உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஞானபாரதி வலம்புரிஜான்

3

பரிய தமிழ்ப்பணி ஆற்றி வருகிற அருள்மிகு அமுதன் அடிகளாரின் 'மணவையாரின் சமய நல்லிணக்கப் பணிகள் என்ற கட்டுரை அடிகளாரின் ஆழப்பார்வைக்கு ஓர் அளவு கோலாகவே அமைந்துள்ளது. வரலாற்றுப் பார்வை, வழுக்கல் இல்லாத சமரச உணர்வு, சமயம் வேறு, சமயர்கள் வேறு என்று விலக்கிப் பார்க்கிற அறிவியல் அணுகல் தப்ப றைகளைத் தகர்ப்பதற்காக மணவையாரின் கருத்துப் போர்க் களம் அமைகிற நுணுக்கத் தளங்கள் ஆகியவற்றை அடிகளார் நிரல்பட வழங்கியிருக்கிறார்.

டாக்டர் இராதா செல்லப்பன் அவர்களின் மணவையாரின் கலைச் சொல்லாக்கம் பற்றிய கட்டுரை ஓர் ஆழமான நதியைப்போலவே அசைகிறது. எதிலும் நுண்மாண் நுழை புல உள்ளத்தோடு அணுகிப் பார்ப்பதை அடிப்படையாகக் கொண்டுள்ளார் அம்மையார் அவர்கள். Phobia என்கிற சொல்லுக்கு அச்சம், வெறுப்பு என்கிற சொற்களுக்குப் பதி லாக 'மருட்சி' என்கிற பொருத்தமான சொல்லைப் பெய்துள்ள மணவையாரின் மகத்தான பணிக்கு பதச்சோறு ஒன்றினைப் படைத்துள்ளார்கள்.

அறிவியல் புனைகதைகளை எழுதுவோர் துரோணர்களைத் துணைக்கு அழைக்காது, தம் வழியில் தாம் சென்று புதிய களங்களைப் புதுக்க வேண்டும் என்கிறார் மண வையார். இத்தகைய வழிகாட்டுதலுக்கு அவர் வாழ்க்கையே வரலாற்றுச் சான்றாகிறது என்பதை திருமிகு ராம்குமார் அவர்கள் சொல்லாமல் சொல்லுகிற இடம் நேர்த்தியாய் இருக்கிறது.

'துறை தோறும் துடித்தெழுந்து தமிழுக்குத் தொண்டு செய்வாய்" என்கிற பாவேந்தரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப மணவையார் வியர்வையால் எழுதிய விதியாக பல்வேறு கலைக் களஞ்சியங்கள் வெளிவந்துள்ளன. திருமிகு