பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

மணவையாரின சமய நலலிணககப பணிகள


குன்றக்குடி அடிகளார். இதே நோக்கத்துடன் வேறு சில அமைப்புகளும் தோன்றிப் பணியாற்றி வருகின்றன.

இத்தகைய அமைப்புகளைச் சாராமல் தமது எழுத்தாலும் பேச்சாலும் சமய நல்லிணக்கத்துக்காகப் பணிபுரிந்து வருவோருள் அறிஞர் மணவை முஸ்தபா குறிப்பிடத்தகுந்தவர். அவரது சமய நல்லிணக்கப் பணிகளைத் தொகுத்துக் கூறுவதாக இக்கட்டுரை அமைகிறது.

இளமை முதல் சமய நல்லிணக்கப் பணி

கல்விப் பருவத்திலேயே மணவையாரின் சமய நல்லிணக்கப் பணி தொடங்கிவிட்டதெனலாம். பள்ளியிறுதி வகுப்பு மாணவராக இருந்தபோதே, சமய சமரச மேதையாகிய தமிழ்த்தென்றல் திரு.வி.க.வைப்பற்றி மணப்பாறை சன்மார்க்க சங்க சபையில் சொற்பொழிவாற்றிப் பலரின் பாராட்டையும் பெற்ற சிறப்பு அவர்க்கு உண்டு. பின் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவராக இருந்தபோது நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாவைப் பல்கலைக்கழக மன்றத்தின் சார்பில் அனைத்துச் சமயங்களையும் சார்ந்த மாணவர்களும் இணைந்து மாபெரும் விழாவாகக் கொண்டாட ஏற்பாடு செய்த பெருமை அவருக்கு உண்டு. நபிகள் நாயகம் முஸ்லிம்களுக்காக மட்டும் வந்த இறைத் தூதர் அல்லர்; அவர் மனித குலம் முழுமைக்கும் வழிகாட்ட வந்த இறுதி இறைத்தூதர் என்பதை உறுதியாக நம்பும் மண வையார், நாயகத்தின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாட எல்லாச் சமயத்தார்க்கும் உரிமை உண்டு என்பதைச் செயல் படுத்திக்காட்டிய நிகழ்ச்சி அது. அவ்விழாவில் உரையாற்றியவர்களுள் ஓரிருவரைத் தவிர பிற பேச்சாளர்களெல்லாம் மற்றச் சமயங்களைச் சார்ந்தவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.