442 கொண்டலாத்தி
442 கொண்டலாத்தி கொடைக்கானலில் எடுக்கப்படும் வெண்மை ஒளிப்படலங்கள், K - கோட்டுப் படங்கள், H-ஆல்ஃபா படங்கள் பிற நாடுகளிலுள்ள பெரிய வான்ஆய்வு நிலையங்களுக்குப் பரிமாற்றத்திட்டத்தின் கீழ் அனுப் பப்பட்டு அவர்களிடமிருந்து சிறந்த ஆய்வுப் படங்கள் பெறப்பட்டு அனைத்தும் தொகுக்கப்படு கின்றன. இவை மிகச் சிறந்த அரிய தொகுப்பு களாகும். உலகிலேயே கொடைக்கானல், வட அமெரிக்காவில் உள்ள மவுண்ட் வில்சன் ஆய்வு நிலையம், பாரிஸில் மயூடான் ஆய்வுநிலையம் ஆகிய மூன்று இடங்களிலேயே இத்தகைய அரிய படத் தொகுப்புகள் பாதுகாக்கப்படுகின்றன. 1934 ஆம் ஆண்டு மவுண்ட் வில்சன் நிலையத்திலிருந்து நன் கொடையாகப் பெற்ற ஓரலைப் பதிவு நிழற்படக் கருவிமூலம் கொடைக்கானல் நிலையத்தில் சூரியனில் ஏற்படும் திடீர் விரைவு மாற்றங்கள், சுழல் வீச்சுகள் முதலியவை தவறாமல் படம் எடுக்கப்படுகின்றன. கொடைக்கானலில் 1962 இலிருந்து செயல்படத் தொடங்கிய சூரியச் சிகரம் (solar tower) 11 மீட்டர் உயரமுடையது. இதில் கண்ணாடிகள் பொருத்தப் பட்டு அவற்றின் வழியாகச் சூரிய ஒளி 60 மீட்டர் நீளமுள்ள சுரங்கக்குழாயில் செலுத்தப்படுகிறது. சுரங்கக் குழாயில் அமைந்துள்ள வில்லையில் 34 செ.மீ. விட்டமுள்ள சூரிய உருத்தோற்றம் அமைக் கப்பட்டுள்ளது. ஒரு வண்ணப்பட்டை நிழற்படக்கருவி சூரிய ஒளியை வண்ணப்பட்டைச் சிதறல்களாகவும், பிரிவீடுகளாகவும் (resolution) ஆக்குகிறது. சூரிய வண்ணப்பட்டை கறைப்புள்ளிகளிலிருந்து தோன்றும் காந்தப்புலங்கள், திசைவேகப் புலங்கள், சூரியச் சுழற்சி முதலியன எவ்வாறு தோன்றுகின்றன என்றும், சுழல் வீச்சுகள், சுடர்க்கொழுந்துகள் எவ்வாறு காலத்திற்கேற்றவாறு மாறுபடுகின்றன என்றும் அறியலாம். ஆற்றல் வாய்ந்த கருவியாக இருப்பதால், மிகவும் துல்லியமாக ஆராயமுடிகிறது. மேலும் 20 செ.மீ. துளையுடைய ெ தொலை நோக்கி மூலம் வால் விண்மீன்கள், அவ்வப்போது தென்படும் விண்பொருள்கள் முதலியவை பற்றிய ஆய்வுகளும் நடைபெறுகின்றன. 1949இலிருந்து புவியின் காந்தப்புலத்தையும் கணக்கிடுகின்றனர். 1952இலிருந்து வளி மண்டலத்தின் மேல் பகுதிக்கு (ionosphere) Gry Gun அலைகளை அனுப்பி, அப் பகுதியிலிருந்து மீண்டுவரும் அலைகளைப் பற்றியும் ஆராய்கின்றனர். கொண்டலாத்தி பங்கஜம் கணேசன் உப்யூப்பிடே குடும்பத்தைச் சேர்ந்த கொண்டலாத்தி (hoopoe) உருவில் மைனா அளவினது. உப்யூப்பா ஈபோப்ஸ் (Upupa epops) எனப் பறவையியலார் இதனைக் குறிப்படுவர். இளம் மஞ்சள் நிறத்தோற்றம் கொண்ட தன் முதுகு. இறக்கைகள். வால் இவற்றில் வரிக்குதிரையின் கறுப்பு வெள்ளை வரி போன்றிருக்கும். நீண்டு மெலிதாகச் சற்றே கீழ் நோக்கி வளைந்துள்ள இதன் அலகின் அமைப்பைக் கொண்டு சிலர் இதனை மரங்கொத்தி எனத் தவறாக நினைப்பர். கறுப்பும் வெள்ளையுமான முனை களோடு கூடிய தன் கொண்டை, பறக்கும்போதும் மரக்கிளைகளில் சென்று அமரும்போதும் விசிறிபோல் விரிந்து எடுப்பான அழகிய தோற்றத்தைத் தருகிறது. பிற சமயங்களில் இக்கொண்டை பின் தலையோடு படிந்தவாறு மடிந்திருக்கும். ஊர்ப்புறஞ்சார்ந்த வெட்டவெளி. வயல். புன்செய் காடு, மலை சார்ந்த காடு ஆகியவற்றில் காணப்படும் இது, தரையில் தன் நீண்ட அலகினைச் செலுத்தித் துழாவிப் புழு பூச்சிகளை உணவாகக் கொள்ளும். தனித்தோ துணையாகப் பெண் பறவை யைத் தேடிக் கொண்டோ ஒரு வட்டாரத்தைத் தனக்கு உரியதாக ஆக்கிக் கொண்டு வாழ்ந்து வரும் இது பயிருக்குத் தீங்கிழைக்கும் புழு பூச்சிகளை உணவாகக் கொள்வதால் உழவனுக்கு உதவும் பற வைகளுள் ஒன்றாகவும் போற்றப்படுகிறது. ஜனவரி-ஏப்ரல் முடிய உள்ள காலப் பகுதியில் மரங்கள், வீடுகளின் பகுதி, சுவர் ஆகியவற்றில் இயற்கையாக அமைந்துள்ள பொந்துகளில் 5-7 வரை முட்டைகளிட்டு 15-17 நாள் வரை அடை காத்துக் குஞ்சு பொரிக்கும். இடைவிடாது முட்டை களின் மேல் அமர்ந்து அடைகாக்கும் பெண் பறவைகளுக்கு அவ்வப்போது உணவு தேடிக் கொடுத்துக் காப்பாற்றும் பொறுப்பை ஆண் பறவை ஏற்றுக் கொள்கிறது. முட்டையிலிருந்து குஞ்சுகள்