உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயமுறைகள்‌, நிலக்கோள 53

30° வ 20° 63 100வ நடுக்கோடு நிறுவப்பட அகலாங்கு படம் 3.நிலக்கோள அகலாங்குகள் தேவையான மற்றொரு ஆயமும் வேண்டும். அகலாங்கு நீ கொண்ட வட்டக் கோடு தனி வட்டமாகப் படம் 2இல் காட்டப்பட்டுள்ளது. இவ் வட்டத்தில் அமைந்துள்ள P1,Q,R, ஆகிய புள்ளிகள் யாவற்றுக்கும் கிடை ஆயம் ஒன்றே. அது p ஆனால் கிடை ஆயத்தைத் தெளிவாக வரையறுக்கக் கிடைத்தது போன்று தெளிவான அடிப்படை, மற்றொரு ஆயத்தை வரை யறுப்பதற்கு அமையவில்லை. எனவே, இங்கு நாம் ஓர் உத்தியை மேற்கொள்ள வேண்டியுள்ளது. தெளிவாக வரையறுக்கப்பட்டதொரு புள்ளி (அல்லது அச்சு) காணப்படாத நிலையில், நாமாகவே ஏதாவது ஒரு புள்ளியை அடிப்படையாகக் கொண்டு ஆயமுறை ஒன்றை உருவாக்க இயலும். 01ஐ மைய மாகக் கொண்ட கிடை வட்டத்திற்கு O P1 என்ற கோட்டை அடிப்படை ஆரமாகக் கொண்டால், இவ் ஆரத்திற்கும் 0 Q1 என்ற ஆரத்திற்கும் இடையே உள்ள கோணத்தைக் குறிப்பிடுவதன் வாயிலாக Q1 என்ற புள்ளியின் இருப்பிடத்தை முற்றாக வரை யறுக்க முடிகிறது. இவ்வாறே P,Q, R, கோணம் R, என்ற புள்ளியின் இருப்பிடத்தை முற்றாக வரை யறுக்கிறது. இங்கு முற்றான வரையறை என்பது P என்ற புள்ளி வரையறுக்கப்படும்போதே உண்மை யில் முற்றான வரையறுப்பாக இருக்க முடியும். மீது மற்றும், கோளத்தின் புறப்பரப்பில் அதன் அச்சு இணையும் இரு புள்ளிகளும் துருவங்கள் (poles) என அழைக்கப்படும். இவ்விரு துருவங்கள் வழியாகவும் கோளத்தின் புறப்பரப்பின் வரையப்படும் வட்டங்கள் யாவும் கோள அச்சையே விட்டமாகக் கொண்ட பெருவட்டங்களாகும். இவை ஒவ்வொரு கிடைக்கோட்டையும் சந்திக்கும் புள்ளிகளில் அவற்றுக்கிடையேயுள்ள கோணம் செங்கோணமாக விளங்கும். இத்தகைய பெரு ஆயமுறைகள், நிலக்கோன 53 வட்டங்கள் ஒவ்வொன்றும், நெடுவரை (meridian என அழைக்கப்படுகின்றது. நெடுவரைகள் ஒவ்வொன்றும், நிலக்கோளத்தின் இரு முனை வழியாகச் செல்வதுடன் ஒவ்வொரு அகலாங்கு வட்டத்தையும் ஏதாவது ஒரு புள்ளியில் சந்திக்கும். எனவே, படம் 2இல் காட்டப்பட்டுள்ள நிலக்கோளக் கிடைவிட்டத்தின் மீது காட்டப் பட்டுள்ள P1,Q,R1 முதலான புள்ளிகள் ஒவ் வொன்றின் வழியாகவும் இரு நெடுவரைகள் வரைய இயலும். இந்நெடுவரைகளுக்கு இடையேயுள்ள இடைவெளி நிலையான தொலைவன்று. எனவே, இவ் விடைவெளி தொலைவின் அளவீடுகளால் குறிப்பிடப் படாமல் அவைசந்திக்கும் முனையில் இவற்றுக்கிடைய யுள்ள கோண அளவீட்டால் குறிப்பிடப்படுகிறது. அதாவது P1,Q,இவற்றின் வழியே செல்லும் நெடு வரைகளுக்கு இடையேயுள்ள கோண இடைவெளி 0 எனப்படம் 2இல் காட்டப்பட்டுள்ளது. அளவீடு களுக்கு அடிப்படையாக P, வழியே செல்லும் நெடுங் கோட்டை வைத்துக் கொண்டால், Q1 வழியே செல்லும் நெடுவரையை 6 நெட்டாங்கு (longitude) எனலாம். இதனை முன்னர் தீர்க்க ரேகை என வழங்கினர். எனவே Q1 என்ற புள்ளியின் ஆயங் களை அப்புள்ளி வழியே செல்லும் அகலாங்கு நெட்டாங்கு வாயிலாக வரையறுச் க்கலாம். கிரீன்விச் N 800 80° S ஜபல்பூர் செங்கல் பட்டு படம் 4.1 கிரீன்விச் நெடுவரையும் செங்கல்பட்டு, நெல்லூர், ஜபல்பூர் அமையும் நெட்டாங்கும் இலண்டனுக்கு அருகிலுள்ள கிரீன்விச் என்னு மிடத்தில் இராயல் வானியல் காட்சியகம் (royal astronomical observatory) அமைந்துள்ளது. அந்த இடத்தின் நெடுவரையை நெட்டாங்குகளின் தொடக் கமாக வைத்துக் கொள்வதெ 1884ஆம்- ஆண்டு அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டன.