பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

சிறுவர் இலக்கியத்தில் மணவையார் பங்கு


றது. சேகர் மருத்துவ மனைக்குச் சென்று, வெகு நேரம் காத்திருந்து முரளியைப் பார்க்கிறான். "சேகருக்கு எந்த விபத்தை உண்டாக்க நினைத்தேனோ, அதே விபத்து எனக்கு உண்டாகி விட்டதே" என்று வருந்திய முரளி, தன் தவற்றுக்காக சேகரிடம் மன்னிப்புக் கோருகிறான்.

நினைக்கும் கெடுதி தனக்கே' என்னும் நீதியை இக்கதை மிகச் சுவையாகச் சொல்கிறது. கதையில் வரும் முரளியின் மாமா இதே கருத்து விளக்கும் இருவேறு கதைகளை கூறுகிறார். மூலக் கதை ஒன்றும், முரளியின் மாமா சொல்லும் கதைகள் இரண்டும் சேர்ந்து இந்த நாவலில் 'திரி இன் ஒன்'னாகத் திகழ்கிறது.

சிறுவர்க்குச் சுதந்திரம்

நான்காவது நாவல் 'சிறுவர்க்குச் சுதந்திரம்' இந்நூலை நான் நாவல் என்று வகைப்படுத்தினாலும், ஆசிரியர் மணவையார் இதை 'சிறுவர்க்கான சிந்தனை நூல்' என்று குறிப்பிடுகிறார்.

பள்ளியில் சுதந்திரநாள் விழா. அதில் முக்கிய நிகழ்ச்சி கொடியேற்றம். இந்த விழாவுக்குச் செல்ல கோமதியும், அவள் தம்பி ரகுவும் தயாராகின்றனர். ஆனால், மற்றொரு தம்பியாகிய மணி குளிக்காமல் கொள்ளாமல் விளையாடிக் கொண்டிருக்கிறான். 'சுதந்திர நாளில் பள்ளிக்குச் செல்லாமல் தன் விருப்பம் போல இருக்க விட வேண்டும். அதுதான் சுதந்திரம்' என்கிறான் மணி. அப்போது அங்கே அவர்கள் மாமா வருகிறார். அவர் சுதந்திரம் என்பது என்ன, அந்த நாளில் தேசிய கொடியை ஏற்றி வணக்கம் செய்வதன் பொருள் என்ன என்பதைச் சுவையான உரையாடல் மூலம் விளக்குகிறார். தன் சுதந்திரத்ததைக் காக்க பிறர் சுதந்தி