பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106






மணவையாரின் சமய
நல்லிணக்கப் பணிகள்

டாக்டர். அமுதன் அடிகள்


சமய மோதலா? சமயத்தவர் மோதலா?

சைவமும் சமணமும் பெளத்தமும் வைணவமும் இந்நாட்டில் தோன்றிய சமயங்கள், இஸ்லாமும் கிறிஸ்தவமும் இந்நாட்டில் வந்து குடியேறிய சமயங்கள். இத்தனைச் சமயங்களுக்கிடையில் உடன்வாழ்வும் உடனிருத்தலும் இன்றியமையாதவை என்பதை இந்நாட்டு வரலாறு உணர்த்துகின்றது.

சங்க காலத்தில் சைவமும் சமணமும் ஒன்றுடனொன்று ஒத்து வாழ்ந்த நிலைமாறி, பக்தி இயக்கக் காலத்தில் இரண்டும் ஒன்றுடனொன்று மோதி வன்மு றையில் ஈடுபட்டதாக வரலாறு கூறுகின்றது. சமயங்கள் ஒன்றுடனொன்று மோதியதாகக் கூறுவது சரியல்ல. சமயங்களைச் சார்ந்த சிலர் தங்களுக்குள் மோதிக் கொண்டனர் என்பதே உண்மை. ஏனெனில் எல்லாச் சமயங்களுமே அன்பையும் ஒற்றுமையையும் போதிப்பனவாக இருக்கும்போது அவை ஒன்றுடனொன்று மோதிக் கொள்வது சாத்தியமே அல்ல. சமயங்களைச் சார்ந்த சிலர், சமயம் சாராத சில காரணங்களுக்காக ஒருவரோடொருவர் மோதிக் கொண்டவர் என்பதுதான் உண்மை.