பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். பூவணணன்

101


பள்ளியில் 'உழைப்பும் உயர்வும்' என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை போட்டி நடக்கிறது. அதற்கு இனியன் ஒரு கட்டுரை எழுதுகிறான். அதை செம்மையாய் படி எடுக்கிறான். அந்தச் செம்மைப் படியைக் கண்ணாயிரம் திருடி, தன் பெயரில் போட்டியில் சேர்த்து விடுகிறான். செம்மைப் படி காணமல் போகவே, கட்டுரையின் 'ரஃப் காப்பி'யைப் போட்டிக்கு தருகிறான் இனியன். போட்டியில் இனியன் பரிசு பெருகிறான். இனியன் கட்டுரையைத் திருடி தன் கட்டுரையாகத் தந்த கண்ணாயிரம் தண்டனை பெறுகிறான்.

இக்கதை, 'விழா தந்த விழிப்பு'க் கதை போலவே அமைந்திருந்தாலும், இதில் ஆசிரியர் நகைச்சுவை மிளிர மாணவர்களைப் பேச வைத்திருப்பது படிக்கும் சிறுவர்களை கவரும்.

தெளிவு பிறந்தது

மூன்றாவது நாவல் 'தெளிவு பிறந்தது' முன்னிரு நாவல்களைவிட அளவில் சிறியது. (மொத்தம் 32 பக்கம்) ஆனால் சுவையில் சிறந்தது.

இக்கதைக்கும் பொறாமையே மையக் கருத்தாக அமைகிறது. சேகர், முரளி இருவரும் இருவேறு பள்ளியில் படிக்கும் மாணவர்கள். கால்பந்து விளையாட்டில் வீரர்கள். இருவரும் தத்தம் பள்ளியின் கால்பந்தாட்டக் குழுவின் கேப்டன்கள். முரளி குறுக்கு வழியிலும் வெற்றி பெற விரும்புபவன். சேகர் முற்றிலும் நேர்மையானவன்.

ஒரு கால் பந்தாட்டத்தின்போது சேகரின் வெற்றியைத் தடுக்க, அவன் காலில் உதைக்க முயன்ற முரளி, தன் முயற்சியில் தவறி, நிலை குலைந்து கீழே விழ, அதே சமயம் அவன் மீது வேறு இரு விளையாட்டு வீரர்கள் விழ, அடியில் சிக்கிய முரளியின் கால் எலும்பு முறிந்து <span title="போகிறது.">போகி