கனமாக அமையும். மேலும், இத் திட்டம் நிறைவேற்றப்படின் இத்தகைய தொழில் கங்களும் உற்பத்திக் கழகங்களும் பண உதவி செய்யும். இது அறிவியல் கழகங்களுக்குப் பேருதவி யாக அமையும், அறிவியல் வல்லுநர்கள் ஓர் அறிவியல் கழகத்தில் கிடைக்காத வசதி களை, மற்றொரு கழகத்திலோ தொழிலகத்திலோ சேர்ந்து வேலை செய்வதனால் புதிய கருவிகளைக் கண்டு அறிந்து கொள்ள வாய்ப்பும், அடுத்த துறை யில் வல்லுநர்களோடு கலந்தாய்ந்து அவர்களின்