பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

சிறுவர் இலக்கியத்தில் மணவையார் பங்கு


தியாய் நிற்கும் உண்மையை எவ்வளவு அழுத்தமாகக் கூறுகிறது எல்லா எண்களும் நம் கவனத்தில் நிலைக்காவிட்டாலும் 65 கோடி இந்தியர்களில் ஒவ்வொருவரும் நாளுக்கு 3 காசு வீதம் சேர்த்தால், ஓராண்டில் அது 700 கோடி ரூபாயாக பெருகி நிற்கும்" என்பது நம் மனதை விட்டு மறையாது.

மணவையார் இந்த நாவலை முதலில் நாடகமாக எழுதினார். இந்த நாடகம், சென்னை வானொலியின் சிறுவர் நாடக விழாவில் சிறப்பு நாடகமாக ஒலிபரப்பானது. நாடகத்தைப் பார்த்தாலும் சரி, கேட்டாலும் சரி, அதன் பயன், நாவலைப் படிக்கும் பலனைவிட பன்மடங்கு அதிகமாகும்.

மணவையார் இந்த 'விழா தந்த விழிப்பு' நூல் மூலம் சிறுசேமிப்பு உணர்வை, சிக்கனத்தின் உயர்வை சிறுவர் மனத்தில் ஆலம் விதையாக விதைத்துவிட்டார். நாடகத்தைக் கேட்ட நாவலைப் படித்த சிறுவர்கள் இன்று பெரியவர்களாகி இருப்பார்கள். இந்த விதைகள் இன்று அவர்கள் மனதில் விரிந்த நிழல் தரும் விருட்சமாக வளர்ந்து நிலைத்து நின்று அவர்கள் வாழ்வைச் செம்மையாக்கி, செழிப்பாக்கி இருக்கும் என்று உறுதியாய் நம்பலாம்.

திருப்பு முனை

மணவையாரின் 'திருப்பு முனை' என்னும் நாவலும் முதலில் வானொலியில் நாடகமாக ஒலிப்பரப்பப்பட்டது. நாடகத்துக்கு மணவையார் வழங்கிய பெயர் 'எது அறிவு?' இதிலும் இனியன் என்னும் தூயவனையும் கண்ணாயிரம் என்னும் தீயவனையும் பார்க்கிறோம். இருவரும் பள்ளி மாணவர்கள். இனியன் எல்லாப் பரிசுகளையும் பெறுவதைக் கண்டு பொறாமை கொள்கிறான் கண்ணாயிரம்.