உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயமுறைகள்‌, படிகவிளக்க 55

நெட்டாங்குகளுக்கிடையேயுள்ள தொலைவு, அகலாங் குக் கோணத்தை ஒட்டி மாறுபடும். த அகலாங்குக் கோட்டில் இடைவெளி = Cos p நில நடுக்கோட்டில் இடைவெளி என்ற உறவைப் பயன்படுத்தி இடைவெளித் தொலைவுகளைக் கணக்கிடலாம். எவ்விரு புள்ளி களுக்கும் இடையிலுள்ள மிகக் குறைந்த தொலைவு அவ்விரு புள்ளிகளின் வழியே செல்லும் பெருவட்டத் தின் போக்கிலேயே இருக்கும். இத்தொலைவைக் கோண ஆயங்களிலிருந்து கணக்கிடும் முறைகளைக் கோளக் கோணவியல் (spherical trigonometry) எனும் துறையில் அறியலாம். நிலக்கோள அச்சு 23° 30' சாய்ந்துள்ளது.சில குறிப்பிட்ட அகலாங்குகள் தனித்தனிப் பெயர்களில் வழங்குகின்றன. அவை பின் வருமாறு. எண் பெயர் 1) வடதுருவம் 2) ஆர்க்டிக் வட்டம் 3) கடகவரை 4) நிலநடுவரை 5) 6) 7) மகரவரை அன்ட்டார்டிக் வட்டம் தென்துருவம் அகலாங்கு வ 90° 00' 66° 30° வ 23° 27' 0° 23° 27' Gø 66° 30' Q 90° 00' G5 கோள வடிவான நிலக்கோளத்தின் புறப்பரப் பைச் சமதளத் தாள்களில் நிலப்படங்களாக வடிப் பதில் சிக்கல்கள் பல; இவற்றை நிலப்படவியலில் (cartography) காணலாம். இவற்றின் விளைவாகச் சில பொய்மைத் தோற்றங்களைத் தவிர்க்க முடிவ தில்லை. எடுத்துக்காட்டாகச் செவ்வக உலகப் படத் தில் கிரீன்லாந்து தீவு அதன் உண்மையான அளவை விட மிகப் பெரிதாகத் தோற்றமளிக்கிறது. காண்க. கோளக்கோணவியல்; நிலப்படவியல். நூலோதி அ. இளங்கோவன் 1. கோவிந்தராசன், தா., முத்துசாமி, கொ.,வானி தமிழ்நாட்டுப் பாடநூல் யல், சென்னை,1971 நிறுவனம், 2. Gorshkow, G., Yakushova,A., Physical Geology, Mir Publishers, Moscow, 1967. ஆயமுறைகள், படிகவிளக்க ஒரு படிகத்தை முப்பருமான வெளியில் அளவியலாக வரையறுக்கப் பயன்படும் ஆயமுறைகள் படிகவிளக்க ஆயமுறைகள் (crystallographic co-ordinates) எனப் படுகின்றன. இவை படிகக் கட்டமைப்புக்கு ஏற்ப ஆயமுறைகள், படிகவிளக்க 55 உருவாக்கப்படுகின்றன. இவற்றை உருவாக்க, ஒரு படிகத்தைத் தெளிவாகவும் துல்லியமாகவும் விவரிப் பதற்கு ஏற்றதாகவும், எல்லாப்படிகங்களுக்கும் ஒரே வகையான அடிப்படைகளைக் கொண்டு அவ்விவரிப் புகளை உள்ளடக்க இயன்றதாகவும், அமையத்தக்க தொருமுறையான கோட்பாட்டைக்கணிதவியல் அடிப் படையில் உருவாக்க வேண்டும். வடிவக் கணித முறை யில் எந்த ஒரு படிகத்திற்கும் ஒரு மையப் புள்ளி இருந்தாக வேண்டும் என்பதும், அதன் வழியே ஒரு குறிப்பிட்ட சில கோடுகள் ஊடுருவிச் செல்லக்கூடும் என்பதும் அடிப்படை உண்மைகளாகும். இந்த அடிப்படையில் வரையப்படும் கோடுகளே ஒரு படி கத்தின் அச்சுகளாகக் கருதப்படுகின்றன. இல்வச்சு கள் செல்லும் பக்கமும் போக்கும் பெரும்பாலும் குறிப்பிட்டவகைப் படிகத்தின் சமச்சீர்மையைக் கொண்டே தீர்மானிக்கப்படும். ஏனென்றால் படிக விளக்க அச்சுகள் (crystallographic axes) அப்படிகத் தில் காணப்படக்கூடிய சமச்சீர்மைத் தளங்களையே plane of symmetry) பெரிதும் ஒத்துக் காணப்படு கின்றன. மேலும் இப்படிக விளக்க அச்சுக்களின் நீளங்கள் அப்படிகத்தில் அமைந்துள்ள சமச்சீர்மை யைப் பொறுத்தோ அப்படிகங்களில் உள்ள கங்கள் வீற்றிருக்கும் போக்கைப் பொறுத்தோ வரை யறுக்கப்படுகின்றன. எனவே ஒரு படிகத்தைக் கண் பார்வைக்கு நேரெதிராகக் கொணரும்பொழுது அப்படிகத்திற்கு ஒரு குறிப்பிட்ட படிக விளக்க அச்சுகளை அதன் சமச்சீர்மையைப் (symmetry) பொறுத்து உருவாக்கலாம். அப்படிகத்தின் பக்கங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு நீள விகிதத்தைக் கொடுத்து அதன்படி, படிகத்தின் பக்கங்களைக் குறியீடுகளால் குறிப்பிடலாம். பக் உரு எனவே, இவ்வச்சுக்களைத் துல்லியமாக உரு வாக்குவதும் அவற்றின் நீள விகிதங்களைத் துல்லிய மாக அளவிடுவதும் ஒரு படிகத்தைத் தெளிவாகக் குறிப்பிட இன்றியமையாதனவாகும். மேலும் இயற் கையில் காணப்படும் கனிமங்கள், இவ்வாறு வாக்கப்பட்ட கோட்பாட்டு அடிப்படைகளை விளக்க வல்லனவாய் அமைதல் வேண்டும். எனவேதான் படி கங்களை விளக்கப் படிகவிளக்க ஆயமுறைகளில் கணிதவியலாக உருவாக்கப்பட்ட அச்சுக்கள் ஒவ் வொன்றும் ஒரு குறிப்பிட்ட நீளத்தை நிலை வரம்பாகப் (norm) பெற்றிருப்பதாகவும் கொண் டுள்ளார்கள். இவற்றைப் படிக அச்சுகள் (crystal axes) என்று குறிப்பிடுகிறார்கள். அவற்றைப் பார்ப் பவர்க்கு முன்னோக்கியும் வலப்புறம் நோக்கியும் மேற்புறம் நோக்கியும் உள்ள முனைகள் நேர்மறை முனைகள் (+) என்றும் இவற்றின் எதிர்ப்போக்கி லுள்ள முனைகள் எதிர்மறை முனைகள் (-) என் றும் கொள்ளப்படுகின்றன. இவ்வாறு கணிக்கப்பட்ட மூன்று அச்சுகளும்