பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

அணிந்துரை

அறிவியல் தமிழுக்கு ஆக்கம் தந்தவர்களில் சிலர், அறிவியல் பார்வை உள்ள அளவிற்குத் தமிழ் சிலராக உள்ள போலி புலமை நெறியாளர்களுக்கும் மணவை முஸ்தபா வுக்கும் வேறுபாடு வேர் பிடிக்கிறது. ஆகவேதான் 'அறி வியல் தமிழின் விடிவெள்ளி' என்று மணவையாரை அழைக்கிறபோது மனம் மயிலாகிறது.

பரிபாயச் சொற்களின் கலைச் சொல்லாக்கத்தில் எளிமை, பரவல், பழக்கம், மொழிச் செழுமை, பயன்பாடு இவற்றை அடித்தளமாகக் கொண்டு மணவையார் ஆற்றி யிருக்கிற பணி எப்படிப்பட்டவரின் விழிப்புருவங்களையும் வில்லாகவே வளைக்கும். திருமிகு ஆர். ராமசாமி அவர்கள் ஆழமாக இப்பணியை அணுகியிருக்கிறார்கள்.

கதை புனைய, கவிதை வடிக்கப் பலர் இருப்பதால் மொழியைச் செழுமைப்படுத்தலைத் தமது முழுநேர வேலையாகக் கொண்டார் மணவையார் என்கிற திருமிகு மீராவின் கட்டுரையில் மூதறிவாளர் மணவையாரை பக்கத் திலிருந்து படம் பிடிப்பதாக அமைந்திருக்கிறது. மணவையாரின் இஸ்லாமியப்பணி பொதுமை நெறியில் புதுமை வளர்க்கும் பெரு நெறி என்பதைத் தக்க சான்றுகளுடன் தந்துள்ளார் டாக்டர் திருமதி. பானு நூர்மைதீன் அவர்கள்.

சிறுவர் இலக்கியத்திற்கு மணவையாரின் பங்குபற்றி எழுதுவதற்கு டாக்டர் பூவண்ணனை விட்டால் பொருத்த மான வேறொருவர் கிடைப்பது அரிது. எட்டாத வானத்தில் கிட்டாத நிலவு. 'விழா தந்த விழிப்பு' என்கிற புத்தகத்தின் வாயிலாக மணவையார் பிஞ்சு நெஞ்சங்களில் வற்புறுத்தி வளர்க்க நினைக்கும் சேமிப்பு உணர்வு செம்மையாய் படிந் திருக்கிறது.

தனிநாயக அடிகளாருக்குப் பிறகு தமிழ்த் தொண்டு ஆற்றுதலில் அவருக்கு நிகர் அவரே என்கிற அளவில் அளப்-